Published:Updated:

``என் காதலுக்கு ரெட் சிக்னல்தான் விழுந்திருக்கு... க்ரீன் மாறும்னு நம்புறேன்!'' - `நாயகி' செளமியா

``என் காதலுக்கு ரெட் சிக்னல்தான் விழுந்திருக்கு... க்ரீன் மாறும்னு நம்புறேன்!'' - `நாயகி' செளமியா
``என் காதலுக்கு ரெட் சிக்னல்தான் விழுந்திருக்கு... க்ரீன் மாறும்னு நம்புறேன்!'' - `நாயகி' செளமியா

``என் காதலுக்கு ரெட் சிக்னல்தான் விழுந்திருக்கு... க்ரீன் மாறும்னு நம்புறேன்!'' - `நாயகி' செளமியா

ன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'நாயகி'. இந்த சீரியலில் சுஹாசினியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் செளமியா. பேரழகி, ரோஜா ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். படிச்சது வக்கீல், பிடிச்சது சீரியல், காதல் என்று சகலமும் பேசினார் செளமியா.

''என்னுடைய சொந்த ஊர் மதுரை. நான் வக்கீலுக்குப் படிச்சிருக்கேன். படிச்சது வக்கீலுக்காக இருந்தாலும் எனக்கு நடிக்கணும்னு ஆசை. அப்பாவுடைய ஆசைக்காகத்தான் பி.எல் படிச்சேன். எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணுங்கிறதுனால பயங்கர செல்லம். படிப்பு முடிஞ்சதும் மீடியாவுக்குள்ளே போகப்போறேன்னு சொன்னப்போ என் அப்பா சம்மதிக்கலை. சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று வருஷமா என் அப்பாவை ஒத்துக்க வைக்க போராடிட்டு இருந்தேன். என்னுடைய பெரியப்பா கனகசபை மூலமா 'பேரழகி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அவர் சொன்னதுக்கு அப்புறம்தான் அப்பா ஓகே சொன்னாங்க.

'பேரழகி' சீரியலைத் தொடர்ந்து 'ரோஜா' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, இந்த இரண்டு சீரியலில் என்னுடைய ரோல் பெருசா ஒண்ணுமில்லை. ஆரம்பத்தில் இந்த ஃபீல்டில் படிப்படியாகத்தான் ஃபேம் ஆக முடியும்னு தெரியலை. அதனால ரொம்ப டல்லாகிடுவேன். ஒரு மாசத்துல இரண்டு நாள் மட்டும் ஷூட்டிங் போகிற மாதிரி இருக்கும். இப்போ அந்தக் குறையை 'நாயகி' டீம் தீர்த்து வைச்சிட்டாங்க.

'நாயகி' சீரியல் எனக்குன்னு ஓர் அடையாளத்தைக் கொடுத்துச்சு. இந்த சீரியலுக்குள் வந்ததுக்கு அப்புறம்தான் நடிப்பு பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன். நெகட்டிவ் ரோலில் பண்றது செம ஜாலியா இருக்கு. வெளியில் எங்கே போனாலும் சுஹாசினியா என்னை அடையாளம் கண்டுபிடிக்கிறாங்க. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய லிப் மூவ்மன்ட் சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. பெண் ரசிகைகள் பலர் அதைப் பாராட்டுறாங்க. சரவணா ஸ்டோர்ஸூக்கு ஷாப்பிங் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு ஒரு பெண் என்கிட்ட வந்து 'உங்க லிப்ஸ் க்யூட்டா இருக்கு'ன்னு சொன்னாங்க. அந்நேரம் எப்படி ரியாக்ட் பண்றதுன்னே எனக்குத் தெரியலை. நீங்க சூப்பரா நடிக்கிறீங்க... பயங்கர க்யூட்டா இருக்கீங்கன்னு ஆடியன்ஸ் சொல்லும்போது உண்மையாகவே ஹாப்பியா இருக்கு. ஏன்னா, இந்த மாதிரியான பாராட்டுக்காக ஏங்கியிருக்கேன்'' என்றவரிடம் ஃபேமிலி சப்போர்ட் குறித்துக் கேட்டோம்.

''என் அப்பாவுக்கு என்னை மாஜிஸ்ட்ரேட் ஆகப் பார்க்கணும்னு ஆசை. அதுக்குத்தான் என்னை பி.எல் படிக்க வைச்சாங்க. படிக்கும்போது நானும் அப்படியாகணுங்குற எண்ணத்தில்தான் படிச்சேன். ஸ்கூல், காலேஜ்ல கல்ச்சுரல் ஈவண்ட்ல கலந்துப்பேன். என்கூட இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நீ அழகா இருக்க... சூப்பரா டான்ஸ் ஆடுற... ஏன் நடிக்கப் போகக் கூடாதுன்னு எனக்குள்ள நடிப்பு ஆசையை விதைச்சிட்டாங்க. நான் எங்க வீட்டுல ஒரே பொண்ணு. பொண்ணுங்குறதுனாலதான் இந்த ஃபீல்டில் என்னை அனுப்ப அப்பா யோசிச்சாங்க. இப்போ இந்த ஃபீல்டைப் பற்றி புரிஞ்சுகிட்டாங்க. எனக்காக மதுரையிலிருந்து அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க. இதைவிடப் பெரிய சப்போர்ட் வேணுமா?'' என்றவரிடம் அவர் காதல் குறித்துக் கேட்டேன்.

''நானும் அவரும் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து காதலிக்கிறோம். அவங்க வீட்டுல எங்க காதலுக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க. ஆனா, என் அப்பா மட்டும் எங்க காதலுக்கு ரெட் சிக்னல்தான் கொடுக்கிறாங்க. அவரும் சீக்கிரம் ஓகே சொல்லிடுவாருன்னு நம்பிக்கை இருக்கு. நான் நடிக்கப்போறேன்னு சொன்னப்போ உன் விருப்பபடி பண்ணு... ஆனா, ரொம்ப கவனமா பண்ணுன்னு சொல்லுவார். தள்ளி நின்னு எனக்கு பாதுகாப்புக் கொடுப்பாங்க. இப்போதைக்கு கரியர்ல ஸ்ட்ராங்காகணும். அதுக்கு அப்புறம் திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கலாம்னு இருக்கோம்'' எனப் புன்னகைக்கிறார் செளமியா. 

அடுத்த கட்டுரைக்கு