Election bannerElection banner
Published:Updated:

ரீ என்ட்ரி கொடுக்கும் `லொள்ளு சபா’ நிகழ்ச்சி... முதல் ஸ்பூஃப் இதுதான் !

சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிகழ்ச்சி `லொள்ளு சபா.’ சந்தானம், சுவாமிநாதன், மனோகர், மதுமிதா என இதில் அறிமுகமான பலர் வெள்ளித்திரையில் தங்களுக்கான முத்திரை பதித்து கலக்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராம் பாலாவும் சினிமா இயக்குநராகிவிட்டார். அதனால், அந்த நிகழ்ச்சி சில காலம் வராமலே இருந்தது.

குறிப்பாக, 90ஸ் கிட்ஸ் மிஸ் செய்யும் டிவி நிகழ்ச்சிகளின் பட்டியலில் `லொள்ளுசபா’ நிச்சயம் இருக்கும். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீஸனை தொடங்கயிருக்கிறார்கள். இதை `கலக்கப்போவது யாரு’, `அது இது எது’, `ராமர் வீடு’ உள்ளிட்ட ஷோக்களின் இயக்குநர் தாம்ஸன் இயக்க இருக்கிறார். இதன் ஹீரோவாக அமுதவாணனும் ஹீரோயினாக மைனா நந்தினியும் நடிக்க உள்ளனர். மார்ச் மாதம் இதற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இவர்கள் முதலில் ஸ்பூஃப் செய்ய இருக்கும் படம்  `விஸ்வாசம்’தானாம். 

`லொள்ளுசபா’ ரசிகர்களே கெட் ரெடி !

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு