Published:Updated:

`ஐ.பி.எல் 2019 சாம்பியன் சி.எஸ்.கே!’ - பழைய கால்குலேஷனைச் சுட்டிக்காட்டும் பாவனா

அய்யனார் ராஜன்
`ஐ.பி.எல் 2019 சாம்பியன் சி.எஸ்.கே!’ - பழைய கால்குலேஷனைச் சுட்டிக்காட்டும் பாவனா
`ஐ.பி.எல் 2019 சாம்பியன் சி.எஸ்.கே!’ - பழைய கால்குலேஷனைச் சுட்டிக்காட்டும் பாவனா

`ஜோடி’, `சூப்பர் சிங்கர்’ என என்டர்டெய்ன்மென்ட் ஏரியாவில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பாவனா `ப்ரோ கபடி’ மூலம் ஸ்போர்ட்ஸ் பக்கம் வந்தார். கபடியிலிருந்து கிரிக்கெட்டுக்கு வந்தது சென்ற ஐ.பி.எல் தொடரில். இரண்டாவது ஆண்டாக இந்த வருடமும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வலம் வந்துகொண்டிருப்பவரை மேட்ச் இடைவேளையில் சந்தித்தேன்.

‘சினிமா ஸ்டார்களை ஹேண்டில் பண்ணினப்ப இருந்த கம்ஃபர்ட், ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்கிட்ட கிடைக்குதா? – கேட்டதும்,

‘உங்களுக்கொரு விஷயம் சொல்லட்டுமா, சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் தன்னோட ’லக்கி சார்ம்’மா என்னை நினைக்குது. எப்படின்னு கேளுங்க, ஒரு பழைய கதை சொல்றேன்’ என்றார்.

`அதையும் சொல்லிடுங்க..

``2010ல் சி.எஸ்.கே சாம்பியன். மறு வருஷம் அதாவது 2011 ஐபிஎல் சென்னையில் தொடங்குது. அதுக்கு ஒரு `வெல்கம் டின்னர்’ அரேஞ்ச் பண்ணியிருந்தாங்க. அதை ஹோஸ்ட் செய்ய எனக்கு சான்ஸ் கிடைச்சது. (அதுவரை மேட்ச் பார்க்கக் கூட சேப்பாக்கம் ஸ்டேடியம் பக்கம் போனதில்லையாம்). அந்த வருஷமும் சாம்பியன் சி.எஸ்.கேதான்.

எட்டு வருஷம் தாண்டி 2018க்கு வாங்க. சாம்பியன் அதே சி.எஸ்.கே. ஆச்சர்யமான நிஜம் என்னன்னா, அதுக்கு அடுத்த வருஷமான இந்த வருஷ வெல்கம் டின்னரையும் நானேதான் ஹோஸ்ட் பண்ணினேன். அப்ப இந்த வருஷமும் கப் சென்னைக்குதானே கிடைக்கணும்? என்கிறார்.

`அஸ்ட்ராலஜி, கோ இன்சிடென்சி சென்டிமென்ட்லாம் பாவனாவுக்கு நிறையவே உண்டாம்.’ (தற்போது அஸ்ட்ராலஜி படித்து வருகிறார்  ) தொடர்ந்து இன்னொரு சம்பவத்தையும் பகிர்ந்தார்..

``முதல் தடவை வெல்கம் டின்னர் ஹோஸ்ட் பண்ணின அந்த நாள்ல ரவி சாஸ்திரியைச் சந்திச்சேன். அவர்கிட்ட பேசிட்டிருந்தப்ப, `உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் செட் ஆகும்னு எனக்குத் தோணுது, மும்பை வந்து ட்ரை பண்ணுங்க’ன்னு `நியோ கிரிக்கெட் சி.இ.ஒ ஹேரி கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சார். ஹேரி எனக்கு ஒரு ஆஃபர் தந்தார். `ஒரு மாசம் டைம் தர்றேன், கிரிக்கெட்டைக் கத்துகிட்டு வாங்க’ன்னார். ஆனா அந்தச் சமயத்துல எனக்கு என்கேஜ்மென்ட் நடக்க இருந்தது. அந்த விஷயத்தை அவர்கிட்டச் சொன்னேன். `எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை. கல்யாணமா கிரிக்கெட்டாங்கிறது உங்க சாய்ஸ்’னு கறாரா சொல்லிட்டார். யோசிச்சுப் பார்த்துட்டு கல்யாணத்தை டிக் செய்துட்டு ஒதுங்கிட்டேன். ஆனா, இப்ப பாருங்க, கிரிக்கெட் என்னை விடாமத் துரத்தி இழுத்துட்டு வந்திடுச்சில்லையா?

பாவனா கணக்கு பலிக்குமா பார்க்கலாம்.