Published:Updated:

`எல்லாம் நிஜம்,  ஆனா ஆளை மாத்திட்டீங்களே!'- காதலன் குறித்து `யாரடி நீ மோகினி’ நட்சத்திரா

அய்யனார் ராஜன்
`எல்லாம் நிஜம்,  ஆனா ஆளை மாத்திட்டீங்களே!'- காதலன் குறித்து `யாரடி நீ மோகினி’ நட்சத்திரா
`எல்லாம் நிஜம்,  ஆனா ஆளை மாத்திட்டீங்களே!'- காதலன் குறித்து `யாரடி நீ மோகினி’ நட்சத்திரா

’ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் ஹீரோயின் நட்சத்திராவுக்குத் திருமணம்;  தமிழில் அவர் அறிமுகமான முதல் படமான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் ஹீரோவாக வந்த ராம்தேவ்தான் மாப்பிள்ளை’ என்றொரு நியூஸ். நட்சத்திராவின் சொந்த ஊரான கேரளாவிலிருந்து கிளம்பிய அடுத்த சில மணி நேரங்களில்... அவரைத் தொடர்புகொண்டோம்.

‘'என்னங்க இது குண்டைத் தூக்கிப் போடுறீங்க, நான் காதலிக்கிறது உண்மை. அந்தக் காதலுக்கு நான் எங்க வீட்டுல அனுமதி வாங்கினது மட்டுமில்லாம, என்னோட லவ்வர் அவரோட வீட்டுலயும் அனுமதி வாங்கியாச்சு. ஆக மொத்தம் ரூட் க்ளீயர். எல்லாம் நிஜம்.  ஆனா, ஆளை மாத்திட்டீங்களே’' என்று பதற்றமானார்.


புரியும்படியா நீங்களே சொல்லிடுங்க என்றதும், ’நான் காதலிக்கிறது, நான் அறிமுகமான ‘கிடா பூசாரி மகுடி’ படத்துல வில்லனா நடிச்ச தமிழை. தமிழும் நானும் அந்தப் படத்துல நடிக்கிறப்ப அறிமுகமானோம். நட்பு, ஒருகட்டத்துல காதலாகிடுச்சு. சில வருஷங்களா நாங்க காதலிச்சிட்டு வர்றோம்.  காதலை பக்குவமா எடுத்துட்டுப் போனதுல, எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. அவருக்கு கன்ஸ்ட்ரக்‌ஷன் பிசினஸ் போயிட்டிருக்கு. எனக்கு ‘யாரடி நீ மோகினி’ இப்ப ஒளிபரப்பாகிட்டிருக்கு. இன்னொரு  புராஜெக்ட்டும் தயாரா இருக்கு. அதனால, கல்யாணம் செய்துக்க கொஞ்ச நாள் எடுக்கலாம். ஆனா, ’நானும் தமிழும்தான் கல்யாணம் செய்துக்கப்போறோம்’கிறதை நல்லா தெளிவா போடுங்க’ என்கிறார்.