Published:Updated:

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்
’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

நிகழ்ச்சியின்போது நடக்கும் சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், ஐந்து விஜே-க்கள்.

``ஸ்டேஜ் ஷோ பண்ற எங்களை மாதிரி விஜே-க்களைப் பார்க்கும்போது, `செம கூலா ஷோ பண்றார் பாரேன்' என நினைப்பீங்க. ஆனா, உண்மையில எங்களைப்போல கஷ்டப்படுறவங்க வேறயாரும் இல்ல மக்களே!" - எனத் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அரவிந்த், தீபக், ஆண்ட்ரூஸ், விக்னேஷ் காந்த் மற்றும் ரியோ. இவர்கள் மீட்டிங் அட்ராசிட்டியைக் கேட்போம்.. ஸாரி, படிப்போம்!

 ``எங்களுக்கு ரெண்டு வித டார்ச்சர் இருக்கு. ஒண்ணு, கூட்டத்துல சிக்கிட்டு தவிக்கிறது. இன்னொண்ணு, மேடையில பேசும்போது காதுல வெச்சிருக்கிற டாக் பேக்." என விக்னேஷ் சொல்லும்போதே, எல்லோரும் வெகுண்டெழுந்து ஆமாங்க... என ஆமோதிக்கிறார்கள். 

ரியோ : ஆமாங்க. ஷோ பண்ணும்போது, மண்டைக்குள் யாரோ உட்கார்ந்து பேசுற மாதிரியே இருக்கும். இந்த டெக்னாலஜி வந்தபிறகு ரொம்பக் கஷ்டமா இருக்கு. 

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

விக்னேஷ் : எப்போ பெரிய ஷோ பண்ணுவேனோ, அப்போல்லாம் கொஞ்சம் பயமிருக்கும். ஏன்னா, பாதி ஷோ முடியும்போது, டாக் பேக்ல இருக்கிறவங்க கமென்ட்ஸ் ஆரம்பிச்சிடுவாங்க.  நிகழ்ச்சி பண்ணும்போது, குரூர மனம் படைத்தர்வர்கள்னு அவங்களை நினைக்கத் தோணும். 

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

அரவிந்த் : நாம ஒரு ஃபுளோவுல போயிட்டிருப்போம். முன்னாடி கேட்ட கேள்வியை திரும்பிக் கேட்கச் சொல்லுவாங்க. நமக்கு என்ன செய்றதுன்னே தெரியாது. அந்த டாக் பேக்கை அப்படியே கழட்டித் தூக்கிப் போட்டுடலாம்னு தோணும். நான் ஒருமுறை யாருக்கும் தெரியாம அதைக் கழற்றி கீழே போட்டு மிதிச்சுட்டேன். அதோட, சரி. இப்போவரைக்கும் டாக் பேக் டார்ச்சர் எனக்கு இல்லை. 

தீபக் : மும்பை மாதிரியான சிட்டியில டெலி புராம்ப்டர் இருக்கும். கிட்டத்தட்ட நியூஸ் வாசிக்கிறவங்க, முன்னாடி இருக்கிற திரையைப் பார்த்து வாசிப்பாங்களே... அந்த மாதிரிதான்! ஒவ்வொண்ணுக்கும் டைம் டேபிள் வெச்சு, அதற்குப் பத்து நாள் பிராக்டிஸ் பண்ணுவாங்க. ஜி தமிழ் ஷோவுக்கு மும்பையில ஹோஸ்ட் பண்ற வாய்ப்பு கிடைச்சப்போதான், நான் அதைப் பார்த்தேன். நாம பத்து நிமிடத்துல முடிக்கிறதை ஒரு மணி நேரத்துக்கு ஃபுட்டேஜ் எடுத்துப்பாங்க. நாங்க புராம்ப்டர் யூஸ் பண்றதில்லைனு சொன்னதும், அவங்களுக்கு செம ஷாக். அதுக்காகவே நம்ம ஆங்கர்ஸுக்கெல்லாம் கிளாப்ஸ் கொடுத்தே ஆகணும்." எனச் சொல்ல, கூடியிருந்த விஜே-க்கள் அனைவரும், அவர்களுக்கு அவர்களே கிளாப்ஸ் கொடுத்துக்கொள்கிறார்கள். 

