Published:Updated:

``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்!'' - சிலாகிக்கும் சங்கீதா

வெ.வித்யா காயத்ரி
``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்!'' - சிலாகிக்கும் சங்கீதா
``சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க `அழகு' டீம்!'' - சிலாகிக்கும் சங்கீதா

ன் மியூசிக் விஜேவாக வலம் வந்தவர் விஜே சங்கீதா. விஜேவாக இருந்தவர் நடிகையாக அறிமுகமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அழகு' சீரியலில் வில்லியாக வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு நாள்களுக்கு முன் பிறந்தநாள்.

``நான் எப்பவும் பிறந்தநாளைக் கொண்டாடமாட்டேன். அன்னைக்கு வழக்கம்போல எனக்கு ஷூட்டிங் இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டேன். என்னுடைய `அழகு' டீம் எனக்காகப் பிறந்தநாள் கேக் வாங்கி சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஏன்னா, இவங்க யார்கிட்டேயும் இன்னைக்கு எனக்குப் பிறந்தநாளுங்குற விஷயத்தையும் நான் சொல்லலை. ஆனா, அவங்க என்னுடைய ஃபேஸ்புக்ல பார்த்துட்டு சர்ப்ரைஸா கேக் வாங்கிட்டு வந்துருக்காங்க. நான் ரொம்பவே ஹாப்பி'' என்றவர் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்தார்.

``என்னுடைய பலமும், பலவீனமும் என் கோபம்தான். ரொம்ப அதிகமா கோபப்படுவேன். தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கோபப்படமாட்டேன். சரியான காரணத்துக்காக கோபப்படுவேன். எல்லோர்கிட்டேயும் ஜாலியா பேசுவேன். எனக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேர் தான். எப்பவும் சிரிச்சிட்டே ஆங்கரிங் பண்ணிட்டு இருப்பேன். இப்போ ஷூட்டிங்கில் பிஸியா இருக்கிறதனால எந்த ஷோவும் பண்ண முடியலை. ஆங்கரிங்கை ரொம்பவே மிஸ் பண்றேன்.. ஏன்னா, அது எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலை. ஆசைப்பட்டு விஜேவானேன் என்றவரின் முகத்தில் அத்தனை சந்தோஷம்! செட்டுல எல்லோர்கூடவும் ஜாலியா பேசுவேன். ரேவதி மேம் ரொம்பவே ஸ்வீட். நேற்று ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நான் நல்லா நடிச்சேன்னு போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. அவங்களை மாதிரி மனம் விட்டுப் பாராட்ட யாராலும் முடியாது. சின்னச் சின்ன நுணுக்கங்களையும் கவனிச்சு பாராட்டுவாங்க. அவங்ககிட்ட எனக்குப் பிடித்த குணமே அதுதான்'' என்றவரின் காஸ்டியூம் செலக்‌ஷன் குறித்துக் கேட்டோம்.

காஸ்டியூம் பொறுத்தவரைக்கும் நான் மேக்ஸிமம் செலக்ட் பண்ணுவேன். என்னைத் தவிர்த்து என் அம்மா சூப்பரா செலக்ட் பண்ணுவாங்க. பெரும்பாலும் ஆன்லைனில் டிரெஸ் செலக்ட் பண்றது என் வழக்கம். சீரியலில் நான் போடுற காஸ்டியூம்ஸும் நானேதான் செலக்ட் பண்றேன். எங்க வீட்டுல இரண்டு நாய்கள் வளர்க்கிறேன். அவங்ககூடதான் அதிகமா நேரம் செலவழிப்பேன். வீட்டில் என் பொழுதுபோக்கு என்னன்னு கேட்டா அவங்களைத் தவிர வேறெதுவுமில்லைங்குறது தான் என் பதில். ஷூட்டிங்கில் பிஸியா இருக்கிறதனால அவங்ககூட நேரம் செலவழிக்க முடியலை. என்னைக்காவது லீவு கிடைச்சா அந்த நாள் முழுக்க அவங்க கூடவே தான் இருப்பேன். அவங்களுக்காக வெளியில் போகிறதை தவிர்ப்பேன். நான் அவங்களை மிஸ் பண்ற மாதிரி தானே அவங்களும் என்னை மிஸ் பண்ணுவாங்க எனப் புன்னகைக்கிறார், சங்கீதா.