Published:Updated:

''மியூசிக்கலி பண்ண லிஷா, பெஸ்ட் பிரெண்ட் சயித்ரா, காதலன் என் முதல் பட ஹீரோ'' - நட்சத்திரா

''மியூசிக்கலி பண்ண லிஷா, பெஸ்ட் பிரெண்ட் சயித்ரா, காதலன் என் முதல் பட ஹீரோ'' - நட்சத்திரா
''மியூசிக்கலி பண்ண லிஷா, பெஸ்ட் பிரெண்ட் சயித்ரா, காதலன் என் முதல் பட ஹீரோ'' - நட்சத்திரா

''மியூசிக்கலி பண்ண லிஷா, பெஸ்ட் பிரெண்ட் சயித்ரா, காதலன் என் முதல் பட ஹீரோ'' - நட்சத்திரா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'யாரடி நீ மோகினி'. இந்தத் தொடரில் வெண்ணிலாவாக நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பவர் நடிகை நட்சத்திரா. வெள்ளித்திரை டு சின்னத்திரை என்ட்ரி, காதலன், பெஸ்ட் பிரெண்ட், மியூசிக்கலி எனச் சகலமும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

'' 'யாரடி நீ மோகினி' சீரியல் சூட்டிங் பரபரப்பாக போய்ட்டு இருக்கு. ஷூட்டிங் வந்தா டைம் போகுறதே தெரியாது. இந்த சீரியல் எனக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கு. இப்போ வெளியில் என்னைப் பார்க்கிற பலரும் வெண்ணிலான்னு தான் கூப்டுறாங்க!" என்றவரிடம் சயித்ராவுடனான ஃப்ரெண்ட்ஷிப் குறித்துக் கேட்டோம்.

"சீரியலில் என்ட்ரி ஆகும் போது ஆல்ரெடி சயித்ரா பிரபலமா இருந்தா. கன்னட படங்களிலெல்லாம் நடிச்சிருந்தா. அதனால, நானா போய் எதுவும் பேசலை. அவளும் என்கிட்ட பேசல. போகப் போகத்தான் 'அய்யோ இந்தப் புள்ளையை இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டோமேன்'னு தோணுச்சு. அவ்வளவு ஸ்வீட். நாங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பயங்கர குளோஸ் ஆகிட்டோம். எந்த அளவுக்குன்னா... எனக்குப் போன் பண்ணி நான் போன் எடுக்கலைன்னா நான் எங்கே இருக்கேன்னு சயித்ராவுக்கு போன் பண்ணா தெரிஞ்சிக்கலாம். இந்த மாதிரி டிரெஸ் பண்ணு... இப்படியெல்லாம் இருன்னு ஒவ்வொரு விஷயமா பார்த்து பார்த்து என்னை வழிநடத்துவா'' என்றவரிடம் கோவா டிரிப் குறித்துக் கேட்க புன்னகைக்கிறார்.

''எப்பவுமே சூட்டிங், சூட்டிங்னு பிஸியா இருக்கோம். ரிலாக்ஸா எங்கேயாச்சும் போகலாம்னு அடிக்கடி பேசிப்போம். சயித்ரா கோவா போயிட்டு வந்து அந்த ஃபோட்டோவையெல்லாம் காட்டினா. அதைப் பார்த்ததும் எனக்கும் அங்கே போகணும்னு ஆசை வந்துடுச்சு. சரி போகலாம்னு திடீர்னு முடிவு பண்ணோம். போன வாரத்தில் மூணு நாள் கோவா போய்ட்டு வந்தோம். மறக்கவே முடியாத பயணமா இந்த டிரிப் இருந்துச்சு!" என்றவரிடம் ஜூனியர் சூப்பர் ஸ்டார் லிஷா குறித்துக் கேட்டோம்.

"நானும், லிஷாவும் பயங்கர குளோஸ். லிஷாவால எப்படி இவ்வளவு எக்ஸ்பிரஷன்களை இந்த சின்ன வயசுல கொடுக்க முடியுதுன்னு எனக்குத் தெரியலை. ரொம்ப மெச்சூரிட்டி லெவல் உள்ள குழந்தை. அவ அளவுக்கு ஞாபக சக்தி யாருக்கும் இருக்க முடியாது. என்னை 'நச்சூ'ன்னு தான் கூப்டுவா. சீரியலில் அவளுக்கும், எனக்கும் காம்பினேஷன் அதிகமா வரும். அதனாலேயோ என்னவோ என்கூட ஜெல் ஆகிட்டா. ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் அவ கூட சேர்ந்து மியூசிக்கலி பண்ணிட்டு இருப்பேன்'' என்றவரிடம் அவர் முதல் பட ஹீரோ பற்றி கேட்டேன்.

''தெரிஞ்சு போச்சா (சிரிக்கிறார்). யெஸ், நான் முதன் முதலா நடிச்ச படத்தில் அவர்தான் எனக்கு ஜோடி. அந்தப் படம் நடிக்கும் போதே அவருக்கு என்னைப் பிடிச்சிருந்துருக்கு போல. அதனாலதான் அவரே புரொடியூஸ் பண்ணி இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைச்சார். அந்தப் படத்தில் நடிக்கும் போது லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நிறைய பேர் யார் லவ் புரொப்போஸ் பண்ணதுன்னு கேட்பாங்க. இப்போ வரை அதுக்கு எங்க ரெண்டு பேர்கிட்டேயும் பதில் இல்லை. திடீர்னு ஒரு நாள் அவர் என்கிட்ட உங்க அம்மாகிட்ட கல்யாண விஷயம் பற்றி கேட்கட்டுமான்னு கேட்டார். எனக்கு அப்படியே ஷாக் ஆகிடுச்சு. ஏங்க, லவ் பண்றேன்னே சொல்லலை... நேரடியா கல்யாண விஷயம் வரைக்கும் போயிட்டாரேன்னு யோசிச்சேன். அவர் ரொம்பவே மெச்சூர்டா நடந்துப்பார். இப்போ நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சு 5 வருஷமாகிடுச்சு. அவர் பக்கா தமிழ் பையன். பென்னாடம் அவருடைய ஊர். சின்ன கிராமமா இருந்தாலும் அந்த இடம் அவ்வளவு அழகா இருக்கும். ஆடு, மாடு, கோழி, பாசமான மனுஷங்கன்னு அது வேற லெவல் வாழ்க்கை. எனக்கு அவருடைய வீடு ரொம்ப பிடிக்கும். இப்போதான் இரண்டு பேருடைய வீட்டிலும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்காங்க. எப்படியும் இந்த வருஷத்துக்குள்ளே சிம்பிளா எங்க திருமணம் நடக்கும்'' என்றார்!

வாழ்த்துகள் நட்சத்திரா!

அடுத்த கட்டுரைக்கு