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

``இதையெல்லாம் தாண்டி, நியூஸ் வாசிக்கும்போது எனக்கொரு அனுபவம் இருந்தது" என்ற ஆண்ட்ரூஸ், அதைச் சொன்னார். ``மெளலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்த சமயம். டியூட்டி முடிச்சுட்டு கிளம்பும்போது, இந்தச் செய்தி வந்ததுவும், என்னைச் செய்தி வாசிக்கச் சொல்லிட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்ச செய்தி, `மெளலிவாக்கம் கட்டடம் இடிந்தது' என்பது மட்டும்தான். `இந்த ஒன்லைனை வெச்சுக்கிட்டு எப்படி சார் முழுச் செய்தியையும் கேரி பண்ண முடியும்'னு கேட்டேன். `நீங்க மைக் மாட்டிக்கிட்டு உட்காருங்க, நான் சொல்றதை அப்படியே சொல்லுங்க'னு சொன்னாங்க. நானும் சரினு வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். மைக்ல செய்தி வரவே இல்லை. தெரிஞ்ச ஒன்லைனைச் சொல்லிக்கிட்டிருக்கும்போது, `அருகே ஒரு பாய் கடை இருந்ததாம்'னு செய்தி சொன்னாங்க. 

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

மெளலிவாக்கம் கட்டடம், அருகே இருந்த பாய் கடையும் இடிஞ்சு விழிந்திருக்கு, அடுக்குமாடிக் குடியிருப்பு.. இந்த மூணு வார்த்தையை வெச்சுக்கிட்டே பேசிக்கிட்டிருந்தேன். `அடுத்த வார்த்தையைச் சொல்லுங்க'னு மைக்ல சொல்லியும் நோ யூஸ்! `முந்தித் தருவது'ங்கிற விஷயத்துக்காக என்ன போராட்டம் பார்த்தீங்களா?!" என்பவரைப் பார்த்து மற்ற நால்வரும் `பிறகு எப்படித்தான் செய்தியை வாசிச்சு முடிச்சீங்க?' என ஆர்வமானார்கள்.  

``பேசிக்கிட்டிருக்கும்போதே, `இப்போது ஸ்பாட்டில் இருக்கிறோம்'னு களச் செய்தியாளரின் வாய்ஸ் வந்ததும்தான் எனக்கு மூச்சே வந்தது. `தீயணைப்பு வாகனம் வந்திருக்கிறது'னு அவர் ஆரம்பிச்சார். அவர் பாடு பெரும்பாடுங்கிறதும் எனக்குப் புரிஞ்சது. அவர் அந்த வண்டியைப் பற்றிச் சொல்லி முடிச்சதும் அடுத்த விஷயத்துக்காகக் காத்திருக்கணும். தவிர, காமெடி என்னன்னா... நான் `பாய் கடை'னு சொன்னது, இஸ்லாமியரோட கடை கிடையாதாம், அது படுத்துத் தூங்குற `பாய்' கடையாம்! அந்த துக்கச் செய்தியை வெற்றிகரமா மக்கள்கிட்ட பதிவு பண்றதுக்குள்ள பாதி உயிர் போயிடுச்சு!" எனப் பெருமூச்சு விடுகிறார், ஆண்ட்ரூஸ். 

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

``எனக்கு சீனியர் ஹோஸ்ட் கூட ஷோ பண்ணும்போது ஒரு கம்ஃபர்ட் மிஸ் ஆகுறமாதிரி இருக்கும். தவிர, ஃபீமேல் கோ-ஹோஸ்ட்கூட வொர்க் பண்ற சான்ஸ் கிடைச்சதே இல்லை" என விக்னேஷ் சொல்ல, ``நான் இதுவரை பாவனாகூட மட்டும்தான் ஹோஸ்ட் பண்ணியிருக்கேன். நான் திணரும்போதெல்லாம் அவங்கதான் என்னைக் காப்பாத்துவாங்க" என்கிறார், ரியோ. 

’’ 'டாக் பேக்' கொடுமை, 'பாய் கடை' அட்ராசிட்டி..!’’ 5 வி.ஜே-க்களின் அனுபவங்கள்

``2006-லிருந்து டிடி-கூடதான் ஆங்கரிங் தொடர்ந்தது. அவருக்கும் எனக்கும் ஒரேமாதிரி சிந்தனை இருக்கும். சில நேரத்துல நானும் அவங்களும் ஒரே வார்த்தையைச் சொல்லி முடிக்கிறதைப் பார்த்திருப்பீங்க. பிறகு சன் டிவி ஐஸ்வர்யாகூட ஹோஸ்ட் பண்ணேன். அதிகமா ஹோஸ்ட் பண்ணது, டிடி-கூடத்தான். அதுக்குப் பிறகு அர்ச்சனா, இப்போது, ஜி தமிழ் மகேஸ்வரி. கோ ஹோஸ்ட் பண்ணும்போது, அவங்க நம்மை டாமினேட் பண்ணுவாங்கனு நினைக்காம இருந்தா போதும், எந்தப் பிரச்னையும் இல்லை!" என அட்வைஸ் கொடுத்து முடித்து வைக்கிறார், தீபக்.  

விஜே-க்களின் சந்திப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு