Published:Updated:

''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா

''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா
''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா

''குரூப் டான்ஸரா கடைசி வரிசையில ஆடுறதெல்லாம் வலி'' - டான்ஸ் மாஸ்டர் டு நடிகை ரேகா

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'திருமணம்' சீரியலில் வாணி கேரக்டரில் நகைச்சுவை ரோலில் கலக்கிக்கொண்டிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ரேகா. டான்ஸ் டு சீரியல் என்ட்ரி தொடங்கியிருக்கும் ரேகா மாஸ்டரிடம் ஒரு பர்ஷனல் சாட்.

"என்னுடைய புரொபஷன் டான்ஸ் என்றாலும், நடிப்பு மனசுக்கு நெருக்கமான ஒன்று. நான் பிறந்து ஆறு மாசத்திலேயே, குழந்தை நட்சத்திரமா நடிச்சேனு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. என்னுடைய அப்பா, ஃபைட் மாஸ்டர். அம்மா டப்பிங் ஆர்டிஸ்ட்ங்கிறதுனால சின்ன வயசிலேயே சினிமா எனக்கு பரிட்சயமான ஒண்ணாதான் இருந்துச்சு. நான் சின்னப் பொண்ணா இருந்தப்பவே அப்பா தவறிட்டாங்க. அதுக்கப்புறம் என்னைத் தனியாளா வளர்த்தெடுத்ததெல்லாம் என் அம்மாதான். என்னோட ஆர்வத்தைத் தெரிஞ்சுகிட்டு குழந்தை நட்சத்திரமா நடிக்க வெச்சாங்க. 'ஆண் பாவம்' படத்தில்தான் குழந்தையா அறிமுகமானேன். அப்புறம் 'மெல்லத்திறந்தது கதவு', 'மேகம் கருத்திருக்கு' போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. ஒருகட்டத்துல டான்ஸ் மேல ஈர்ப்பு வர ஆரம்பிச்சது.  உடனே, அம்மா என்னை அந்தோணி மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்க விட்டாங்க. கிளாஸ்ல சேர்ந்த கொஞ்ச நாள்லேயே அதுதான் என்னோட எதிர்காலம்கிறதை முடிவுபண்ணினேன். சூப்பரா டான்ஸ் கத்துகிட்டு ரகுராம் மாஸ்டர், கிரிஜா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், கலா மாஸ்டர்னு எல்லார்கிட்டயும் அவங்களுடைய சிறப்புத்தன்மையைக் கத்துக்கிடேன்'' என்றவர், பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை. டான்ஸிலேயே தன் முழுக் கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

முதன்முதல்ல குரூப் டான்ஸராதான் எங்க வாழ்க்கையெல்லாம் ஆரம்பிக்கும். கடைசி வரிசையில ஆரம்பிச்சு முதல் வரிசைக்கு வரணும். கடைசி வரிசையில ஆடுறப்ப எல்லாம், மனசு ரொம்ப வலிக்கும். வளர்ச்சிக்காக மனசு துடிக்கும். ஆனா, சினிமா கரியர்ல அவ்ளோ எளிதா யாரும் மேல வந்திறமுடியாது. கடைசி வரிசையில நின்னாலும் என்னோட பெஸ்டைக் கொடுக்கணும்னு நிறைய மெனக்கெடுவேன். என்னுடைய அந்த மெனக்கெடலைப் பார்த்துட்டு, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் அவங்களுக்கு அசிஸ்டென்டா பணிபுரியிர வாய்ப்பைக் கொடுத்தாங்க.15 வருஷம் நடனத்துறையில் இருந்தேன். அதன் பின், காதல் கல்யாணம் செய்துகிட்டு கரியர்ல இருந்து சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன்.

