Published:Updated:

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

Published:Updated:
``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

வீஜே, சின்னத்திரை நடிகை, ஈவன்ட் மேனேஜர், பிசினஸ் உமென் எனப் பன்முகம் கொண்டவர் நடிகை சாய் காயத்ரி. வீஜேவாக அறிமுகமான இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `ஈரமான ரோஜாவே' சீரியலிலும், `சிவா மனசுல சக்தி' சீரியலிலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். தவிர, அண்ணா நகரில் `Lets Dance Studio' என்கிற டான்ஸ் ஸ்டூடியோவையும் நடத்தி வருகிறார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காயத்ரியை ஓர் இடைவெளியில் சந்தித்துப் பேசினோம்.

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

என்னுடைய சொந்த ஊர் மதுரை. விஸ்காம் படிக்கிறதுக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு ஷிப்ட் ஆனேன். விஸ்காம் படிச்சிட்டு இருக்கும் போதே சில தமிழ் சாட்டிலைட் சேனலில் ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். 2011-ல் படிப்பு முடிஞ்சதும் விஜய் டிவியில் `கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிச்சேன். கிட்டத்தட்ட ஒன்பது சாட்டிலைட் சேனல்களுக்கும் மேலாக ஆங்கரிங் பண்ணியிருக்கேன். இப்போ ஜெயா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் `கில்லாடி ராணி' என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கப் போறேன். இதெல்லாம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் டான்ஸ் ஸ்டூடியோவையும் ரன் பண்ணிட்டு இருக்கேன் எனத் தன்னைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு பிசினஸ் பற்றிப் பகிர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலாக கார்ப்பரேட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். அப்படி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் போது நிறைய பேர் அடுத்து இதை எப்படிப் பண்ணலாம்னு ஐடியா கேட்பாங்க. நானும் சில ஐடியாஸ் சொல்லுவேன். அப்படியே போய்ட்டு இருக்கும் போதுதான் நாம ஏன் ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. `Lets Do Events'ன்னு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி 2014-ல் ஓப்பன் பண்ணினேன். ஈவன்ட்ஸூக்கு ஆபீஸ்ல பெரும்பாலும் வேலை இருக்காது. ஆபீஸ் சும்மாவேதான் இருந்துச்சு. அதை யூஸ் பண்ணலாமேன்னு ஈவன்ட் மேனேஜ்மென்ட்டுடன் `Lets Dance Studio'ன்னு ஒரு டான்ஸ் ஸ்டூடியோவையும் ஓப்பன் பண்ணினேன். ஏன்னா, ஈவன்ட்ஸூக்கு டான்ஸ் அதிகமாக தேவைப்படும். அதுமட்டுமல்லாமல் சென்னையில் முதன் முறை அண்ணா நகரில் ஜூம்பா டான்ஸை நாங்கதான் அறிமுகப்படுத்தினோம். அதே மாதிரி, 2 வயசுல இருந்து குழந்தைங்களை டிரெயின் பண்ணி ஹிப்-ஹாப் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிற ஸ்டூடியோன்னா அது எங்களுடையதுதான்! டான்ஸ்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் ஆடும் போது மட்டும்தான் என் முகத்துல ஒரிஜினல் சிரிப்பைப் பார்க்க முடியும்.

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

நம்மால் முடியும் என்கிற எண்ணம் எனக்கு அதிகமாகவே இருந்துச்சு. இதெல்லாமும் ஒரே நாளில் என்னிடம் வந்தது கிடையாது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர், வீஜே, ஆங்கர், சீரியல் நடிகை, ஈவன்ட் மேனேஜர், டான்ஸ் ஸ்டூடியோன்னு படிப்படியா முன்னேறினேன். என் பிசினஸில் எப்படி கவனமா இருந்தேனோ அதே அளவுக்கு என் மீடியா கரியரையும் விட்டுறக் கூடாதுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். இது எதுவுமே நான் பிளான் பண்ணி பண்ணினதில்லை. எல்லாமே அதுவா அமைஞ்சது. அமைஞ்ச வாய்ப்பை நான் சரியா பயன்படுத்திக்கிட்டேன் என்றவரிடம் ஃபேமிலி சப்போர்ட் குறித்துக் கேட்டோம்.

நம்மளுடைய கரியரில் நம்ம ஃபேமிலி ஃபினான்ஷியலா ஹெல்ப் பண்ணணும்னு எதிர்பார்க்கிறதை விட அவங்க ஃப்ரீடம் கொடுக்குறது ரொம்பவே முக்கியம். அந்த ஃப்ரீடம் அவங்க கொடுக்குறதுக்கு `நான் பாதுகாப்பா இருப்பேன்' என்கிற நம்பிக்கையை அவங்களுக்குக் கொடுக்கணும். ஃபேமிலி சப்போர்ட் இருக்கிறதனாலதான் `என்னால முடியாதது ஒன்றுமில்லை' என்கிற நம்பிக்கை எனக்குள்ளே வந்தது.

``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி

நம்மளுடைய வேலையில் எவ்வளவு பர்ஃபெக்டா இருந்தாலும் பொண்ணுங்குற காரணத்தினால் நம்மளை தவறா பேசுபவர்கள் இருக்கத்தான் செய்றாங்க. என்னுடைய வீட்டுல உள்ளவங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். வெளியில் ஒவ்வொருத்தரிடமும் என்னை நான் நிரூபிக்க முடியாது. அவங்க எல்லோரையும் நான் பொருட்படுத்த மாட்டேன். என் வேலையில் மட்டுமே என் கவனம் இருக்கும். நான் ஓடிட்டு இருக்கும்போது யார் என்ன பேசுறாங்கன்னு கேட்டுட்டு இருக்கறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் கிடையாது. பொண்ணுங்குறது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பலம். பத்து வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னைக்கு எல்லோருக்கும் என்னைத் தெரியுதான்னு அதுக்கு காரணம் என்னுடைய உழைப்பு மட்டுமே...!" என்றவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.  

"நான் தொடர்ந்து வொர்க் பண்ணிட்டே இருக்கேன். ஆனாலும், பண்ற வொர்க்கை முழுசா மனசுக்கு திருப்தியா பண்ணணும்னு நினைக்கிறேன். லைஃப் எதை நோக்கி ஓடிட்டு இருக்கோ அது பின்னாடியே நானும் போறேன். இப்படியெல்லாம் பண்ணணும், இதையெல்லாம் சாதிக்கணுங்குற மாதிரியெல்லாம் எந்த பிளானும் இல்லை. என்னுடைய உலகம்னா அது என் அப்பா, அம்மா, தம்பி, அக்கா மட்டும்தான். அவங்க கூட இருந்துட்டு மறுநாள் என் வேலையை ஆரம்பிக்கும்போது புதியதா ஒரு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் உணர்கிறேன். நான் ஏதாவது ஒன்றை எட்டிப் பிடிச்சிட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது அவங்க முகத்தில் மலர்கிற மகிழ்ச்சியைப் பார்க்கிறதுக்காக எவ்வளவுனாலும் கஷ்டப்படலாம்" எனப் புன்னகைக்கிறார், சாய் காயத்ரி.