Published:Updated:

``எனக்கு அறிமுகமில்லாத ஐடி-ல இருந்து வர்ற மெசேஜை ஓப்பன்கூட பண்ண மாட்டேன்’’ - விஜே சசிகலா

``எனக்கு அறிமுகமில்லாத ஐடி-ல இருந்து வர்ற மெசேஜை ஓப்பன்கூட பண்ண மாட்டேன்’’ - விஜே சசிகலா
``எனக்கு அறிமுகமில்லாத ஐடி-ல இருந்து வர்ற மெசேஜை ஓப்பன்கூட பண்ண மாட்டேன்’’ - விஜே சசிகலா

தொகுப்பாளர், நடிகை என பன்முகக் கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜே சசிகலா. விஜேவாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிக்கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான `குலதெய்வம்’ சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் வாங்கியவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `யாரடி நீ மோகினி’ சீரியலில் நடிக்கிறார் என்கிற தகவல் கிடைத்ததும் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``எனக்கு அறிமுகமில்லாத ஐடி-ல இருந்து வர்ற மெசேஜை ஓப்பன்கூட பண்ண மாட்டேன்’’ - விஜே சசிகலா

ஜீ தமிழ் என்னுடைய பிறந்த வீடு மாதிரி. அங்கே தான் நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருக்கேன். ஒரு தடவையாச்சும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கணுங்குறது என்னுடைய ஆசை. `நிறம் மாறாத பூக்கள்’ சீரியலில் நடிக்கிறதா இருந்துச்சு... சில காரணங்களால் நடிக்க முடியாமல் போயிடுச்சு. அப்புறம், இந்த சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கேரக்டரில் நடிக்கணும்னு சொன்னாங்க. எனக்கு கேரக்டர்தான் முக்கியம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிச்சா என்ன என் நடிப்புத் திறமையை நான் வெளிக்காட்டுற களமாகத்தான் இதைப் பார்க்கிறேன். அதனால ஓகே சொன்னேன். ஆரம்பத்தில் என் ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி யார்கிட்டேயும் நடிக்கப் போகிறதை சொல்லலை. நடிச்சதுக்கு அப்புறம் அவங்களாகவே தெரிஞ்சுகிட்டாங்க. ஏன் இப்போவே அம்மா ரோலில் நடிக்கிறன்னு திட்டுனாங்க. ஒரு தடவை அம்மா ரோலில் நடிச்சா தொடர்ந்து அதே கேரக்டர் வாய்ப்பு மட்டுமே வரும்னு எனக்கும் தெரியும். ஆனா, இப்போ இந்த புராஜக்டில் என்னால முடிஞ்ச அளவுக்கு என் பெஸ்டை கொடுக்கணும்னு தோணுச்சு. இப்போ நாலு நாள் ஷூட் முடிஞ்சுருக்கு!

அந்தக் குழந்தைங்க கூட நடிக்கிறது செம அனுபவமா இருக்கு. அவ என்னை ஆன்ட்டின்னு கூப்பிடுவா. நான் உனக்கு அம்மா... என்னை நீ அம்மான்னு கூப்பிடணும்னு சொன்னா இல்லை நீங்க ஆன்ட்டி இதுதான் என் அம்மான்னு அவளுடைய அம்மாவைக் காட்டுவா... இப்படித்தான் அவ கூட ஏதாச்சும் வம்பு பண்ணிட்டு இருப்பேன். துறுதுறுன்னு சேட்டை பண்ணிட்டே இருப்பாங்க. அவங்க கூட நடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். அந்த செட்டைப் பொறுத்தவரைக்கும் எல்லோருமே எனக்கு அறிமுகமானவங்க. அதனால் புதுசா எந்தத் தயக்கமும் இல்லை. எல்லோர் கூடயும் ஜாலியா பேசிட்டு இருப்பேன்.

``எனக்கு அறிமுகமில்லாத ஐடி-ல இருந்து வர்ற மெசேஜை ஓப்பன்கூட பண்ண மாட்டேன்’’ - விஜே சசிகலா

`குலதெய்வம்’ சீரியலிலும் இடையில்தான் அறிமுகமானேன். அதே மாதிரி இந்த சீரியலிலும் இடையில் அறிமுகமாகியிருக்கேன். அந்த சீரியல் எனக்கு ஒரு ரீச் கொடுத்தது. அதே மாதிரி இந்தக் கேரக்டரும் எனக்கு நல்ல ரீச் கொடுக்கும் என்கிற நம்பிக்கை இருக்கு என்றவரிடம் வெள்ளித்திரை வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

`பொதுவாக என் மனசு தங்கம்’ படம் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துச்சு. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. நல்ல கதைக்களமா இருந்தா நடிக்கலாம்னு வெயிட் பண்றேன். நான் ஆங்கர்ங்குறதுனால படத்துலேயும் ஆங்கர் கதாபாத்திரமே தொடர்ந்து வந்துட்டு இருந்துச்சு. இப்போ அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தா எனக்கு ஆர்வம் இல்லைன்னு சொல்லிடுறேன். படங்களைப் பொறுத்தவரையில் பல விஷயங்களில் கவனமாக இருக்கணும். அதனால ரொம்ப யோசிச்சு முடிவெடுக்கிறேன் என்றவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

எனக்கு சோசியல் மீடியாவில் நிறைய மெசேஜ் வரும். தேவையில்லாத மெசேஜ்களை நான் ஓப்பன் பண்ணியே பார்க்க மாட்டேன். முன், பின் தெரியாதவங்ககிட்ட பேசணும்னு எந்த அவசியமும் இல்லையே! அறிமுகமே இல்லாத ஒருவனை எப்படி நம்ப முடியும். நடிகர்கள்னா இப்படித்தான்னு ஒரு முத்திரை குத்தி வைச்சிருக்காங்க. உண்மையில் அப்படியெல்லாம் ஒன்னுமில்லங்க. எல்லா இடத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படும். நாம எப்படி இருக்கோம் என்பதில்தான் நம்முடைய பாதுகாப்பு இருக்கு. 

``எனக்கு அறிமுகமில்லாத ஐடி-ல இருந்து வர்ற மெசேஜை ஓப்பன்கூட பண்ண மாட்டேன்’’ - விஜே சசிகலா

பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கு. நான் அது தொடர்பா எந்தப் பதிவையும் போடலை. ஏன்னா, நாம பதிவு போடுறதினால் எதுவும் மாறப் போகிறது இல்லை. இன்னைக்கு காலையில்கூட இதேபோல இன்னொரு சம்பவம் நடந்திருக்குன்னு செய்தியில் சொல்றாங்க. இதுக்கெல்லாம் என்னங்க தீர்வு?

அரசாங்கமே பாதிக்கப்பட்ட பெண்களுடைய பெயர்களை வெளியில் சொல்றாங்கன்னா அதைவிட கொடுமையான விஷயம் என்ன இருக்க முடியும். இந்தப் பிரச்னை வந்து இவ்வளவு நாளாச்சு நேற்றுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குறதா அறிவிச்சியிருக்காங்க. நம்மளுடைய அரசாங்கம் எவ்வளவு மெதுவா வேலை பார்க்குதுங்குறதுக்கு இந்தச் சான்று போதாதா? சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனடியா தண்டனை கொடுத்தாதான் இதே மாதிரி அடுத்து எவனும் தப்பு பண்ணப் பயப்படுவான். மற்ற நாடுகளில் கொடுக்கப்படுகிற மாதிரி கொடூரமான தண்டனைகளை நம்ம நாட்டிலும் கொடுக்க ஆரம்பிக்கணும். 

பெற்றவங்க குழந்தைகளுக்கு செல்ஃபோன் பயன்படுத்துற பழக்கம் ஏற்படாம பார்த்துக்கணும். செல்ஃபோன்தான் நம்மளை கெடுக்குற ஆயுதம். முன்னாடியெல்லாம் பக்கத்துல இருக்கிற மனுஷங்ககூட பேசுவோம். இப்போ பக்கத்துல எத்தனை பேர் இருந்தாலும் எல்லோரும் மொபைலில்தான் பேசுறோம். டெக்னாலஜியை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தணும் என்கிறார் சசிகலா.