Published:Updated:

`விவாகரத்து ஆன பிறகு ஜோடியா ஷோவுக்கு கூப்பிடுறாங்க!' - வருந்தும் சாய்சக்தி

`விவாகரத்து ஆன பிறகு ஜோடியா ஷோவுக்கு கூப்பிடுறாங்க!' - வருந்தும் சாய்சக்தி

`விவாகரத்து ஆன பிறகு ஜோடியா ஷோவுக்கு கூப்பிடுறாங்க!' - வருந்தும் சாய்சக்தி

`விவாகரத்து ஆன பிறகு ஜோடியா ஷோவுக்கு கூப்பிடுறாங்க!' - வருந்தும் சாய்சக்தி

`விவாகரத்து ஆன பிறகு ஜோடியா ஷோவுக்கு கூப்பிடுறாங்க!' - வருந்தும் சாய்சக்தி

Published:Updated:
`விவாகரத்து ஆன பிறகு ஜோடியா ஷோவுக்கு கூப்பிடுறாங்க!' - வருந்தும் சாய்சக்தி

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியபோது சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சாய் சக்தி. `கோலங்கள்’, ‘அழகி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர், தொடர்ந்து பிரைம் டைமில் ஒளிபரப்பான `நாதஸ்வரம்’ தொடர் மூலம் ஓரளவுக்குப் பிரபலமானார். பிறகு ஜூலியுடன் `ஜோடி ஷோ’, `கிச்சன் சூப்பர் ஸ்டார்’ ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு ஒரு எண்டெர்டெய்னராகத் திகழ்ந்தார். ஒரு கட்டத்தில் சீரியல், ரியாலிட்டி ஷோ வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், விரக்தியடைந்து தற்கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு அதிர வைத்தார். அதன் தொடர்ச்சியாக டிவியை விட்டே விலகி, வளைகுடா நாடு ஒன்றில் வேலை கிடைத்துச் சென்றார். ஆனால், அந்த வேலையும் அவருக்கு திருப்தியானதாக அமையவில்லை. இடையில் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்பட, மனைவியைப் பிரிந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பழையபடி டிவியில்  தோன்றுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
சாய்சக்தியிடம் பேசினோம்.

``நடந்த கசப்பான நினைவுகளை மறுபடியும் நினைக்க விரும்பலை. ஆடின கால் மறக்காதுங்கிறது நிஜம். அதனால நடிப்புதான் என்னோட ஏரியான்னு தெரிஞ்சு போச்சு. அதனால இனி அதற்கான முயற்சிகளை சீரியஸாத் தேட ஆரம்பிக்கணும்.. ஃபீல்டுல மெச்சூர்டா நடந்துக்கணும்.. இப்படி சில விஷயங்களை முடிவு செய்து ரீ எண்ட்ரி ஆகலாம்னு இருக்கேன்.

கடந்த காலங்கள்ல நிறைய பேருக்கு நான் எண்டெர்டெய்னராக மட்டுமே தெரிஞ்சேன். அவங்கள்ல சிலர் என்னை வெறும் காமெடியனாகவே பார்த்தாங்க. ஆனா என்னோட வெள்ளந்தியான குணத்தை அறிந்த சிலர் துயரமான தருணங்கள்ல எனக்கு ஆறுதலா இருந்தாங்க. அப்படிப்பட்டவங்கள்ல சில புரடியூசர்களும் அடக்கம். அவங்ககிட்ட மறுபடியும் சீரியல் வாய்ப்பு கேட்டிருக்கேன். நல்ல பதில் தருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு’ என்றவர், அடுத்துச் சொன்ன விஷயம், மனதைத் தொடுவதாக இருந்தது.
இதுதான் அந்த விஷயம் ..

`நான் நடிகன்னு தெரிஞ்சேதான் கல்யாணம் நடந்தது. ஆனா, போகப்போக,  `சீரியல் வருமானம் தராது. அதனால டிவியை ஏறக் கட்டிட்டு பிசினஸ் ஏதாச்சும் பண்ணுங்க’ன்னு எதிர்ப்பு கிளம்பியது. `கொஞ்ச நாள் டைம் தர்றோம், வாய்ப்பு வருதான்னு பார்க்கலாம்; இல்லையா நாங்க சொன்னபடி கேக்கணும்’னாங்க. அப்பதான் `சீரியல், இல்லாட்டியும் ரியாலிட்டி ஷோக்கள்ல கலந்துக்கற வாய்ப்பாச்சும் கிடைக்காதா’ன்னு பல இடங்களுக்கு ஏறி இறங்கினேன். ரியாலிட்டி ஷோக்கள்ல கலந்துக்கறதுக்கே பேமெண்ட்னு ஒண்ணு தர்றாங்க இல்லையா, அப்படியாச்சும் ஒரு வருமானம் வரட்டும்னு நினைச்சேன். ஆனா அந்த மாதிரியான வாய்ப்புமே கூட அமையலை.
பிறகு வாழ்க்கயில என்னென்னவோ நடந்திடுச்சு. `டிவியை விட்டு விலக முடியாதவனுடன் குடும்பம் நடத்த முடியாது ’ங்கிற நிலைமை மனைவிக்கு. அதனால முறைப்படி விவாகரத்து ஆகிடுச்சு. ஆனா, குடும்பம் நடத்த வருமானம் வேண்டி வாய்ப்பு தேடினப்ப வராத ஒரு வாய்ப்பு சில தினங்களுக்கு முன் வந்தது.

முன்னணி சேனல்ல இருந்து, `டிவி செலிபிரிட்டிகள் தம்பதி சகிதமா கலந்துக்கற ரியாலிட்டி ஷோ; நீங்க மனைவியுடன் வந்து கலந்துக்கணும்’னு கூப்பிட்டாங்க. எனக்கு விவாகரத்து ஆகிடுச்சுங்க’னு சொல்லி ஃபோனை வச்சுட்டேன்’ என்கிறார் சாய்சக்தி.