Published:Updated:

''மாமியார் நான் நடிக்கிற சீரியலைப் பார்க்க மாட்டாங்க... காரணம் கேட்டா'' - ஹேமா ராஜ்

வெ.வித்யா காயத்ரி

"எவ்வளவுக்கு எவ்வளவு பாஸிட்டிவ் கம்மென்ட்ஸ் வருதோ அதே அளவுக்கு நெகட்டிவ் கம்மென்ட்ஸும் வரும். அஜித், விஜய்க்கே ஹேட்டர்ஸ் இருக்கும்போது நமக்கு இருக்க மாட்டாங்களான்னு சிரிச்சிட்டே எல்லா கம்மென்ட்ஸையும் கடந்துடுவேன்."

''மாமியார் நான் நடிக்கிற சீரியலைப் பார்க்க மாட்டாங்க... காரணம் கேட்டா'' - ஹேமா ராஜ்
''மாமியார் நான் நடிக்கிற சீரியலைப் பார்க்க மாட்டாங்க... காரணம் கேட்டா'' - ஹேமா ராஜ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த சீரியலில் க்யூட் ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து செமையாக நடிப்பவர் ஹேமா ராஜ். சீரியலில் இவருடைய கதாபாத்திரத்துக்கும், நிஜ கதாபாத்திரத்துக்கும் பயங்கர வித்தியாசங்கள் உண்டு. அவரோடு ஒரு ஃப்ரெண்ட்லி சாட்!

``உங்க கதாபாத்திரத்துக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு?’’

`` 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஆடியன்ஸ்கிட்ட மிகுந்த வரவேற்பை பெற்றுக்கொடுத்திருக்கு. இப்போ நான் வெளியில் போனா பலரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்கிறாங்க. நான் நடிக்கிற மீனா கதாபாத்திரத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் வந்துருக்கு. எவ்வளவுக்கு எவ்வளவு பாஸிட்டிவ் கம்மென்ட்ஸ் வருதோ அதே அளவுக்கு நெகட்டிவ் கம்மென்ட்ஸும் வரும். அஜித், விஜய்க்கே ஹேட்டர்ஸ் இருக்கும்போது நமக்கு இருக்க மாட்டாங்களான்னு சிரிச்சிட்டே எல்லா கம்மன்ட்ஸையும் கடந்துடுவேன். நம்மளுடைய வேலையை ஒழுங்கா பார்த்தா கிடைக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்.’’

``ஃபேமிலி சப்போர்ட்?’’

``என் அம்மா வீட்டில் எனக்கு எவ்வளவு சப்போர்ட் கொடுத்தாங்களோ அதே அளவுக்கு என் கணவர் வீட்டில் கொடுக்குறாங்க. திருமணத்துக்கு முன்னாடி வரைக்கும் என் அம்மாதான் என்னுடைய பலமா இருந்தாங்க. இப்போ என் கணவர்தான் என் பலம். நானும் என் மாமியாரும் பயங்கர குளோஸ். ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறதனால வீட்டு வேலைகளை என்னால பார்க்க முடியாது. அவற்றையெல்லாம் ஒருநாளும் அவங்க பெருசா எடுத்துக்கிட்டது இல்லை. என் மாமியார் நிறைய சீரியல் பார்ப்பாங்க. ஆனா, நான் நடிக்கிற சீரியலை மட்டும் அவங்க பார்த்ததே இல்லை. ஏன் பார்க்கலைன்னு கேட்டா.. உன்னைதான் நேரடியாகவே பார்க்கிறேனேன்னு சொல்லுவாங்க எனப் புன்னகைக்கிறார்.’’

``நிறைய ஃபோட்டோ ஷூட் பண்றீங்களே... மாடலிங் பண்ண ஆர்வம் இருக்கா?’’

``எனக்கு தீம் ஃபோட்டோகிராபின்னா ரொம்ப பிடிக்கும். கான்செப்ட்டில் அதுக்கு ஏற்ற மாதிரியான இடம், டிரெஸ், ஜூவல்ஸ்ன்னு ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்து பண்ணணும். அந்த ஃபோட்டோ ஷூட்தான் என் ஃபேவரைட். இப்போ அதிகமா பிரைடல் ஃபோட்டோஷூட் பண்றேன். மாடலிங் பண்றதுக்கும் ரெடியாக இருக்கேன். வாய்ப்பு வந்தால் அதையும் டிரை பண்ணிப் பார்க்கலாம்.’’

``டஸ்க்கி ஸ்கின் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மாடலிங் வாய்ப்பு வராது என்கிற நிலை மாறியிருக்குன்னு நினைக்குறீங்களா?’’

``முன்னாடியெல்லாம் டஸ்க்கி ஸ்கின் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் மாடலிங் வாய்ப்புகள் வராது. இப்போது அந்த முறை மாறிடுச்சு. எனக்கும் டஸ்க்கி ஸ்கின் டோன்தான். இன்ஸ்டாகிராமில் சிலர் , 'இதெல்லாம் ஒரு முகமா..?'ன்னுலாம் கம்மென்ட் போடுவாங்க. என் முகத்தைக் கேலி பண்ணி நிறைய பதிவுகள் போட்டிருக்காங்க. நம்ம இப்படியெல்லாம் பேசுறோமே இதெல்லாம் அவங்களை ஹர்ட் பண்ணுமான்னு கொஞ்சம்கூட அவங்க யோசிச்சதில்லைன்னு நினைக்கிறேன். வாழப்போகிற ஒரு வாழ்க்கையில் முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களை சந்தோஷப்பட வைக்கலாமே. இப்படி விமர்சனம் பண்ற பலரும் தங்களுடைய முகத்தை மறைச்சு வைச்சிட்டு வெளியில் ஈஸியா அடுத்தவங்களைக் கேலி பண்றாங்க. முன்னாடி இதையெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டு அழுதுருக்கேன். இப்போ அப்படியெல்லாம் இல்லைங்க. என்னைச் சுற்றி இருக்கிற பாஸிட்டிவான விஷயங்களை மட்டும் எடுத்துக்கிறேன்.’’

``டிக் டாக் தடை பற்றி உங்க கருத்து?’’

``பலரும் டிக் டாக்கை அவங்களுடைய ஃபேமுக்காகப் பண்றாங்க. அது தப்பில்லை. ஆனா, அங்கேயும் சிலர் ஈஸியா அடுத்தவங்களை ஹர்ட் பண்ணிடுறாங்க. அதைத் தாங்கிக்க முடியாம இரண்டு, மூன்று பேர் தற்கொலை செஞ்சுருக்காங்க. இப்படியெல்லாம் நடக்கிறதை கேள்விப்படும்போது டிக்டாக்குக்குத் தடை விதிக்கிறது நல்லதுதான்னு தோணுது.’’ 

``மறக்க முடியாத தருணம்?’’

`` 'விஜய் டெலி அவார்ட்ஸ்' போயிருந்தேன். அவார்டு ஜெயிக்கலைன்னாலும் நாமினேஷன்ல வருவோம் என்கிற நம்பிக்கையில்தான் அங்கே போயிருந்தேன். எதிர்பார்க்காத நேரத்துல 'பொன்மகள் வந்தாள்' சீரியல் கேமரா மேனுக்கு விருது கொடுக்க கூப்டாங்க. ஆர்ட்டிஸ்டுக்கு விருது கொடுக்க கூப்டாங்கன்னா நானும் ஆர்ட்டிஸ்ட் அதனால ஓகே! ஆனா, கேமராமேனுக்கு விருது கொடுக்கச் சொல்லி கூப்டாங்க. அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. சீரியலைப் பொறுத்தவரைக்கும் கேமராமேன் ரொம்பவே முக்கியமானவங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நான் விருது கொடுத்ததை என் வாழ்க்கையில் எப்பவும் மறக்க முடியாது. அதுதான் என் வாழ்க்கையின் பொக்கிஷ மொமன்ட்.’’