Published:Updated:

``ஆமாம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல்ல இருந்து வெளியேறிட்டேன்'' - `இனியன்’ வசந்த்

அய்யனார் ராஜன்
``ஆமாம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல்ல இருந்து வெளியேறிட்டேன்'' - `இனியன்’ வசந்த்
``ஆமாம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல்ல இருந்து வெளியேறிட்டேன்'' - `இனியன்’ வசந்த்

ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிற தொடர் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. குண்டாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்னையைப் பேசிய இந்தத் தொடருக்கு `செம்பருத்தி’ தொடர் போன்றே சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. ’நிஜமாகவே  குண்டாக இருக்கும் கதாநாயகி இருந்தால் நன்றாக இருக்கும்’ என மாதக் கணக்கில் அலைந்து திரிந்து பெங்களூருவைச் சேர்ந்த அஸ்வினியைக் கூட்டி வந்து நடிக்க வைத்தார்கள்.

அஸ்வினிக்கு ஜோடியாக ‘இனியன்’ என்கிற கேரக்டரில் நடித்து வந்தார் வசந்த். இந்த நிலையில், `வசந்த் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டார்’ என ஒரு தகவல் பரவியது. இந்தத் தகவலை உறுதிப்படுத்த வசந்திடமே பேசினோம். ``ஆமாங்க, நிஜம்தான். ‘ஊர்ல ஒரு ராஜகுமாரி’யில இருந்து நான் வெளியேறிட்டேன். ரேட்டிங் நல்லா கிடைச்ச சீரியல்தான். ஆனாலும் நானே விரும்பித்தான் வெளியேறினேன். சில பல பெர்சனல் பிரச்னைகள். அது குறித்து பேச விரும்பல.

அதேநேரம் இன்னொரு முன்னணி சேனல்ல இருந்து ஒரு சீரியலுக்கான அழைப்பும் வந்திருக்கு. அந்தத் தொடர் அடுத்த சில மாதங்கள்ல ஒளிபரப்பாகும். ‘ஊர்ல ஒரு ராஜகுமாரி’ ஷூட்டிங் போய் வந்த அனுபவம் மறக்க முடியாது. நல்ல டீம். ஆல் தி பெஸ்ட் சொல்லி என்னை அனுப்பி வச்சாங்க. அவங்களுக்கு நானும் வாழ்த்துகளைச் சொல்லிட்டு கிளம்பிட்டேன்’ என்கிறார்.

அடுத்த சில தினங்களில் இவரது கேரக்டர் மாற்றம் குறித்து சேனல் அதிகாரபூர்வமாக அறிவிக்குமெனத் தெரிகிறது.