Published:Updated:

டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8

தார்மிக் லீ

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 8

டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8
டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8

முந்தைய அத்தியாயம் வரை கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியஸின் மூன்று சீஸன்களைப் பார்த்திருந்தோம். இந்த அத்தியாயத்திலும், அடுத்த அத்தியாயத்திலும் சீஸன் 4-ல் நடந்ததைப் பார்க்கலாம். கடந்த சீஸனில் எதிர்பாராத விதமாக ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த கேட்டலின், ராப், அவரது மனைவி, படை என ஸ்டார்க்கைச் சேர்ந்த ஒருவரையும் விட்டுவைக்காமல் இரக்கமின்றிக் கொன்றனர், போல்ட்டும், ஃப்ரேயும். அதைத் தொடர்ந்து, சான்ஸாவுக்கும், டிரியனுக்கும் திருமணம் ஆனது, டினேரியஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் பலப்படுத்திக்கொள்வது, சாண்டோருடன் பயணித்துக்கொண்டிருந்த ஆர்யா ஸ்டார்க், ப்ரான் ஸ்டார்க், ஜோஜன் ரீடு, மீரா ரீடு, ஹோடோர் ஆகியோரது பயணம், ராம்சே போல்டனிடம் மாட்டியிருக்கும் தியோனின் நிலை... இப்படி சீஸன் 4-ல் நடந்த நிகழ்வுகளையும், திருப்புமுனைகளையும் பார்க்கலாம்! 

டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8

டைவின் லானிஸ்டரிடம் இருக்கும் நெட் ஸ்டார்க்கின் வலேரியன் வாளை உருக்கி, இரண்டு லானிஸ்டர் வாளாகச் செய்வதிலிருந்து ஆரம்பமாகும் நான்காவது சீஸன். செய்த இரண்டு வாள்களில் ஒரு வாளை ஜேமி லானிஸ்டருக்குக் கொடுப்பார், டைவின் லானிஸ்டர். அதுமட்டுமன்றி, இழந்த கைக்குப் பதிலாக தங்க உலோகத்தில் செய்த செயற்கை `கை'யை ஜேமிக்குப் பொருத்திவிடுவார். மொத்த கிங்ஸ் லேண்டிங்கும் ஜோஃப்ரி பராத்தியன் - மார்கேரி டைரல் திருமணத்திற்காகத் தயாராகிக்கொண்டிருக்கும். அதற்காக மார்டெல் குடும்பத்தைச் சேர்ந்த ஒபேரின் மார்டெல்லும் வந்திருப்பார். ஆனால், அவருடைய நோக்கம் வேறாக இருக்கும். `என் சகோதரியைக் கொன்ற கிரிகோர் க்ளிகேனையும், அதற்கு உத்தரவு கொடுத்த டைவின் லானிஸ்டரையும் கொல்வதற்கு இதுதான் சரியான சமயம்' என்று டிரியன் லானிஸ்டரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். 

மறுபக்கம் எஸ்ஸோஸில் டினேரியஸின் டிராகன்கள் அசுர வளர்ச்சிகளைப் பெற்று வரும். அன்சல்லீடு படைத் தளபதி க்ரே வார்மையும், யூங்காய் நகரைச் சேர்ந்த டாரியோ நஹாரிஸும் `இருவரும் சேர்ந்து டினேரியஸுக்குப் பாதுகாப்பாக இருப்போம்' என உறுதியெடுத்துக்கொள்வார்கள். அஸ்டோபர், யூங்காய் நகரைத் தொடர்ந்து இப்போது மரீன் எனும் இடத்திற்குப் பயணப்படுவார், டினேரியஸ். வெஸ்டிரோஸில் சான்ஸா தன் குடும்பத்தை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்க, டிரியன் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார். இருப்பினும் ஆறுதல் சொல்லி சான்ஸாவாக்கான இடத்தையும் கொடுத்து, தான் காதலித்துக்கொண்டிருக்கும் `ஹோர்' என்று அழைக்கப்படும் ஷேவுடன் உல்லாசமாக இருந்து வருவார். 

