Published:Updated:

`எஸ்.ஐ. மனோஜை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதே பாலாஜிதான்!' - நித்யா பாலாஜி

`எஸ்.ஐ. மனோஜை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதே பாலாஜிதான்!' - நித்யா பாலாஜி
`எஸ்.ஐ. மனோஜை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதே பாலாஜிதான்!' - நித்யா பாலாஜி

நடிகர் `தாடி’ பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையிலான பிரச்னை முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாலாஜி, `என் குடும்பத்தில் அத்தனை பிரச்னைக்கும் காரணம் காவல்துறை அதிகாரி மனோஜ்தான்; மனோஜுடன் நித்யா பேசாமல் இருந்தாலே எல்லாம் சரியாகி விடும்’ எனக் கூறியிருந்தார். `யார் இந்த மனோஜ்’ என விசாரித்துப் பேச முயன்றோம். அவர் மீடியாவில் இது குறித்துப் பேச விரும்பவில்லை எனத் தெரிய வந்ததும், நித்யாவிடமே பேசினோம்.


‘மனோஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே பாலாஜிதான். அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள். ஃபேமிலி ஃப்ரெண்டா எங்களுக்கு அறிமுகமானார். எனக்கும் பாலாஜிக்கும் பிரச்னை வந்ததும், ரெண்டு பேர்கிட்டயுமே பேசி விவகாரம் வெளியில வராம தீர்வு காணலாம்னுதான் அவர் முயற்சி செய்தார். அப்படி உதவி பண்ண வந்தவரை என்னுடன் இணைத்துப் பேசி கொச்சைப்படுத்த பாலாஜியால எப்படி முடியுதுன்னு தெரியலை.


 

சரி, எங்களுக்கிடையில பிரச்னை வந்தது. போலீஸ், கோர்ட்னு போனோம். இது எல்லாத்துக்கும் பிறகே ரெண்டு பேரும் `பிக் பாஸ்’  2 ஷோவுக்கு வந்தோம். `பிக் பாஸ்’ வீட்டுக்குள் நான் இருந்தப்ப, அவசரத்துக்குக் கூப்பிட மனோஜ் நம்பரைத்தான் சேனல்கிட்ட தந்திருந்தேன். இது கமல்ஹாசன் சார், பாலாஜி எல்லாருக்குமே தெரியும். இவ்வளவு ஏன், `பிக் பாஸ்’ ஷோவுல இருந்து அவர் வெளியேறி வந்த அன்னைக்கு அந்த நடு ராத்திரியில அவரை வரவேற்க பொக்கே வாங்கிட்டு எங்கூட மனோஜும்தான் வந்தார். அன்னைக்கெல்லாம் மனோஜ் தப்பானவரா தெரியலையே. பாலாஜி தொடர்ந்து என்னை இப்படி அவதூறாப் பேசறதுக்குக் காரணம், எனக்குத் தெரிஞ்சு ஒண்ணுதான், சட்டபூர்வமா இந்தப் பிரச்னையை அணுக அவரால முடியலை. அதனாலதான் இப்படி மீடியா மூலமா வாய்க்கு வந்ததைப் பேசிட்டிருக்கார். எல்லாத்துக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லும்’ என முடித்துக்கொண்டார் நித்யா