Published:Updated:

`மரணம் ஊருக்குள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கடைசி சீஸன் டிரெய்லர்!

`மரணம் ஊருக்குள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கடைசி சீஸன் டிரெய்லர்!
`மரணம் ஊருக்குள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கடைசி சீஸன் டிரெய்லர்!

``நம்முடைய எதிரி சோர்வடைய மாட்டான். யுத்தத்தை எப்போதும் நிறுத்த மாட்டான். அவனுக்கு உணர்வுகள் கிடையாது!" கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் முக்கியக் கதாபாத்திரமான ஜான் ஸ்நோ பேசும் இந்த வசனத்துடன், மேலும் பல சுவாரஸ்யக் காட்சிகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீஸனின் டிரெய்லர்.

`மரணம் ஊருக்குள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கடைசி சீஸன் டிரெய்லர்!

HBO தொலைக்காட்சி நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2011-ம் வருடம் முதல் வெளியாகி வரும் டிவி தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். வருடத்துக்கு 10 எபிசோடுகள் (7-வது சீஸன் மட்டும் 7 எபிசோடுகள்) என வெளியாகி மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உலகம் முழுக்க சம்பாதித்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் வெளியாகவிருக்கும் 6 எபிசோடுகள் கொண்ட 8-வது சீஸனுடன் தொடர் முடியவிருக்கிறது. இதனாலே இந்த சீஸனுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

`மரணம் ஊருக்குள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கடைசி சீஸன் டிரெய்லர்!

இதுவரை படங்கள், சில டீஸர்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது 2 நிமிடங்கள் ஓடக்கூடிய டிரெய்லர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது HBO. முக்கியக் கதாபாத்திரங்களான ஆர்யா ஸ்டார்க், சான்சா ஸ்டார்க், ஜான் ஸ்நோ, ப்ரான் ஸ்டார்க், கலீஸி, ஜெய்மி லேனிஸ்டர், செர்ஸி லேனிஸ்டர் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தோன்றும் டிரெய்லரில் டிராகன்களும் தலைகாட்டுகின்றன. எதிரியான வொயிட் வாக்கர் தன் குதிரையுடன் யுத்தக் களத்தில் கால் வைக்கும் அந்த நொடியுடன் முடிகிறது இந்தப் பரபர டிரெய்லர். இந்த சீஸனில் மொத்தம் 6 எபிசோடுகள் மட்டுமேதான் என்றாலும் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமானதாக இருக்கும் என்பது ஆறுதலான விஷயம்.

வரும் ஏப்ரல் 14 முதல் ஒளிபரப்பாகவிருக்கும் இந்தத் தொடரை இந்தியாவில் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

டிரெய்லரைக் காண...