Published:Updated:

`பிரேக் -அப்’சொல்லிடுவேன்’னு மிரட்டுறாங்க சமீரா - மனம் திறக்கும் அன்வர்

`பிரேக் -அப்’சொல்லிடுவேன்’னு மிரட்டுறாங்க சமீரா - மனம் திறக்கும் அன்வர்

தங்களது திருமணம் குறித்து ‘பகல் நிலவு’ ஜோடி அன்வர்-சமீரா

Published:Updated:

`பிரேக் -அப்’சொல்லிடுவேன்’னு மிரட்டுறாங்க சமீரா - மனம் திறக்கும் அன்வர்

தங்களது திருமணம் குறித்து ‘பகல் நிலவு’ ஜோடி அன்வர்-சமீரா

`பிரேக் -அப்’சொல்லிடுவேன்’னு மிரட்டுறாங்க சமீரா - மனம் திறக்கும் அன்வர்

அன்வர்-சமீரா, தமிழ்த் தொலைக்காட்சி  உலகின் க்யூட் ஜோடி. ரியல் லைஃபில் காதலித்துக்கொண்டிருக்கிற இவர்கள், 'பகல் நிலவு’ தொடர் மூலம் காதலர்களாகவே அறிமுகமானார்கள். சில காரணங்களால் அந்த சீரியலிலிருந்து வெளியேறிய பின்னர், ‘றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடரில் நடித்தார்கள். ’றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடரின் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றார் சமீரா. சில மாதங்களில், தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அன்வர், தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலை வழங்கிவருகிறார். தலா ஒரு சீரியலை ஆளுக்கொரு சேனலில் வழங்கிவரும் இந்த ஜோடிக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். ’ஃபேஸ்புக்’கில் ’அன்வீரா’ என்றொரு பக்கமே உள்ளது.

இவர்களைக் காட்டி, ‘காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என சொல்பவர்களைவிட ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை வாழ்கிறார்கள் எனச் சொல்கிறவர்களே அதிகம். அந்த அளவுக்கு நெருக்கமான ஒரு அந்நியோன்யம் இவர்களுக்கிடையே உண்டாம். ‘லிவிங் டுகெதர் லைஃப் நிஜமா’ அல்லது எப்போதான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்’ எனக் கேட்டோம்.

‘டிவி இண்டஸ்ட்ரியைப் பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றணும். ஒரு சீரியல் ஹிட் அடிச்சதுன்னா, அடுத்தடுத்தும் அப்படியே இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இப்ப, புரொடியூசரா ஆளுக்கொரு சீரியல் பண்ணிட்டிருக்கோம்.  மாசத்துல பதினைஞ்சு நாள் அவங்களை நான் பார்க்க முடியாது; மீதி பதினைஞ்சு நாள் என்னை அவங்க சந்திக்க முடியாது. இந்த மாதிரி இருக்கற பரபரப்புல மேரேஜ் பத்தி எங்கிட்டு யோசிக்கிறது. அதனால தள்ளிப் போட்டுட்டே வந்தோம்.  

ஆனா இனி அதுக்கு வாய்ப்பு இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னோட அம்மாகிட்டப் போய், ‘உங்க பையன் என்னைக் கல்யாணம் செய்துகிட்டு ஏங்கூட வாழணும்னு ஆசைப்படறாரா இல்லையானு கேட்டுச் சொல்லுங்க’ன்னு கொஞ்சம் கோபமாகவே கேட்டிருக்காங்க. எங்கிட்டயும் ‘முடிஞ்ச வரை மொக்கையப் போட்டுட்டு  அப்படியே எஸ்கேப் ஆகிடலாம்னு ஐடியா இருக்கா? இந்த வருஷம் மட்டும் மேரேஜ் இல்லைனா ’லவ்’பிரேக் அப்’தான்’னு சொல்லிட்டாங்க.

’இந்த ஃபீல்டு இப்படித்தான்; பழகுறது போல பழகி, கறக்க முடிஞ்சதை கறந்துட்டு கொஞ்ச நாள்ல காதலாவது கீதலாவது’னு கிளம்பிடுவாங்க’னு யாரோ அவங்ககிட்ட பீதி கிளப்பிவிட்டிருக்காங்க. அதனால வந்த டென்ஷன். ஆனா, அதை  ஈசியாகவும் எடுத்துக்க முடியாதில்லையா... ஸோ, ’இந்த வருஷம் நிச்சயம் இன்விடேஷன் அடிச்சிடலாம்’னு முடிவுசெய்தாச்சு’ என்கிறார் அன்வர்.