Published:Updated:

``ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மாவா நடிக்கணுமான்னு யோசிச்சேன்!" - ரீ என்ட்ரி ஆகும் `சத்யா' யாஸ்மின்

வெ.வித்யா காயத்ரி
``ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மாவா நடிக்கணுமான்னு யோசிச்சேன்!" - ரீ என்ட்ரி ஆகும் `சத்யா' யாஸ்மின்
``ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மாவா நடிக்கணுமான்னு யோசிச்சேன்!" - ரீ என்ட்ரி ஆகும் `சத்யா' யாஸ்மின்

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் `சத்யா'. இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக நடிப்பவர் சீதா. `ஜமீன் கோட்டை', `பிரியங்கா' போன்ற படத்தில் நடித்த இவர் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சில வருடங்களாக நடிப்பிற்கு பிரேக் கொடுத்த இவர் தற்போது இந்த சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

முன்னாடி வரை என் பெயரை சீதான்னு பயன்படுத்திட்டு இருந்தேன். இப்போ என் பெயரை `யாஸ்மின் அயாஸ்'ன்னு மாத்திட்டேன். இனிமே, இந்தப் பெயரில்தான் நடிப்பேன். பர்சனல் விஷயங்களுக்காகக் கொஞ்ச நாள் பிரேக் எடுத்திருந்தேன். இப்போ மறுபடி ஃபீல்டுக்குள்ளே என்ட்ரி ஆகியிருக்கேன். 

ஆரம்பத்தில் இந்த சீரியலில் இரண்டு பெரிய பொண்ணுங்களுக்கு அம்மாவாக நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், சரி கேரக்டர் தானே.. இதில் நம்மளுடைய நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவோமேன்னு ஓகே சொன்னேன். வெள்ளித்திரையிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நல்ல கதைக்களம் அமைஞ்சா ரீ- என்ட்ரி கொடுக்க ரெடியா இருக்கேன்.

நிறைய பேர் நான் மறுபடி நடிக்க வந்ததில் சந்தோஷம்னு சொல்றாங்க. எனக்கு சப்போர்ட் பண்ற எல்லா ரசிகர்களுக்கும் என் நன்றி என்றார், யாஸ்மின் அயாஸ்.