Published:Updated:

இனிதே நடைபெற்றது ஆல்யா மானசா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம்!

அய்யனார் ராஜன்
இனிதே நடைபெற்றது ஆல்யா மானசா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம்!
இனிதே நடைபெற்றது ஆல்யா மானசா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம்!

ரச்சிதா - தினேஷ், ஸ்ரீஜா -செந்தில் வரிசையில் இன்னொரு சீரியல் ஜோடியும் ரியல் ஜோடி ஆகியிருக்கிறது. யெஸ். தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் ஜோடியான ராஜா ராணி சஞ்சீவ்- ஆல்யா மானசா இருவரும் இல்லற வாழ்வில் நுழைய இருக்கிறார்கள். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால், சஞ்சீவ், ஆல்யா மானசா இருவர் தரப்பிலும் மேற்கொண்டு பேச மறுத்து விட, இவர்களுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.


`ராஜா ராணி’ சீரியல்ல கமிட் ஆனப்பதான் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமானாங்க. அந்த சீரியலோட `ஹிட்’டுக்கு முக்கியக் காரணம் இவங்களோட ஜோடிப் பொருத்தம்தான். சீரியல்ல சேர்ந்து நடிச்சதால, நிஜத்துல இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சுதா தெரியாது, ஆனா இந்த ஜோடி ரியல் லைஃப்ல சேர்ந்தா நல்லாருக்கும்ல’ என்பது தமிழ் சீரியல் ரசிகர்களின் ஆசையா இருந்தது’ என்றார்கள் .
`ராஜா ராணி’ தொடரில் கமிட் ஆகும் முன்பே சஞ்சீவை டான்ஸ் ஸ்கூல் ஒன்றில் சந்தித்ததாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கும் ஆல்யாதான் முதலில் சஞ்சீவிடம் காதல் புரப்போஸ் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, நிச்சயதார்த்தம்?
விஜய் டிவியின் `விஜய் டெலி அவார்ட்ஸ்’ சின்னத்திரை விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில்தான் ஆல்யா-சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தேறியிருக்கிறது. இருவரும் மோதிரம், மாலை மாற்றி தங்களது திருமணம் குறித்து முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் ஆல்யா - சஞ்சீவ்