Published:Updated:

வந்த வேகத்தில் வெளியேறிய ஷிவானி!- `கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் என்ன நடந்தது?

வந்த வேகத்தில் வெளியேறிய ஷிவானி!- `கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் என்ன நடந்தது?
வந்த வேகத்தில் வெளியேறிய ஷிவானி!- `கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் என்ன நடந்தது?

விஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ ஒளிபரப்பாகத் தொடங்கி முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கதாநாயகி ஷிவானி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். என்ன காரணமாம்? ஷிவானி தரப்பில் பேசிய போது, வெளியேறியதை மட்டும் ஒப்புக் கொண்டு ‘கொஞ்ச நாள் போகட்டும் விரிவாகப் பேசுகிறோம்’எனச் சொல்லி விட்டார்கள்.

‘கடைக்குட்டி சிங்கம்’ யூனிட்டில் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் இப்படிச் சொல்கிறார்கள். ‘பகல் நிலவு’ தொடர் ஒளிபரப்பாகிட்டிருந்த நேரத்துல அதுல இருந்த ரெண்டு மெயின் ஜோடிகள் வெளியேறியதும், ஷிவானிக்கும் அவருக்கு ஜோடியா நடிச்ச அசீமுக்கும் முக்கியத்துவம் கிடைத்தது.  ஷிவானி-அசீம் ஜோடிக்கு கிடைச்ச வரவேற்பைத் தொடர்ந்தே சேனல்ல, ‘பகல் நிலவு’ முடிஞ்ச சூட்டோடு அதே ஜோடியைப் போட்டு ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரைத் தொடங்கினாங்க. ஆனா ‘பகல் நிலவு’ தொடர்ல தொடர்ந்து நடந்த ஆள் மாறாட்டங்களால் அப்செட் ஆகியிருந்த ஷிவானி, அந்த தொடர் முடிஞ்சதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னுதான் விரும்பினாங்க. உடனே அடுத்த சீரியல்ல கமிட் ஆக விரும்பலை. ஆனாலும் அவங்களை சேனல் அழுத்தம் கொடுத்தே ‘கடைக்குட்டி சிங்க’த்துல நடிக்க வச்சதாச் சொல்றாங்க. வேண்டா வெறுப்பா நடிச்சதாலேயே என்ன பிரச்னையோ, சீரியல் தொடங்கின சில நாள்கள்லயே வெளியேறிட்டாங்க..’’

இன்னும் சிலரோ ’அந்த சீரியலோட புரடக்சன் சைடுல முக்கிய நபரா இருக்கிற ஒருத்தரோட சகோதரரும் இந்த சீரியல்ல ஒரு கேரக்டர்ல நடிச்சிட்டிருக்கார். சீரியல்ல அவரோட டாமினேஷன் தாங்க முடியாமதான் ஷிவானி வெளியேறிட்டார்’ என்கிறார்கள்.

எது உண்மை என்பதை ஷிவானிதான் சொல்ல வேண்டும்.