Published:Updated:

``முன்னாடிலாம் கூட நடிக்கிறவங்ககூட குளோஸா இருப்போம்... இப்ப..?!'' - காயத்ரி பிரியா

``முன்னாடிலாம் கூட நடிக்கிறவங்ககூட குளோஸா இருப்போம்... இப்ப..?!'' - காயத்ரி பிரியா
``முன்னாடிலாம் கூட நடிக்கிறவங்ககூட குளோஸா இருப்போம்... இப்ப..?!'' - காயத்ரி பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைகிளி' சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துச்சு. அந்தக் கதைக்களமும் எனக்குப் பிடிச்சிருந்ததுனால ஓகே சொன்னேன். வெளியில் எங்கே பார்த்தாலும் நீங்க ஏன் நடிக்க வர மாட்டேன்றீங்கன்னு கேட்டுட்டு இருந்த ரசிகர்களுக்காகவே இப்போ ரீ-என்ட்ரி கொடுத்துட்டேன்.

மிழில் கிட்டத்தட்ட ஐம்பது சீரியல்களுக்கும் மேலாக நடித்தவர் காயத்ரி பிரியா. திருமணமாகி குழந்தைகள் எனச் செட்டில் ஆகவும் நடிப்பிற்கு பிரேக் எடுத்தார். பின்னர் மலையாள சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் ரீ - என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

"ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீடியாவிற்குள் என்ட்ரி ஆனேன். அப்புறம் தமிழ், தெலுங்கு, மலையாளம்னு பல மொழிகளில் பிஸியா நடிக்க ஆரம்பிச்சேன். திருமணம், குழந்தைன்னு செட்டில் ஆனதும் நடிப்பிற்கு பிரேக் எடுத்தேன். என் கணவர் மிகப் பெரிய நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவருடைய வேலைக்காக மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தோம். ரொம்ப பரபரப்பா இயங்கிட்டு, வீட்டுக்குள்ளே சும்மா என்னால இருக்க முடியலை. எனக்காகவே மலேசியாவிலிருந்து திரும்பி வந்தோம். என் கணவர் எனக்கு ஃபுல் சப்போர்ட். உன்னுடைய கரியரை ஏன் விடணும்னு நினைக்கிற... தொடர்ந்து நடின்னு சொன்னாரு. சென்னைத் திரும்பி வந்ததும் மலையாள சீரியல்களில் நடிச்சிட்டிருந்தேன்.

எனக்கு இரண்டு பசங்க. என் அம்மா, அப்பா பசங்களைப் பார்த்துக்குறாங்க. வீட்டுல நம்மளை சப்போர்ட் பண்ண யாராச்சும் இருந்தால்தான் நம்மளால நிம்மதியா வெளியில் போய் வேலை பார்க்க முடியும். தமிழில் ரொம்ப அன்பான மனைவியாகவும் பாசமான மருமகளாகவும் நடிச்சிருக்கேன். தமிழில் நல்ல வாய்ப்பு அமைஞ்சா ரீ- என்ட்ரி கொடுக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைகிளி' சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துச்சு. அந்தக் கதைக்களமும் எனக்குப் பிடிச்சிருந்ததுனால ஓகே சொன்னேன். வெளியில் எங்கே பார்த்தாலும் நீங்க ஏன் நடிக்க வர மாட்டேன்றீங்கன்னு கேட்டுட்டு இருந்த ரசிகர்களுக்காகவே இப்போ ரீ-என்ட்ரி கொடுத்துட்டேன்.

சிலர், இந்த சீரியலில் ஏன் அம்மா ரோலில் நடிக்க ஒத்துக்கிட்டீங்க, கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமேன்னு சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் கேரக்டர்தான் முக்கியம். எந்தக் கதாபாத்திரமா இருந்தாலும் நம்மளுடைய திறமையை முழுசா வெளிப்படுத்தணும்னு நினைப்பேன். இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரங்கிறதுனால இயல்பான அம்மா எப்படி அதுமாதிரி சிம்பிள் மேக்கப்போட நடிக்கிறேன்.

கதைப்படி, ரொம்ப நாள் ரூமுக்குள்ளேயே அடைச்சு வைச்சிருந்த அம்மா வெளிய வர்றாங்கங்கிறதுனால சிம்பிளான லுக்கில்தான் இருக்கணும். அதுக்காக என்னை டல்லா காட்ட டல் மேக்கப்பும் போடுறேன்'' என்றவரிடம் அப்போது நடித்ததற்கும், இப்போது நடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பகிரச் சொன்னோம்.

``நடிக்கிற வரை எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. ஆனா, ஷூட் இல்லாத சமயம் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் ரொம்ப குளோஸா பேசிட்டு இருப்போம். இப்போ அப்படியெல்லாம் இல்லை. டெக்னாலஜி மனுஷங்களை மாத்திடுச்சு. கொஞ்ச நேரம் டைம் கிடைச்சாலும் மொபைலில்தான் எல்லோரும் பிஸியா இருக்கோம். 

என் கூட நடிச்ச பல ஆர்ட்டிஸ்ட் எனக்கு நெருங்கிய நண்பர்கள்தான். அவங்க ஏதாவது புராஜக்ட் பண்றாங்கன்னா நான் விஷ் பண்ணுவேன். நான் பண்ற புராஜக்ட் பார்த்துட்டு அவங்க விஷ் பண்ணுவாங்க. இப்படித்தான் பேசிக்கிறோம்'' என்றவரிடம் நெக்ஸ்ட் பிளான் குறித்துக் கேட்க புன்னகைக்கிறார்.

``இப்போதைக்கு தமிழ், மலையாளம்னு இரண்டு மொழி சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன். நடிப்பு, ஃபேமிலின்னு இரண்டையும் பேலன்ஸ் பண்ணிட்டு இருக்கேன். நிறைய புராஜக்ட்ஸ் கமிட் ஆகிட்டு கஷ்டப்படுறதுக்கு பதில், ஒரு புராஜக்ட் பண்ணாலும் நல்லா பண்ணணும்னு நினைக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு