லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: சின்னத்திரை நடிகர்கள்... ஃபேவரைட் யார்? - கேம்பஸ் ரிப்போர்ட்

சின்னத்திரை நடிகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சின்னத்திரை நடிகர்கள்

ர. பொன்விலாஷினி

2K kids: சின்னத்திரை நடிகர்கள்... ஃபேவரைட் யார்? - கேம்பஸ் ரிப்போர்ட்

‘என்னது, காலேஜ் பசங்க சீரியல் பார்ப்பாங்களா..?’னா கேட்குறீங்க..?! நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம். சீரியல் ஹீரோயின்ஸ் பத்தி வழக்கம்போல ‘சேனல் சைட் டிஷ்’ பக்கங்கள்ல படிச்சுக்கோங்க. இங்க, தங்களோட ஃபேவரைட் சீரியல் ஹீரோஸ் பத்தி சொல்றாங்க கேர்ள்ஸ்.

‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத்

‘பாரதியைப் பிடிச்சதுக்கு காரணம், அந்த க்யூட் ஸ்மைல்தான்’னு அருண் பிரசாத்துக்கு பொக்கே கொடுக்குறாங்க கேர்ள்ஸ். விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்ல சாருக்கு என்னவோ ஆன்டி ஹீரோ கேரக்டர்தான். ஆனாலும் `வி லைக் ஹிம்’னு பிடிவாதமா சொல்றாங்க பொண்ணுங்க. ‘அவர் பாவம்ங்க, அவரோட ஃபிரெண்ட் என்ன சொன்னாலும் நம்புறாரு’னு வேற அவர் கேரக்டருக்கு வக்கீல் வேலை பாக்குறாங்க. ஆனாலும், ‘பொண்டாட்டிய சந்தேகப்படுற கேரக்டரை ஹீரோனு சொல்றதையே வி அப்ஜெக்ட் யுவர் ஆனர்’னு சொன்ன பொண்ணுங் களோட கருத்துகளையும் இங்க பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கோம் மை லார்டு.

2K kids: சின்னத்திரை நடிகர்கள்... ஃபேவரைட் யார்? - கேம்பஸ் ரிப்போர்ட்

‘ரோஜா’ அர்ஜுன்

சிபு சுரேன்னு சொல்றதைவிட, சன் டிவி ‘ரோஜா’ சீரியல் ‘அர்ஜுன் சார்’னு அவரை சொல்றதுதான் பிடிச்சிருக்கு கேர்ள்ஸுக்கு. ஃபேன்பேஜ் சும்மா ஓஹோனு இருக்கு. ‘அழகா இருக்காருங்க’, ‘செம்மயா நடிக்கிறாரு’, ‘மனைவிக்கு சப்போர்ட் பண்ற அந்த கேரக்டர்ல மனசை அள்ளிட்டாரு’னு தங்கள் பொன்னான வாக்குகளைப் போடுறாங்க கேர்ள்ஸ். ‘நான் ரோஜா சீரியல் பார்க்குறதே அவருக்காகத்தான்’னு சொல்ற ரசிகைகளும் இருக்காங்கங்கோவ்.

2K kids: சின்னத்திரை நடிகர்கள்... ஃபேவரைட் யார்? - கேம்பஸ் ரிப்போர்ட்

‘செம்பருத்தி’ கார்த்திக்

‘படித்ததில் பிடித்தது மாதிரி... பார்த்ததில் பிடித்தவர் இவர்!'

- பாட்டாவே பாடிட்டாங்க நம்ம கார்த்திக்குக்கு. ஜீ தமிழ் டிவி, `செம்பருத்தி' சீரியல்ல கேர்ள்ஸை ஹார்ட்டின் பட்டன் தட்டவைக்கிற ரொமான்டிக் ஹீரோ. பொண்ணுங்களோட வாட்ஸ்அப் டிபி, ஸ்டேட்டஸ்னு வாழ்றார் மனுஷன். ஏன் இந்த வெறித்தனம்னு கேட்டா, ஹேண்ட்ஸம், கண்ணு, பியர்டு, எக்ஸ்பிரஷன்ஸ்னு கார்த்திக்கிட்ட எல்லாமே பிடிக்குமாம். ‘அம்மா மேல பாசம், மனைவி மேல அன்புனு, மொத்தத்துல பொண்ணுங்க மனசுல டாப்புல இருக்காரு’னு சொல்றாங்க. ‘ரியல் லைஃப்லகூட அவரு ஹீரோதான், ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்காரு’னு எக்ஸ்ட்ரா காரணமும் சொல்றாங்க.

2K kids: சின்னத்திரை நடிகர்கள்... ஃபேவரைட் யார்? - கேம்பஸ் ரிப்போர்ட்

‘இதயத்தை திருடாதே’ நவீன்

கலர்ஸ் தமிழ் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் ‘சிவா’வை நிறைய பொண்ணுங்களுக்குப் பிடிச்சிருக்கு. ‘பார்க்க மாஸா, ஸ்டைலா இருக்காரு’, ‘ஆக்டிங் ரொம்ப கேஷுவலா இருக்கு’, ‘சிம்பிளா இருப்பாரு’, ‘சூப்பரா டான்ஸ் ஆடுவாரு’, ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி சூப்பர்’, ‘வாய்ஸ் நல்லாயிருக்கு’, ‘கேரக்டர் கெத்தா இருக்கு’னு அடுக்குறாங்க காரணங்களை. மொத்தத்துல இதயத்தைத் திருடிட்டாரு நவீன்.