Published:Updated:

``அந்த நிமிஷம் மொத்தக் குடும்பமும் உடைஞ்சுட்டோம்!'' - கலங்கும் பிரியதர்ஷினி

``அந்த நிமிஷம் மொத்தக் குடும்பமும் உடைஞ்சுட்டோம்!'' - கலங்கும் பிரியதர்ஷினி
``அந்த நிமிஷம் மொத்தக் குடும்பமும் உடைஞ்சுட்டோம்!'' - கலங்கும் பிரியதர்ஷினி

"ஏதோ ஒரு ப்ரோகிராம் பண்றோம். பாராட்டுங்கிற பேருல ஒரு ஷீல்டைக் கொடுத்துட்டு முடிச்சிடாம அப்படி ஒரு விஷயத்தைப் பண்ணினவங்களை நிச்சயமாப் பாராட்டணும்."

``அந்த நிமிஷம் உண்மையிலேயே என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமா அமைஞ்சது. பொதுவாவே நான் கொஞ்சம் போல்டா இருப்பேன். ஆனா, அன்னிக்கு என்னால எனக்குள்ள ஏற்பட்ட அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முடியலை. நான் ரொம்பவே மெல்ட் ஆகிட்டேன். நிச்சயமா அது ஒரு பொன்னான தருணம்னு என்னால உறுதியாச் சொல்ல முடியும்.”

"`டிடி 20' நிகழ்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று இந்த ஒரு கேள்வியைத்தான் டிடி யின் சகோதரி பிரியதர்ஷியினிடம் கேட்டோம். அதற்கு உணர்வுபூர்வமாக இப்படியொரு பதிலைத் தந்தவர் தொடர்ந்து தனது சகோதரி டிடி பற்றி மனம் திறக்கிறார். 

``அது டிடி க்காக நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சின்னு சொல்கிறதை விட என் தங்கைக்காக நடத்தப்பட்ட விழான்னுதான் சொல்வேன். டிடி இயல்பாவே நல்ல திறமையான பொண்ணு. அவகிட்ட நிறைய டேலன்ட் இருக்கு. நான் அவளுக்கு அக்காதான் என்றாலும் இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலேயும் அவளுக்கு என்னோட உதவி தேவைப்பட்டதில்ல. அதற்கான அவசியமும் இருந்ததில்ல. நான்தான் எனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைனா அவளை கான்டாக் பண்ணுவேன். மத்தபடி ஏதாவது ஒண்ணுன்னா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிப்போம். அதுமட்டுமல்லாம, எங்க வீட்டைப் பொறுத்தவரை நாங்க யாரும் எதுக்காகவும் உருக்கமாப் பேசிக்கிறது, ஃபீல் பண்றதெல்லாம் கிடையாது. ஆனா, அன்னிக்கு டிடி க்காக நடந்த அந்த நிகழ்ச்சியில பரிசு தர்றோம்னு சொல்லி எங்க ஃபேமிலி போட்டோவைக் கொடுத்தாங்க. அந்த நிமிஷம் நாங்க எல்லாருமே உடைஞ்சுப் போயி அழுதுட்டோம். காரணம், அந்தப் படத்துல இருந்த எங்க அப்பாதான். 

வீட்டுல நான் மூத்த பொண்ணுங்கிறதுனால எல்லா விஷயத்துலயும் கரெக்ட்டா நடந்துப்பேன். அப்பா, அம்மாகிட்ட என்னைவிட தம்பியும் தங்கச்சியும்தான் ரொம்ப க்ளோஸா இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரும்தான் எங்க வீட்டோட பெட். ஆனா, அப்பாவுக்கு மூணு பிள்ளைகளும் ஒண்ணுதான். எல்லார்கிட்டயும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க. இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் சின்னப் பிள்ளைங்கங்கிறதுனால கொஞ்சம் கூடுதலா பாசம் வெச்சிருப்பாங்க. அதோட, எனக்குக் கல்யாணம் ஆன பிறகுதான் அப்பா இறந்தாங்க. அப்போ டிடி சின்னப் பொண்ணு. அதனால, அப்பாவோட இழப்பு அவளை ரொம்பவே பாதிச்சிருக்கும். 

எந்த இடத்துல இருந்தாலும் எவ்வளவு உயரமான பதவியில இருந்தாலும் நாங்க அப்பாவை நினைக்காத நாளே இல்ல. அன்னிக்கு நிகழ்ச்சியில திடீர்ணு பரிசுன்னு சொல்லி அப்பா, அம்மா, நான், தங்கச்சி, தம்பின்னு எல்லாரும் ஒண்ணா இருக்கிற மாதிரி ஒரு ஓவியத்தை வரைஞ்சு கொடுத்திருந்தாங்க. அந்த ஓவியம் நாங்க யாருமே எதிர்பாக்காத ஒண்ணு. அப்பா இப்போ எங்ககூட இருந்திருந்தா எப்படி இருந்திருக்குமோ அப்படிக் கற்பனை பண்ணி வரைஞ்சிருந்தாங்க. அந்த நிமிஷம் அப்பாவே அங்க வந்த மாதிரி இருந்துச்சு. எங்க யாராலயும் யோசிச்சுப் பாக்க முடியாத ஓவியம் அது. அம்மா, நான், டிடின்னு எல்லாரும் ரொம்பவே அழுதுட்டோம். அப்பாவோட படத்தை மட்டும் தனியா வரைஞ்சு கொடுத்திருந்தாகூட அந்த அளவுக்கு உணர்வுபூர்வமா இருந்திருக்காது. ஏதோ ஒரு ப்ரோகிராம் பண்றோம். பாராட்டுங்கிற பேருல ஒரு ஷீல்டைக் கொடுத்துட்டு முடிச்சிடாம அப்படி ஒரு விஷயத்தைப் பண்ணினவங்களை நிச்சயமாப் பாராட்டணும். அதோட, அப்படி யோசிச்சவங்களுக்கும் வரைந்த ஓவியருக்கும் என்னோட பாராட்டுகளை தெரிவிச்சுக்குறேன்” என்றவர் இறுதியாக, 

"டிடி க்கு நிறைய பேர் விஷ் பண்றாங்க. ஒரு அக்காவா அவளை நினைச்சு நான் எப்போதும் பெருமைப்படுறேன். அவளோட வளர்ச்சியைப் பார்த்து எனக்குச் சந்தோஷமாகவும் பூரிப்பாகவும் இருக்கு” என்றவரின் குரலில் பாசத்தின் வெளிப்பாடு. 

அடுத்த கட்டுரைக்கு