Published:Updated:

மஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி!

மஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி!
மஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி!

வாட்ஸப், யூடியூப் , சமூகவலைதளங்கள் என எங்கே பார்த்தாலும் பழனி சார் தெரியுமா என்ற ரீதியில் அவரது கலக்கப்போவது யாரு சீஸன் 5 நிகழ்ச்சியின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

என்ன சார் செம ஃபேமஸ் ஆகிட்டீங்க போல என்றால், எனக்கு என் மாணவர்கள் தான் முதல் ஆசான். அவங்க கிட்டருந்துதான் என்னோட காமெடிகள நான் எடுக்கறேன் என கலகலவெனப் பேச ஆரம்பித்தார்.

சிரிச்சாதான் அது முகம், சிரிக்கலைன்னா அது முகரைக்கட்ட.. காப்பர் ஒயர்ல கனெக்‌ஷன் குடுத்தா அது மின்சாரம், மஞ்சக் கயித்துல கனெக்‌ஷன் குடுத்தா அதுதான் சம்சாரம்.மஞ்சக்கயித்த கைல கட்டினா காப்பு, ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா அதுதான் ஆப்பு.  ஏன் இப்படி பொண்ணுங்களையே டார்கெட் பண்றீங்க?

கலக்கப்போவது யாரு சீசன் 5ல ஸ்டேண்ட் அப் காமெடில மட்டும் மொத்தம் 4 பேர் இருக்கோம் அதுல மூணு பேரு பொண்ணுங்க. ஒண்ணுக்கூடி ஆண்கள வாரிக்கிட்டு இருக்காங்க. நான் ஒத்த ஆளாவது ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணவேண்டாமா. என்றவர் தொடர்ந்து பேசினார். 

சொந்த ஊரு வேதாரண்யம் ஆருகாட்டுத் துறைங்கற ஒரு மீனவ கிராமம். முத்துக்குமரன் கலைக்கல்லூரியில பேராசிரியரா இருக்கேன்.தமிழ்ல Phd முடிச்சிருக்கேன். பல பேச்சுப்போட்டிகள், மேடை நிகழ்ச்சிகள்னு சின்னப்புள்ளைல இருந்தே ஆர்வமா கலந்துக்குவேன். அப்பறம் இப்பவும் பட்டிமன்றம் , மேடை பேச்சுகள்னு கலந்துக்கறேன். தமிழ்ப் பற்று எனக்குக் கொஞ்சம் அதிகம்.

மஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி!

என் மனைவியும் பேராசிரியர் தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியப் பொருத்தவரைக்கும் எனக்கு அவங்க சீனியர். இதுக்கு முன்னாடி நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில அவங்க கலந்துகிட்டாங்க. இப்பவும், நிறைய டிவி நிகழ்ச்சிகள், கல்யாண மாலைனு அவங்க ரொம்ப பிஸி. எங்களுக்கு ஒரு பொண்ணு பேரு யாழினி.

நான் முதல் முதல்ல அது இது எது நிகழ்ச்சியில தமிழ்ப் பேச்சாளர் க்ரூப்ல டூப்பு பிரிவுல தான் கலந்துகிட்டேன். அது மூலமா அப்படியே கலக்கப்போவது யாரு சீஸன் 5. எனக்கே ஆச்சர்யமாவும், சந்தோஷமாவும் இருக்கு. என் கிட்டயே என் நண்பர்கள், மாணவர்கள்னு என்னோட வீடியோவைக் காட்டி பெருமையா பேசுறாங்க. இதுக்கு முன்னாடி இருந்த போட்டியாளர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு.

ஒரு நாள் நிகழ்ச்சியோட இயக்குநர் என்னைக் கூப்பிட்டு உன் வீடியோ 4 லட்சம் பார்வையாளர்கள கடந்துடுச்சுன்னு சந்தோஷமா சொன்னாங்க. அது எதுலன்னு கூடத் தெரியாது. ஆனாலும் கத்துக்கிட்டு இருக்கேன். எனக்கு சொல்லிக்குடுக்கறதே என்னோட மாணவர்கள் தான். அவங்ககிட்ட தான் என் காமெடிகள், நேரத்துக்கு ஏத்தமாதிரி பேசுற விஷயங்கள்னு எடுத்துக்கறேன்.

மஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி!

எனக்கு ஒரே ஒரு ஆதங்கம், எனக்குத் தமிழ் படிக்க எழுத வராது, கொஞ்சமா பேசுவேன்னு சொல்ற கலாச்சாரம் இப்போ வளர்ந்துகிட்டு இருக்கு. நம்ம மொழிக்கு அது ஆபத்துன்னு நான் சொல்லமாட்டேன். ஏன்னா தமிழ் தன்னைத்தானே செதுக்கிக்கிட்டு வளரக்கூடிய மொழி. அந்த வளர்ச்சிய யாராலயும் எதுவும் பண்ண முடியாது. ஆனால் தாய்மொழி தெரியாதுன்னு சொல்லிக்கிறதுல என்ன பெருமை இருக்கு. குழந்தைகள் ஆங்கிலத்துல படிச்சாலும் வீட்ல தமிழ் சொல்லிக்கொடுங்க. ஏன்னா தாய்மொழி வெறும் மொழி இல்ல, அது நம்ம அடையாளம்.

இங்கேயிருந்து கடல் கடந்து எந்தத்தேசத்துக்குப் போனாலும் நாம தமிழனா தான் மதிக்கப்படுவோம். நிறையப் புத்தகங்கள் படிங்க, படிக்கச் சொல்லுங்க. இன்னொரு விஷயம், இப்போ தமிழ் படிச்சா நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கு. முன்னாடியெல்லாம் ஒரே ஒரு செய்திச் சேனலோ அல்லது ஓரிரு செய்தித்தாள்களோ , இதழ்களோ தான் இருக்கும், இப்போ இணையம், சேனல்கள்னு தமிழோட வளர்ச்சி எங்கயோ போயிக்கிட்டு இருக்கு. தமிழ் கத்துக்கிறதும், பேசுறதும், அவமானம் இல்ல, வாழ்க்கைல இன்னொரு வாய்ப்பை நாமே உருவாக்கிக்கிற பாலம். ஒரு ஆசிரியரா சொல்றேன். தமிழ் படிங்க.கூடவே தொழில்நுட்பங்களோட படிங்க. 

-ஷாலினி நியூட்டன் -