Published:Updated:

``இப்படி நடக்கும்னு அப்பவே சொன்னோம்! ’- பொள்ளாச்சி சம்பவம் குறித்து `அழகு’ சஹானா

முன் பின் தெரியாத பெண்களை முகநூலில் அழைத்து, அழைப்பை ஏற்றுக்கொண்டவர்களிடம் கனிவாகப் பேசி நேரில் சந்திக்க அழைத்து, நாளடைவில் தங்களது நிஜ நோக்கத்தை அரங்கேற்றிய பொள்ளாச்சி கும்பல் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்கிற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் அதே சோஷியல் மீடியாவில் `அவளதிகாரம்’ என்றொரு குறும்படமும் கடந்த சில தினங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. `ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தேன்ல, அக்செப்ட் பண்ண மாட்டியா?' என ஒரு மாணவியிடம் வம்பிழுக்கிறான் ஓர் இளைஞன் (அந்த கேரக்டரின் பெயர் கூட சதீஷ்தான்) பிறகு அவனுடைய நண்பர்கள் சிலர் சேர, அந்த மாணவியை மிரட்டி வீடியோ எடுத்து, பின்னாடி யூஸ் ஆகும்’ என்கிறார்கள். பயந்து போன மாணவி பள்ளிக்குச் செல்ல மறுக்க, அந்த மாணவியின் சகோதரி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்கிறார்.

மாணவியாக `அழகு’ சீரியல் சஹானாவும் அவரது அக்காவாக `பூவே பூச்சூடவா’ கிருத்திகாவும் நடித்திருக்கிறார்கள். `பொள்ளாச்சி சம்பவம்’ தமிழ்நாடு முழுக்க தகிப்பை உண்டாக்கி வரும் சூழலில் இந்த வீடியோ குறித்து இருவரிடமும் பேசினோம். ``பெண்கள் சோஷியல் மீடியா மூலம் சந்திக்கிற பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வுக்காக எடுத்தோம். நண்பர்கள் சிலருக்காக அதில் நான் நடிச்சேன். இந்த நேரத்துல வைரல் ஆகியிருக்கு. `பொள்ளாச்சி சம்பவம்’ வெளியில் தெரிஞ்சிடுச்சு. இந்த நிமிஷத்துல கூட வெளியில தெரியாம எத்தனை பெண்கள் எத்தனை அயோக்கியர்கள்கிட்ட மாட்டித் தவிச்சிட்டிருக்காங்களோ தெரியல. சோஷியல் மீடியா மூலமா இப்படியொரு ஆபத்து இருக்குதுன்னுதான் நாங்க அன்னைக்கே இப்படியொரு குறும்படத்துல நடிச்சோம். இந்த மாதிரி ஆபத்துகள்ல சிக்காம இருக்கணும்னா, கொஞ்சம் புத்தி, கொஞ்சம் தைரியம் இந்த ரெண்டும் ஒவ்வொரு பொண்ணுக்கும் அவசியம்’ என்கிறார் சஹானா. அக்காவாக நடித்திருந்த கிருத்திகாவிடம் பேசிய போது, பள்ளிகள்ல இருந்தே பெண்களுக்கு ஏதோவொரு தற்காப்புக் கலையைக் கட்டாயமாக்கறதும் நல்லதொரு பலனைத் தரலாம்’ என்கிறார்.