திடீர்னு ஒரு நாள், நடிகர் திலிப் நடித்த மலையாளப் படமான ரோமியோவில் டான்ஸ் மாஸ்டரா பணியாற்ற, பட இயக்குநர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. மாஸ்டரா பணிபுரியும் வாய்ப்பு என்பதால் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஆனா, வீட்டில் மீண்டும் திரைப்படத் துறைக்கு போகணுமானு யோசிச்சாங்க. நிறைய போராடிதான் வீட்டுல சம்மதம் வாங்கினேன். என்னுடைய ரீ-என்ட்ரி நானே எதிர்பார்க்காத அளவுக்கு பிரகாசமாய் அமைந்தது. 'ரோமியோ' படம் பண்ணும்போதே தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்துச்சு. தமிழில் 'குட்டி', 'கதகளி', 'சீமராஜா', வெளுத்துக்கட்டுனு அடுத்தடுத்த ஹிட் படங்களும் கொடுத்தாச்சு. நான் எதிர்பார்த்த அங்கீகாரம் எனக்கு கிடைச்சிருச்சு. அடுத்தகட்டமா வளசரவாக்கத்துல ஒரு டான்ஸ் ஸ்கூல் தொடங்கி, மிடில் க்ளாஸ் மக்களுக்கும் டான்ஸ் எளிதா சென்றடைய பயிற்சிகள் கொடுத்துட்டிருக்கேன்"என்ற ரேகா மாஸ்டர், சீரியல் என்ட்ரி பற்றிப் பகிர்கிறார்.

''என்னுடைய நண்பரான கேமராமேன் பாலுசுப்பிரமணியன் சார் மூலமாதான் இந்த வாய்ப்பு வந்துச்சு. திருமணம் சீரியலில் எல்லோரும் புதுமுகம் என்பதால, பாலா சார் என்னை ரெஃபர் பண்ணாங்க. ஆடிஷன்லாம் முடிஞ்ச பின்பும்கூட முதல் சீரியல் என்பதால ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாக இருந்துச்சு. ஆனாலும், புதுக்களமா இருக்கும் என்பதால ஓகே சொல்லிட்டேன்.ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லாரும் புது முகம் என்பதால, எந்த ஈகோ பிரச்சனையும் இல்லாம நாங்க எல்லாரும் ஈஸியா ஒரு குடும்பமா மாறிட்டோம். கதையின் ஆரம்ப எபிசோடுகள்ல என்னுடைய வாணி கேரக்டர் ஒரு சாதாரண ரோலாதான் இருந்தது. ஆனா, ஸ்பாட்ல நான் செய்யும் அதகளங்களைப் பார்த்த டைரக்டர் ஜவஹர் சார் ," உங்க ரோல்ல காமெடி ட்ரைப் பண்ணலாம்... ஹிட் ஆக வாய்ப்பு இருக்கு''னு சொன்னாங்க. சரின்னு ட்ரை பண்ணேன். மக்களுக்கு அந்த காமெடி ரோல் பிடிச்சுப்போய், என்னோட 'வாணி' கேரக்டர் ஹிட் ஆகிருச்சு. வாணி கேரக்டரைப் பொறுத்தவரை தன்னை டேமேஜ் செய்து மற்றவர்கள் சிரிப்பது போன்ற ரோல்.காமெடி பண்ணலாம்னு முடிவு பண்ணதுமே டைரக்டர் என்னைக் கூப்பிட்டு, "மத்தவங்க சிரிக்கிறாங்கன்னு யோசிக்காம உங்க பெஸ்ட்டை கொடுங்கன்னு" சொன்னார். நானும் அதைத்தான் செய்தேன். நடிப்பை புரொபஷனா தேர்வு செய்தவங்க  எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை பக்காவாக செய்யணும். அதுதான் என்னோட பாலிசியும்கூட. இப்போ, சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. கோவை சரளா அம்மா, ஊர்வசி அக்கா மாதிரி ஒரு நல்ல நகைச்சுவை நடிகையா வரணும்ங்கிற கனவு இருக்கு. அதை அடுத்தடுத்த வாய்ப்புகள்ல நிச்சயம் நிறைவேற்றுவேன்"என்கிறார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு