Published:Updated:

``சித்ராஅம்மா நிறைய கரெக்‌ஷன்ஸ் சொல்லித்தந்தாங்க!"- `சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' வின்னர் ஹிரித்திக்

வெ.வித்யா காயத்ரி
``சித்ராஅம்மா நிறைய கரெக்‌ஷன்ஸ் சொல்லித்தந்தாங்க!"- `சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' வின்னர் ஹிரித்திக்
``சித்ராஅம்மா நிறைய கரெக்‌ஷன்ஸ் சொல்லித்தந்தாங்க!"- `சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' வின்னர் ஹிரித்திக்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஹிரித்திக் வெற்றி வாகை சூடியிருக்கிறார். ஐம்பது லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற்றிருக்கிறார். ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தவர் நம்மைப் பார்த்ததும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

``எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. டைட்டில் வின் பண்ணுவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. என் பெற்றோர்கள், டீச்சர்ஸ், நடுவர்கள்னு எல்லோருமே என்னை சப்போர்ட் பண்ணாங்க. சித்ரா அம்மா நிறைய கரெக்‌ஷன்ஸ் சொல்லி... அதை நான் புரிஞ்சுக்கிற அளவுக்கு பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க. கடினமா பிராக்டீஸ் பண்ணிட்டே இருந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டா குரல் கெட்டுப் போயிடும்னு இந்த சீசன் முடியுற வரைக்கும் ஐஸ்கிரீம் சாப்பிடாமலேயே இருந்தேன். இன்னைக்கு போதும், போதும் என்கிற அளவுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் போறேன். என்னை சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் என் நன்றிகள்! எனப் புன்னகைக்கிறார், ஹிரித்திக்.