Published:Updated:

`தாயான பின்னர் கூடுதல் கேரிங்கும் பொறுப்பும் வந்திருக்கு!' - சீரியல் செலிபிரிட்டிகள் ஷேரிங்ஸ் #MothersDay

வெ.வித்யா காயத்ரி

ண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம். நமக்குப் பிடித்தமான செலிபிரிட்டிகளிடம் தாய்மை அடைந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிய பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட வித்தியாசங்கள் குறித்துக் கேட்டோம்.

சுஜிதா :

`தாயான பின்னர் கூடுதல் கேரிங்கும் பொறுப்பும் வந்திருக்கு!' - சீரியல் செலிபிரிட்டிகள் ஷேரிங்ஸ் #MothersDay

என் பையன் பிறக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க லைஃப் ரொம்பவே நார்மலா போச்சு. அவன் எங்களைப் பார்த்து வளர்றான். அவன் முன்னாடி வீட்டுல எப்படி பேசணும்னு எல்லாமே கவனிக்க ஆரம்பிச்சேன். அவனுக்காகவே என்னை அதிகமா மாத்திக்கிட்டேன். நான் கர்ப்பமானது முன்னாடி எங்க அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, நான் கர்ப்பமான பிறகு என்னுடைய அம்மாவை முன்பைவிட பத்து மடங்கு அதிகமா பிடிக்க ஆரம்பிச்சது. கர்ப்பகால அனுபவத்தை எல்லா பொண்ணுங்களுமே என்ஜாய் பண்ணனும். அந்த மொமன்ட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  என் அம்மா நான் ஆசைப்பட்டு கேட்குற எல்லாத்தையுமே வாங்கிக் கொடுக்க மாட்டாங்க. ஆனா, இப்போ என் பையன் கேட்குற எல்லாத்தையுமே நான் வாங்கிக் கொடுக்கிறேன். நான் என் பையனை இளவரசன் மாதிரி வளர்க்கிறதுனால அவன் மூலமா நானும் இப்போ ராஜகுமாரி ஆகிட்டேன்.

நீலிமா ராணி  :

`தாயான பின்னர் கூடுதல் கேரிங்கும் பொறுப்பும் வந்திருக்கு!' - சீரியல் செலிபிரிட்டிகள் ஷேரிங்ஸ் #MothersDay

தாயான பிறகு இந்த உலகத்தை நீங்க பார்க்கிற பார்வையே வித்தியாசமானதாகத்தான் இருக்கும். பொறுப்பு அதிகமாகிடும். ஒரு குழந்தை எங்கேயோ அழுதால்கூட ஐயயோ ஏன் இந்தக் குழந்தை அழுகுதுன்னு மனசு தவிக்க ஆரம்பிச்சிடும். இப்போ, இப்போதான் என் பொண்ணு பேச ஆரம்பிக்கிறா. அவளுடைய மழலை ரொம்பவே க்யூட்டா இருக்கும். எனக்குப் பெண்கள் தினத்தின்போதுதான் வளைகாப்பு நடந்துச்சு. என் பொண்ணு மதர்ஸ் டே அன்னைக்குதான் பிறந்தா. இதெல்லாமே நாங்க பிளான் பண்ணாம நடந்த விஷயம். ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகு கூடுதல் கேரிங்கும், பொறுப்பும் வந்திருக்கு.

ஷமிதா  :

`தாயான பின்னர் கூடுதல் கேரிங்கும் பொறுப்பும் வந்திருக்கு!' - சீரியல் செலிபிரிட்டிகள் ஷேரிங்ஸ் #MothersDay

இந்தக் காலத்து பசங்ககிட்ட மெச்சூரிட்டி லெவல் கொஞ்சம் அதிகம். என் பொண்ணு  ரொம்பவே என்னை புரிஞ்சிப்பா. அவ என் ஃப்ரெண்ட் மாதிரி. நான் ஷூட்டிங்கில் இருக்கிறதனால அவகூட அதிக நேரம் செலவிட முடியாது. அதை அழகா புரிஞ்சிப்பா. நான் அவகூட இருக்கும்போது என்னை நல்லா பார்த்துப்பா. எப்போவாச்சும் மூட் ஆஃப்ல இருந்தேனா, அதைப் புரிஞ்சிகிட்டு என்கிட்ட வந்து என்னைத் திசைதிருப்ப எதையாவது க்யூட்டா பண்ணிட்டு இருப்பா. என் பொண்ணு நான் எதை வாங்கிக் கொடுக்கிறேனோ அதை வாங்கிப்பா. அவளா விருப்பப்பட்டு எதையுமே கேட்க மாட்டா. நீ எது வாங்கிக் கொடுத்தாலும் ஓகேம்மான்னு செம ஸ்வீட்டா நடந்துப்பா.

Vikatan