Published:Updated:

`சுசீலா அம்மா மாதிரி பெரிய சிங்கராகணும்!' - `சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' அனுஷ்யா

விஜய் டிவி 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' நிகழ்ச்சியில் ஆடியன்ஸை ஈர்த்த போட்டியாளர் அனுஷ்யா. ஃபைனலில் அனுஷ்யாவுக்கு முதல் மூன்று இடங்கள்கூட கிடைக்காதது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது என்றே சொல்லலாம். அனுஷ்யாவுக்கு ஆதரவாகப் பலரும் கமென்ட்ஸை கொட்டித் தீர்த்தார்கள். அனுஷ்யா, 'என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமைக்கு மிகுந்த வருத்தம் அடைகிறேன்' எனப் பதிவிட்டிருந்தார். அவரிடம் பேசினோம்.

`சுசீலா அம்மா மாதிரி பெரிய சிங்கராகணும்!' - `சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' அனுஷ்யா

``எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கிற என் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. இத்தனை பேருக்கு என் பாட்டு பிடிச்சிருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ நான் பத்தாம் வகுப்புப் படிக்கப்போகிறேன். இவ்வளவு நாள் படிப்பில் கவனம் செலுத்தாமல் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன். இனி படிப்பில் கவனம் செலுத்தப்போறேன்.

சூப்பர் சிங்கர் ஜூனியரில் 8 வயசாக இருக்கும்போது கலந்துக்கிட்டேன். அப்போ பெற்றோர் ஆசைக்காக அந்தப் போட்டியில் கலந்துக்கிட்டேன். இந்த சீஸனில் நானே ஆசைப்பட்டு அம்மா, அப்பாகிட்ட கேட்டேன். நான் ரொம்ப அடம்பிடிச்சதால ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. இந்த சீஸன் முழுவதும் கடினமா பிராக்டீஸ் பண்ணினேன். அதுக்கான பலனும் இப்போ கிடைச்சிடுச்சு. மியூசிக் இல்லாமல் என்னால இருக்க முடியாது. வெளியில் எங்கே பார்த்தாலும் என்னைப் பாராட்டிப் பேசுறாங்க. இப்படியொரு பிளாட்ஃபார்ம் ஏற்படுத்திக் கொடுத்த விஜய் டிவி-க்கு ரொம்ப நன்றி. எனக்கு பி.சுசீலா அம்மா மாதிரி பெரிய பாடகியாகணும்ங்குறதுதான் ஆசை. அதுக்காகக் கடினமா உழைப்பேன்'' என்றார் புன்னகையுடன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு