Published:Updated:

``கரன்ட் பில், சாப்பாடு, பெட்ரோல்... ரொம்ப யோசிக்கிறோம்!'' - மணிமேகலையின் மறுபக்கம்

``கரன்ட் பில், சாப்பாடு, பெட்ரோல்... ரொம்ப யோசிக்கிறோம்!'' - மணிமேகலையின் மறுபக்கம்

 "'எங்களுக்கு யாரும் ஹெல்ப் பண்ணலை. நாங்களே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கோம்'னு கெத்தா சொல்லுவோம்!"

``கரன்ட் பில், சாப்பாடு, பெட்ரோல்... ரொம்ப யோசிக்கிறோம்!'' - மணிமேகலையின் மறுபக்கம்

 "'எங்களுக்கு யாரும் ஹெல்ப் பண்ணலை. நாங்களே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கோம்'னு கெத்தா சொல்லுவோம்!"

Published:Updated:
``கரன்ட் பில், சாப்பாடு, பெட்ரோல்... ரொம்ப யோசிக்கிறோம்!'' - மணிமேகலையின் மறுபக்கம்

ன் மியூசிக் விஜேவாக கலக்கியவர் விஜே மணிமேகலை. இவருடைய காதல் கணவர் ஹூசைன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் செலிபிரிட்டி ஃபேமாக இருந்தாலும் வீட்டிற்குள் பக்காவான குடும்பத்தலைவியாக இருக்கிறார், மணிமேகலை. அவருடைய பர்சனல் விஷயங்களை அவருக்கே உரித்தான புன்னகையுடன் நம்மிடையே பகிர்ந்தார்.

"நார்மலான குடும்பத்தலைவியை விட டிரிபிள் மடங்கு பொறுப்போடு ஓடிட்டு இருக்கேன். ஏன்னா, எங்க வீட்டைப் பொறுத்தவரைக்கும் நானும், ஹூசைனும் மட்டும்தான். எல்லா பிளானும் நாங்கதான் டிரை பண்ணணும். ஐடியா சொல்ல பெரியவங்க யாரும் இல்லைங்கிறதனால நிறைய ரிஸ்க்கும், சவால்களும் இருக்கும். வீட்டுல காசு இல்லைன்னா சண்டை போட்டு, கோபத்தை வெளிக்காட்டாமல் இதுதான் நம்மளுடைய நிலைமை. அடுத்து என்ன பண்ணலாம்னு பேசுவோம்.

நானும் சரி, ஹூசைனும் சரி ரொம்ப கூல். ஐயோ பிரச்னை, பிரச்னைன்னு ஓட மாட்டோம். பிரச்னைகளைக் கூட கலாய்ச்சிட்டு ஜாலியா கடந்திடுவோம். எங்களுக்குள்ளே சந்தோஷமான விஷயத்தை எப்படி ஹாப்பியா பகிர்வோமோ அப்படித்தான் கவலைப்படுற விஷயத்தையும் ஷேர் பண்ணுவோம். எனக்கு ஹூசைன் மட்டும்தான். அவனுக்கு நான் மட்டும்தான்..! எங்களுக்கு நாங்க மட்டுமே ஆறுதல். அதனால எல்லா விஷயத்தையும் பேசி முடிவெடுப்போம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போ எங்களுடைய குடும்பத்தை நாங்க வேலை பார்த்துதான் ரன் பண்ண முடியும். ஒருநாள் எங்க வேலையில் நாங்க கவனம் செலுத்தலைன்னாலும் பாதிப்பு எங்களுக்குத்தான். அதனால, ஓடிட்டே இருக்கோம். நாளைக்கான வாழ்க்கைக்காகன்னு சொல்லிட்டு இன்னைக்கான வாழ்க்கையை வாழாம இல்லைங்க. ஒவ்வொரு நாளையும் சந்தோஷமா கொண்டாடி வாழ்ந்துட்டு இருக்கோம்" என்றவரிடம், "வீட்டில் பேச முயற்சி எடுத்தீங்களா?" எனக் கேட்டோம்.

"எங்களுடைய திருமணத்துக்கு முன்னாடியே வீட்டில் புரிய வைக்க எவ்வளவோ முயற்சி எடுத்தோம். இப்போ நாங்க வீட்டுல பேச எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. ஏன்னா, அவங்க எதிர்பார்க்கிற நிலைமைக்கு நாங்க இன்னும் போகலை. எங்க இலக்கை அடைஞ்சிட்டு அவங்ககிட்ட நிச்சயம் பேச முயல்வோம். இப்போ நாங்க பேசினால், அவங்ககிட்ட நாங்க எதையாவது எதிர்பார்க்கிறோம்னு நெகட்டிவா அவங்க நினைக்க வாய்ப்பு இருக்கு. பாசமெல்லாம் இல்லாம இல்லை. பேசணுங்குற ஆசையெல்லாம் இருக்கு. நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பா பேச முயற்சி செய்வோம்.

எப்பவும் ஏப்ரல், மே மாசம்னாலே எங்க வீடு கலகலன்னு இருக்கும். விடுமுறையை ஜாலியா கொண்டாடுவோம். இப்போ ஏப்ரல், மேனாலும் சரி,  ஆகஸ்ட், செப்டம்பர்னாலும் சரி நானும், ஹூசைனும் மட்டும்தான். எங்க வீட்டுல நான் கேட்காமலேயே எல்லாமே எனக்கு கிடைச்சது. நான் வேலை பார்த்துதான் எங்க குடும்பம் ரன் ஆகணுங்குற நிலையெல்லாம் இல்லை. ஆனா, இப்போ அப்படியில்லை. எல்லா நாளும் நமக்கு எல்லாமே கிடைச்சிட்டா அதுல திரில்லே இருக்காதுல. புதுசு, புதுசா ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டு கெத்தா குடும்பம் நடத்துறேன். 

உண்மையைச் சொல்லணும்னா நிறைய பொறுப்பு வந்துருக்கு. முன்னாடியெல்லாம் என் ரூம்ல ஏசி ஓடினால் அதை ஆஃப் பண்ணாமலேயே கிளம்பிப் போயிடுவேன். இப்போ, ஒரு மணி நேரம் ஏசி ஓடிடுச்சுல ரூம் கூலிங் ஆகிட்டு போதும்னு ஏசியை ஆஃப் பண்றேன். அதே மாதிரி, முன்னாடி அவ்வளவு சாப்பாடு வேஸ்ட் பண்ணுவேன். இப்போ கொஞ்சம் கூட வேஸ்ட் பண்றதில்லை. அப்படியே சாப்பாடு மிஞ்சினா கூட இல்லாதவங்களுக்கு கொடுத்து விடுறேன். ஏதோ ஒன்றுக்காக நாம கஷ்டப்படும்போது அதோட அருமை நிச்சயம் நமக்கு புரியும். எதிர்காலத்துல நாங்க நல்ல நிலைமையில் இருக்கும் போது, 'எங்களுக்கு யாரும் ஹெல்ப் பண்ணலை. நாங்களே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கோம்'னு கெத்தா சொல்லுவோம்!" என்றவரிடம், அடுத்தகட்ட பிளான் குறித்து கேட்டோம்.

ஆங்கரிங் தொடர்ந்து பண்ணுவேன். ஹூசைனும் அவருடைய ஃபீல்டில் ஒர்க் பண்றார். இரண்டு பேரும் கரியரில் என்ன பண்ணலாம்னு பேசி முடிவெடுத்து வைச்சிருக்கோம். இப்போதைக்கு மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை ஃபைனல் நடக்கப் போகுது அதுக்கான பிராக்டீஸை ஆரம்பிக்கணும்" எனப் புன்னகைக்கிறார், மணிமேகலை.

சினிமா எக்ஸ்க்ளூசிவ்,  சுவாரஸ்யமான பேட்டிகள் உள்ளிட்ட விகடனின் செய்திகளை உங்கள் டெலிகிராம் ஆப்பில் பெற இணைந்திடுங்கள்! https://t.me/vikatanconnect
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism