Published:Updated:

` நீ பாடவே பாடத’ன்னு சொன்னாங்க!' - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

அய்யனார் ராஜன்
` நீ பாடவே பாடத’ன்னு சொன்னாங்க!' - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
` நீ பாடவே பாடத’ன்னு சொன்னாங்க!' - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்பைத் தொடங்கி ஒராண்டை நிறைவு செய்துள்ளது. இதை நினைவுகூரும் விதமாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தொகுப்பாளர்கள் ’மிர்ச்சி’ விஜய், கீர்த்தி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்கள், ரியாலிட்டி ஷோ குறித்து அறிவித்தனர்.

அவற்றில், முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடுவராகப் பொறுப்பேற்கும் `சிங்கிங் ஸ்டார்ஸ்’ முக்கியமான ஒன்று.
`மியூசிக் ரியாலிட்டி ஷோக்கள் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகிற சூழலில், `சிங்கிங் ஸ்டார்ஸ்’ ஸ்பெஷலாக என்ன தரப்போகிறது’ என சந்தோஷ் நாராயணனிடமே கேட்டோம்.


 

``திறமை எங்க வேணாலும் இருக்கலாம். அதைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த எல்லைக்கு மெனக்கெடணுமோ அந்தளவுக்கு இந்த ஷோவுக்காக நாங்க உழைச்சிருக்கோம். எத்தனையோ பேருக்கு திறமை இருந்து, அதை வெளிப்படுத்த வாய்ப்பு அமையாமலே போயிருக்கும். என்னை எடுத்துக்கோங்க, காலேஜ்ல பாடிய ஒரு நாள்ல ‘நீ பாடவே பாடத’ங்கிற மாதிரியான விமர்சனத்தைக் காது கொடுத்திருக்கேன். ஆனா அந்த ஒரு தருணம் கடந்து என்னை நிரூபிக்க ஒரு மேடை கிடைச்சது இல்லையா? அதனால மூலை முடுக்குல இருக்கிற திறமையாளர்களைக் கூட `மிஸ் பண்ணக் கூடாது’ன்னு தேடிக் கூட்டிட்டு வந்திருக்கோம். அதேபோல வழக்கமான மியூசிக் ரியாலிட்டி ஷோ மாதிரி இல்லாம இது வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும். ஒளிபரப்பு தொடங்கியதுமே அந்த வித்தியாசத்தை நீங்க உணர்வீங்க’ என்றார்.

`சிங்கிங் ஸ்டார்ஸ்’ வரும் சனிக்கிழமை (16.3.19) முதல் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8 மணிக்கு   ஒளிபரப்பாக உள்ளது. பிரபல பாடகர்கள் தி.அனந்து மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோரும் நடுவர் குழு உறுப்பினர்களாக சந்தோஷ் நாராயணனுடன் பங்கேற்கிறார்கள்.