ஜான் ஸ்நோ தப்பித்ததையடுத்து தங்களது படையைப் பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கும், ஒயில்டுலிங்ஸ். தப்பித்து காஸ்டில் ப்ளாக் திரும்பிய ஜான் ஸ்நோ, நைட்ஸ் வாட்ச்சின் சில ஆளுமைகளிடம் ஒயில்டுலிங்ஸைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். இப்போது அப்படியே போல்டன் குடும்பம் பக்கம் திரும்புவோம். தியோன் க்ரேஜாய்யை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ராம்சே போல்டன், முழுமையாக அவரின் அடையாளத்தை அழித்து `ரீக்' என்று பெயரிட்டு தனக்கான அடிமையாக மாற்றி வைத்திருப்பார். ஸ்டார்க் குடும்பத்தைத் தீர்த்துகட்டிய ரூஸ் போல்டன் தனது மகனான ராம்சே போல்டனிடம் மிஞ்சியிருக்கும் ப்ரான் ஸ்டார்க்கையும், ரிக்கன் ஸ்டார்க்கையும் கண்டுபிடிக்கும்படி சொல்வார். 

டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8

ஜேமி லானிஸ்டர் தனக்குக் கை இழந்ததும், `இனி என்னால் சண்டையிட முடியாது. நான் இனி வீரனாக இருக்க முடியாது' என டிரியன் லானிஸ்டரிடம் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார். இதைக் கேட்கும் டிரியன் தன்னுடைய பாதுகாவலர் ப்ரானை வரவழைத்து ஜேமிக்கு ஒரு கையில் சண்டையிடப் பயிற்சி கொடுக்கச் சொல்வார். பின், மொத்த கிங்ஸ் லேண்டிங் ராஜ்ஜியமும் ஜோஃப்ரி பராத்தியனின் திரும்பண நிகழ்ச்சிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும். திருமண நிகழ்வில் டிரியன் லானிஸ்டரைக் கிண்டல் செய்யும் விதமாக அவர் கொடுத்த பரிசை அவமதித்து, சில `டுவார்ஃப்'களை ஆடவைத்துக்கொண்டிருக்கும் ஜோஃப்ரி, திடீரெனத் தன் குரல்வலையைப் பிடித்துக்கொண்டு விழுந்துவிட, மொத்த ஊரும் பரபரப்பாகிவிடும். எதுவும் பேச முடியாத நிலையில் செர்சி லானிஸ்டர் மடியில் படுத்துக்கொண்டு, டிரியனை கைகாட்டிவிட்டு இறந்துவிடுவார் அவர். மொத்த ஊரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும். இதற்கு நடுவே ஒருவர் வந்து சான்ஸா ஸ்டார்க்கைத் தப்பிக்க வைத்துவிடுவார். இதற்குப் பின் டிரியன் லானிஸ்டர் சிறையடைக்கப்படுவார். 

கதை அப்படியே ப்ரான் ஸ்டார்க்கின் பக்கம் திரும்பும். ஜோஜன், மீரா, ஹோடோர் ஆகியோருடன் பயணத்துக்கொண்டிருந்த ப்ரான் ஸ்டார்க், தன்னுடைய எதிர்காலப் பார்வையில் சில விஷயங்களைப் பார்ப்பார். தலையும் புரியாமல், வாலும் புரியாமல் வந்துபோகும் அந்தக் காட்சியில் தெளிவாகத் தெரிவது மூன்று கண் கொண்ட காக்கை மட்டும்தான். ஜோஃப்ரி பராத்தியனின் இறப்புக்குப் பின் அங்கிருந்து தப்பித்த சான்ஸா, ஒரு கப்பலில் பயணப்படும்போது பீட்டர் பெயிலஷைப் பார்க்கிறார். ஜோஃப்ரியின் இறப்புக்கும் இவருக்கு தொடர்பிருப்பது சான்ஸாவுக்குத் தெரியவரும். `கவலைப்படாதே உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன்' என வாக்களிக்கும் பீட்டர் பெய்லிஷ், சான்ஸாவை வேல் எனும் இடத்திற்குப் பயணப்பட வைப்பார். 

ஜோஃப்ரி பராத்தியன் இறந்ததைத் தொடர்ந்து, அரியணையில் அமர அவரது சகோதரர் டோமன் பராத்தியன் தயாராகிக்கொண்டிருப்பார். மார்கேரி டைரல்லின் பாட்டி, `செர்சி டோமனின் மனதை மாற்றுவதற்குள் அவரைத் திருமணம் செய்துகொள்' என்று அறிவுரை வழங்கிக்கொண்டிருப்பார். ஜோஃப்ரி பராத்தியனின் பிணத்தைப் பார்த்து `இதற்கெல்லாம் காரணம் டிரியன் லானிஸ்டர்தான். அவனைக் கொல்ல வேண்டும்' என்று ஜேமி லானிஸ்டரிடம் அழுதுகொண்டிருப்பார். அதற்குப் பிறகு நடப்பதெல்லாம் சென்ஸார் கட்! 

டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8

அம்மா, அப்பா, அண்ணன் என எல்லோரையும் இழந்த விரக்தியில் பயணித்துக்கொண்டிருப்பார், ஆர்யா ஸ்டார்க். அப்போது தனக்கு லைஸா என்ற ஒரு அத்தை மட்டும்தான் இருக்கிறார் என்று சாண்டோர் கிளிகேனிடம் சொல்வார். `சரி வா. அவரிடம் உன்னை ஒப்படைக்கிறேன்' எனச் சொல்லி, வேல் எனும் இடம் நோக்கிப் பயணத்தைத் தொடர்வார்கள். ஆம், சான்ஸா ஸ்டார்க் பயணித்துக்கொண்டிருக்கும் அதே இடத்துக்குத்தான். 

செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்குள் இருக்கும் டிரியன், அடுத்தடுத்து பிளாக் மேஜிக்குகளை செய்துகொண்டிருக்கும் ஸ்டானிஸ் பராத்தியன் - மெலிஸாண்ட்ரே, ஒரே இடத்துக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் ஆர்யா ஸ்டார்க் - சான்ஸா ஸ்டார்க், மீண்டும் நைட்ஸ் வாட்ச்சிற்குத் திரும்பும் ஜான் ஸ்நோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது, ப்ரான் ஸ்டார்கின் பயணம் எனச் சாதாரணமாக கதை பயணித்துக்கொண்டிருக்கும். 

கடைசியாக, சிறையிலடைக்கப்பட்ட டிரியன் லானிஸ்டரரைக் குற்றவாளியெனப் பலி சுமத்தி தண்டனை வழங்குவதற்காக கூண்டில் நிறுத்தியிறுப்பார்கள். இதெல்லாம் டிரியனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்காது. காரணம், அங்கிருக்கும் அவரது அப்பாவில் ஆரம்பித்து சொந்தச் சகோதரி செர்சி லானிஸ்டர் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், டிரியனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல அப்போது அங்கே வந்திருப்பது, டிரியனின் காதலி ஷே! இதைப் பார்த்ததும் டிரியனின் மனம் நொறுங்கிவிடும். சுற்றியிருக்கும் மக்களும் டிரியனைக் குற்றவாளி போல் பார்ப்பார்கள்.

டிரியன் கேட்டுக்கொண்ட, ஒண்டிக்கு ஒண்டி சண்டை.. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்' - அத்தியாயம் 8

அனைத்தையும் பார்த்துச் சகிக்க முடியாமல் டிரியன் சொல்லும் வார்த்தைகள் இவை, ``நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த ஊரையும், நன்றி மறந்த ஊர் மக்களையும் ஸ்டானிஸ் பராத்தியனிடமிருந்து காப்பாற்றினேன். அங்கே உங்களை உயிரிழக்கச் செய்திருக்க வேண்டும். நான் குற்றவாளிதான். இதுதானே நீங்கள் கேட்க விரும்புவது! ஆனால், நான் `டுவார்ஃபா'கப் பிறந்ததுதான் என்னுடைய குற்றம். அதனால்தானே எல்லோரும் என்னை அருவருப்பாய்ப் பார்க்கிறீர்கள். ஆனால், நான் ஜோஃப்ரி பராத்தியனைக் கொல்லவில்லை. அவன் செய்யும் செய்கைகளுக்கு எல்லாம் அவனை என் கையாலே கொல்ல வேண்டுமென்ற வெறி இருந்தது. ஆனால், நான் அவனைக் கொல்லவில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் ஜோஃப்ரிக்காக இழக்கமாட்டேன். இங்கே நீதி கிடைக்காது என்று தெரியும். என்னுடைய விதியை அந்தக் கடவுளே தீர்மானிக்கட்டும். I Deman a Trail by Combat!" என்பதுதான் இவருடைய வார்த்தைகள். டிரையல் பை காம்பெட்டைப் பற்றி நிறைய இடத்தில் சொல்லியிருக்கிறேன். குற்றம்சாட்டப்பட்டவரும், குற்றம்சாட்டியவரும் ஒண்டிக்கு ஒண்டி சண்டைப் போட்டுக்கொள்வதுதான் இது. 

ஆனால், டிரியனால் எப்படி சண்டைபோட முடியும், இவருக்கு பதில் யார் சண்டை போடுவார், குற்றம் சாட்டியவர் சார்பாக யார் சண்டை போடுவார்... அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...