Published:Updated:

கேபிள் கலாட்டா!

சம்மர் டூர் கிளம்பியாச்சு !படம்: கே.ராஜசேகரன்

கேபிள் கலாட்டா!

சம்மர் டூர் கிளம்பியாச்சு !படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:

ரிமோட் ரீட்டா

##~##

''மறுபடியும் சீரியலுக்குள்ள வந்தாச்சா மேடம்?னுதானே கேட்கப் போற ரீட்டா..?!''

- சிரிச்ச முகத்தோட குஷ்பு!

''கலைஞர் டி.வி-யில ஒளிபரப்பாகிற 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ சீரியலின் கதை, கிரியேட்டிவ் ஹெட், தயாரிப்பு, நாயகினு பல பரிமாணங்கள்ல ஜொலிக்கிற குஷ்புவை, சேனல் ரிப்போர்ட்டரா பார்க்க வந்த இந்த ரீட்டாவுக்கு வேற என்ன மேடம் கேட்கத் தோணும்னு?''னு சொன்னதும், குண்டு கன்னத்துல இன்னும் கொஞ்சம் சிரிப்பு!

''ஜீ தமிழ் சேனலோட 'ருத்ரா’ தொடருக்கு அப்புறம், ரெண்டரை வருஷம் இடைவெளி விட்டு, இப்போ திரும்பவும் வந்திருக்கேன் ரீட்டா. சுதந்திரமா, ரிலாக்ஸ்டா வேலை செய்றதுல சின்னத்திரை ரொம்பவே சௌகரியம். 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ சீரியலோட 'ஓவியா’ கேரக்டருக்கான கருவையும், கதையையும் வளர்த்தேன். அதை அப்படியே ப்ரியன் கையில கொடுத்து... டைரக்ஷன் ஏரியாவை அவர்கிட்ட ஒப்படைச்சுட்டேன்.

கேபிள் கலாட்டா!

நீ சொன்ன மாதிரி... கதை, தயாரிப்பு, நடிப்புனு இந்த சீரியல், இப்போ என்னை படுபிஸியா வெச்சுருக்கு. இது பேய்க் கதை, பழிவாங்குற கதைனு ஆரம்பத்துல மக்களை யோசிக்க வெச்சுட்டு, இப்போ கதை எப்படி போகுதுனே யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை சுவாரசியமா நகர்த்திக்கிட்டிருக்கோம்!''னு சொன்ன குஷ்புகிட்ட,

கேபிள் கலாட்டா!

''பல வருஷங்களா, இப்படி மீடியா கமிட்மென்ட்லயே இருக்கீங்களே... அவந்திகா, அனந்திகா ரெண்டுபேரும் அம்மாவை மிஸ் பண்ண மாட்டாங்களா..?''னு கேட்டா,

''நெவர்!''னு அடிச்சு சொல்றாங்க குஷ்பு.

''அவந்திகா, செவன்த் போறாங்க. அனந்திகா, ஃபிஃப்த் போறாங்க. அவங்களுக்கு நான் ரொம்ப ஃப்ரெண்ட்லியான, பிரியமான அம்மா. அவங்களுக்காக என் கேரியரை கவனத்தோட அட்ஜெஸ்ட் செஞ்சுக்குவேன். இப்போதைக்கு சின்னத்திரையில் 'மானாட மயிலாட’, 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ ஷெட்யூல் மட்டும்தான் போயிட்டு இருக்கு. எப்பவும் 'டே ஷூட்’ மட்டும்தான் ஒப்புக்குவேன். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல குழந்தைகள்தான் என் உலகம். ஞாயிற்றுக்கிழமைகளில் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஷூட் போக மாட்டேன். ஸோ, என் குழந்தைங்களுக்கு நான் பொறுப்பான அம்மாவாதான் எப்பவும் இருக்கேன்!''னு படபடத்தவங்ககிட்ட சுந்தர்.சி பற்றிக் கேட்டேன்.

''சுந்தர் எப்பவும் சினிமா சினிமானு பிஸியா இருக்கிற ஆளு. என்னோட கேரியருக்குள்ள அவரும், அவரோட சினிமாவுக்குள்ள நானும் எந்த பகிர்தலையும், விவாதங்களையும் வெச்சுக்கறதில்ல. வேலை சமயத்துல வேலை. அது முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டா... நல்ல பேரன்ட்ஸா குழந்தைங்ககூட நேரம் போகும். அதுதான் எங்க லைஃபை ஸ்மூத்தா கொண்டு போகுது.

சம்மர் வந்துட்டா... சென்னையில நாங்க ஒரு மாசத்துக்கு காணாமல் போயிடுவோம். இந்த சம்மருக்குக்கூட வெயிலே இல்லாத ஒரு ஜில் தேசத்தைத் தேடிட்டு இருக்கோம். செலக்ட் பண்ணினவொடன, குடும்பத்தோட ஜாலி டூர் கிளம்பிடுவோம். ஒரு மாசமும் என் கணவர், குழந்தைகள் மட்டும்தான்!''னு சந்தோஷமா முடிச்சாங்க குஷ்பு!

கூல் ஃபேமிலி!

சமர்த்துப் பொண்ணு!

'அரசி' சீரியலுக்கு பிறகு, ஒரு பவர்ஃபுல் அண்ட் ஹோம்லி கேரக்டர் கிடைக்காதானு ஏங்கிக்கிட்டிருந்த லாவண்யாவுக்கு, அப்படி ஒரு கேரக்டரா அமைஞ்சுருக்கு... 'கலைஞர்’ டி.வி-யில ஒளிபரப்பாகிற 'சூரிய புத்திரி’ சீரியல்ல வர்ற கிருஷ்ணா கேரக்டர்.

ஆந்திர தேசத்தைச் சேர்ந்த இந்த பொண்ணு, மீடியாவுக்கு வந்து 15 வருஷம் ஆச்சுதாம். ஷாப்பிங் பிடிக்காதாம், டியர் ஃப்ரெண்ட்ஸ் கிடையாதாம், போர் அடிச்சாலும் தியேட்டர், மால்னு ஊர் சுத்துற பழக்கமும் இல்லையாம்.

ஷூட் இல்லைனா... நீலாங்கரை, மயிலாப்பூர் பக்கம் அம்மணியைப் பார்க்கலாம். ஏன்னா, ஆத்தா... தீவிர சாய்பாபா பக்தை!

சாயி சரணம்!

கேரள நிலா!

'பிள்ளை நிலா’... சன் டி.வி-யோட புதுவரவு சீரியல். 'ராகவ், சமிதானு பார்த்துப் பழகிய முகங்களுக்கு நடுவே, ராகவ்வுக்கு தங்கையா, 'ஹேமா’ கேரக்டர்ல வர்ற பொண்ணு க்யூட்டா இருக்கே’ நீங்க எல்லாரும் நினைக்கறீங்கதானே!

கேபிள் கலாட்டா!

பேரு திவ்ய பத்மினி. மலையாளப் பொண்ணு. 2007-லயே சின்னத்திரையில் என்ட்ரி ஆயிட்டவங்க. சின்னத்திரைக்கு வர்றதுக்கு முன்ன 'புலி வேஷம்’, 'விளையாட வா’னு ரெண்டு படங்கள்ல நடிச்சுருக்காங்க. 'பிள்ளை நிலா’ தொடர்ல நல்ல ரோல் கிடைக்கவே, இப்ப சென்னைவாசி ஆகிட்ட திவ்யா, 'அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ்’ல மாஸ்டர் டிகிரி  முடிச்சுருக்காங்க!

வாழ்க... வளர்க!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

ஏ... ச்சூப்பரா இருக்கு!

''ஆதித்யா டி.வி-யில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் 'சொல்லுங்கண்ணே... சொல்லுங்க’ நிகழ்ச்சி ரொம்ப ஜாலியாக இருக்கிறது. நிகழ்ச்சி நடத்தும் இமான் அண்ணாச்சியின் பேச்சும், அணுகுமுறையும் அருமை!

மக்கள் கூடியிருக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களிடம் 'டார்ச் இருக்குல்லா டார்ச்... அதை தமிழ்ல எப்டி சொல்வீங்க?’ என்று கேட்க 'எங்க வீட்ல டார்ச்தான்’ என்று சொல்வார்கள். 'ஏ... பாத்தியளாயா... இவுங்க வீட்ல டார்ச்சை டார்ச்சுனுதான் சொல்வாங்களாம்' என்று சொல்லிவிட்டு நக்கலாக அவர் பார்க்கும் பார்வை... குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

இதேபோல ஒவ்வொரு தடவையும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அவர் அடிக்கும் லூட்டி... கனத்துக்கிடக்கும் மனதை லேசாக்கிவிடுகிறது'' மனம்விட்டு பாராட்டுகிறார் பெங்களூருவைச் சேர்ந்த ராதா நரசிம்மன்.

ரொம்ப ரொம்ப புதிய தலைமுறை!

''சமீபத்திய வரவான 'புதிய தலைமுறை' செய்தி சேனல் வரவேற்கத்தக்க வகையில் இருக்கிறது. அதேசமயம், செய்தி வாசிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள்... நடிகைகள்போல் உடை உடுத்தியும், சிகை அலங்காரம் செய்தபடியும் வருவது... செய்தியிலிருந்து நேயர்களைத் திசைதிருப்புவது போலிருக்கிறது. செய்தியை பார்க்க/கேட்க தோன்றவில்லை, மாறாக அவர்களையே பார்க்கத் தோன்றுகிறது. இந்த விஷயத்திலும் சேனல்காரர்கள் அக்கறை காட்டினால்... கூடுதல் பலமாக இருக்கும்!'' என்று ஆலோசனை தருகிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த சோஃபி எபினேசர்.

போதுமே சூர்யா புராணம்!

''விஜய் டி.வி-யில் சூர்யா நடத்தும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி... அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வது போலவே இருக்கிறது. பொது அறிவை வளர்க்கக் கூடிய நிகழ்ச்சி என்று பார்த்தால்... எப்போது பார்த்தாலும் சூர்யா புராணமாகவே இருக்கிறது. போட்டிகளில் பங்கேற்க வருபவர்கள்... அவர்களின் நண்பர்கள் - உறவினர்கள், 'போன் எ ஃப்ரெண்ட்’ என்று வருபவர் அனைவருமே... சூர்யாவைப் பற்றியே புகழ்ந்து பேசுவதும்... அதற்கு அவர் சிரித்துக் கொண்டே இருப்பதும்... சேனலை மாற்ற வைத்துவிடுகிறது.

அளவுக்கு மிஞ்சினால்... அமிர்தமும் நஞ்சு என்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று எச்சரிக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சகுந்தலா.