Published:Updated:

`சின்னத்திரைக்கு ஓய்வு; படங்களில் தீவிரம் காட்டி வருகிறேன்!’ - வாணிபோஜன்

``நான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தத் துறையே மாடலிங்தான். அதுல இருந்துதான், சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. மாடலிங் செய்தபோதே எனக்குச் சினிமா வாய்ப்புகள் வந்துட்டுதான் இருந்துச்சு. ஆனால், சினிமா மீதான ஒரு பயம் எனக்கும் சரி, என் வீட்டாருக்கும் சரி இருந்தது. அதனால் எந்தப் பதிலும் சொல்லாமல் கொஞ்ச காலம் தள்ளிப்போட்டேன். ஆனால், தெய்வமகள் சீரியலுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிலும் என்னை அவங்க வீட்டுப் பெண்ணா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க’’ என்கிறார் வாணி போஜன். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

`சின்னத்திரைக்கு ஓய்வு; படங்களில் தீவிரம் காட்டி வருகிறேன்!’ - வாணிபோஜன்

மேலும், ``இன்னும் மக்கள் மத்தியில் நெருக்கமாகிட்டேன். இப்போது எனக்கே சினிமா பற்றியத் தெளிவு கிடைச்சிருக்கு. தெய்வமகள் சீரியல் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக்கைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விறுவிறுவென சீரியல் முடிந்ததே தெரியவில்லை. அடுத்தடுத்து, விஜய் டிவியிலும் குட்டீஸ் புரோகிராமுக்கு ஜட்ஜாக உட்கார்ந்தேன். மகேஷ், ரோபோ சங்கர் என அந்த நிகழ்ச்சி செம்மையாப் போச்சு. அதற்கு முன்பு ஜி தமிழில் `லட்சுமி வந்தாச்சு’ சீரியலும் ஹிட் கொடுத்தது. 

`சின்னத்திரைக்கு ஓய்வு; படங்களில் தீவிரம் காட்டி வருகிறேன்!’ - வாணிபோஜன்

இப்படி எல்லா சேனலிலும் ஒரு ரவுண்டு வந்துட்டேன். இனி கொஞ்ச காலத்துக்கு நான் டெலிவிஷனுக்கு பிரேக் கொடுக்கலாம்னு இருக்கிறேன் என்கிறார் மஞ்சக் காட்டு மைனா வாணி போஜன். சன் டி.வியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலின் சூப்ப டூப்பர் ஹிட்டை அடுத்து, ஜி தமிழில் 'லட்சுமி வந்தாயிற்று' சீரியலில் நடித்து, விஜய் டி.வி 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்' நிகழ்ச்சியில் நடுவர் என எல்லாச் சேனல்களிலும் ஒரு டி.விக்கான முகமாக இருந்துவிட்டேன். இனி கொஞ்ச நாள்களுக்கு சின்னதிரைக்கு ஓய்வு கொடுப்போம் என முடிவெடுத்து, தற்போது படங்களில் நடிக்கத் தீவிரம் காட்டி வருகிறேன்’’ என்றார் வாணி.

சின்னத்திரை நயன்தாரா எனத் தொகுப்பாளினி பிரியங்காவால் பெயர் சூட்டப்பட்டவர். தற்போது வெள்ளித்திரையிலும் கால் பாதிக்கப்போகிறார். வாழ்த்துகள் வாணி!