Published:Updated:

அஸ்ட்ராலஜி படிச்சி முடிச்சதும் முதல்ல ரஜினி ஜாதகம் பார்க்கணும்!- பூரிக்கும் பாவனா

ஜோதிடம் படிக்கிறார் தொகுப்பாளினி பாவனா

அஸ்ட்ராலஜி படிச்சி முடிச்சதும் முதல்ல ரஜினி ஜாதகம் பார்க்கணும்!- பூரிக்கும் பாவனா
அஸ்ட்ராலஜி படிச்சி முடிச்சதும் முதல்ல ரஜினி ஜாதகம் பார்க்கணும்!- பூரிக்கும் பாவனா

`இப்போதெல்லாம் தமிழ் தொலைக்காட்சி ஏரியாவில் அதிகமாகப் பார்க்க முடியவில்லையே’ -ஆங்கர் பாவனாவை லைனில் பிடித்துக் கேட்டேன். ‘ஞாபகம் வச்சுக் கேட்டதுக்குத் தேங்க்ஸ்’ என்றபடியே பேசத் தொடங்கினார்.


என்டெர்டெய்ன்மென்ட் ஏரியா மட்டுமே வருமா என்ன’னு எனக்கு நானே கேட்டுதான் ஸ்போர்ட்ஸ் பக்கம் போனேன். ’ப்ரோ கபடி’, கிரிக்கெட்டை ஹோஸ்ட் செய்து, ஓரளவுக்குப் பெயரும் வாங்கிட்டிருந்தபோதே, `மாஷ்-அப் சாங்’ வெளியிடுற ஆர்வம் வந்து அதையும் பண்ணினேன். முதல் வீடியோ `பார்த்த ஞாபகம் இல்லையோ’வுக்கு அவ்வளவு ஒரு ரெஸ்பான்ஸ். அதனால தொடர்ந்து அந்தப் பக்கமும் கவனம் செலுத்திட்டிருக்கேன். இதுக்கிடையில, ஒரு பத்திரிகைக்காக செலிபிரிட்டிகளோட சின்னதா ஒரு அரட்டை அடிக்கிற இன்னொரு வேலையும் புதுசா இப்ப கிடைச்சிருக்கு. மாதவன், அரவிந்த் சாமி, தமன்னான்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் சாட்டிங் ஜாலியா போயிட்டிருக்கு.

இப்படி கேரியர் பிசியாவே போயிட்டிருந்தாலும், எனக்குன்னு சில தனிப்பட்ட தேடல்களும் நின்னபாடில்லை. அந்த முயற்சியையும் விடற மாதிரி இல்லை. ஒரு உதாரணம் சொல்லணும்னா, இப்ப நான் தீவிரமா ஜோதிடம் படிச்சிட்டிருக்கேன். சீக்கிரத்துலயே அந்தப் படிப்பு முடிஞ்சிடும். இதுவரைக்கும் படிச்ச அனுபவத்துல சொல்றேன், இந்தப் படிப்பு  ரொம்ப கஷ்டம் சார். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் படிக்கிறேன். நிறைய கால்குலேஷன் இருக்கு. சிம்பிளா சொல்லணும்னா, ஆங்கரிங் போல கிடையாது அஸ்ட்ராலஜி. இதைப் படிக்கறதுக்கே ஒரு தெய்வீக அருள் வேணும்கிறது என்னோட தனிப்பட்ட கருத்து’ என்றவரிடம், ’முடிச்சதும் முதல் ஆளா யாருடைய ஜாகதத்தை அலச விருப்பம்’ என்றோம்.

பட்டென பதில் வருகிறது.. ‘ரஜினி சார் ஜாதகம்தான். அசெம்ப்ளி எலக்‌ஷன்தான் இலக்கு’ன்னு அவரும் சொல்லியிருக்கார் இல்லையா, அவர் சி.எம்.சீட்ல உட்கார்வாராங்கிறதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கலாம்ல’ எனச் சிரிக்கிறார்.