Published:Updated:

`எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு!'- நீரஜாவை கரம்பிடித்த மானஸ்

வெ.வித்யா காயத்ரி
`எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு!'-  நீரஜாவை கரம்பிடித்த மானஸ்
`எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு!'- நீரஜாவை கரம்பிடித்த மானஸ்

சின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்குக் கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. மானஸ் சாவலி தன்னுடைய காதலி நீரஜாவைத் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்து நீரஜாவிடம் பேசினோம்.

``எங்களுடைய பத்து வருடக் காதல் கனவு இப்போ நிறைவேறியிருக்கு. ரெண்டு பேரும் பயங்கர ஹாப்பியில் இருக்கோம். நிஜமாகவே நம்மளுக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிறோம். எங்களுடைய பெற்றோர்களுக்கு எங்க காதலை எடுத்துச் சொல்லி பெரியவங்க சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் எங்களுடைய திருமணம் நடந்திருக்கு. மானஸ் ரொம்பவே கேரிங்கான பர்சன். அவர் என் லைஃப்ல கிடைச்சது என் பாக்கியம். கிட்டத்தட்ட பத்து வருஷமா காதலிக்கும்போது எப்படி அன்பா இருந்தோமோ அதே மாதிரிதான் இனியும் இருப்போம்'' என்றார்.

வாழ்த்துகள் மானஸ் - நீரஜா!