Published:Updated:

கேபிள் கலாட்டா!

காலேஜ் கதகளி !

 ரிமோட் ரீட்டா

கேபிள் கலாட்டா!

யூனிஃபார்ம் போட்டுட்டு நாட்டி லூட்டி அடிக்கற ஸ்கூல் பசங்களோட கதையைச் சொல்லி, விஜய் டி.வி-யில ஹிட் அடிச்ச சீரியல்... 'கனா காணும் காலங்கள்’! பார்ட் 1... பார்ட் 2... முடிஞ்சு, இப்போ புதுசா ரிலீஸ் ஆகியிருக்கு... பார்ட் 3. இந்த முறை ஸ்கூல் பசங்க இல்ல... காலேஜ் பசங்களோட ஜாலி கதகளிதான் கதையே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கேபிள் கலாட்டா!
##~##

ஷூட்டிங் ஸ்பாட்... சென்னை, சேலையூர்ல இருக்கற பாரத் யூனிவர்சிட்டி! சீரியலோட புது யூத் டீம்-ஐ மேய்ச்சுட்டு (!) இருந்தார் டைரக்டர் தமிழ்தாசன்! ''எனக்குச் சொந்த ஊர் பட்டுக்கோட்டை பக்கம் மன்னங்காடு ரீட்டா. 'வசூல்ராணி’, 'விஜய் அவார்ட்ஸ்’,         'கமல் 50’, 'மகான்’, ஏசியாநெட்ல 'ஸ்வர்ணா’னு நிறைய நிகழ்ச்சிகள்ல வொர்க் பண்ணியிருக்கேன். இப்போ என் கையில 'கனா காணும் காலங்கள்’!

மூணாவது பார்ட்டோட ஆடிஷனுக்கு கிட்டத்தட்ட 8,000 பேர் கலந்துக்கிட்டாங்க. அதிலிருந்து 20 பேரை செலெக்ட் பண்ணியிருக்கோம். பாண்டிச்சேரி யூனிவர்சிட்டியோட நாடகத்துறையைச் சேர்ந்த 'மரப்பாச்சி' குழுவினர் மூலமாதான் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம். இது இன்ஜினீயரிங் காலேஜ்ல நடக்கற கதை. செம்ம யூத்ஃபுல்லா, ஜாய்ஃபுல்லா இருக்கும்''னு கியாரன்ட்டி கொடுத்த தமிழ்தாசன்,

''அந்த வாலுங்ககிட்ட பேசிப் பாரு ரீட்டா... சீரியல் பார்க்காமலே சிரிப்பு வரும். முக்கியத் தகவல் என்னன்னா... அவங்க எல்லாருமே ரியல் லைஃப்லயும் ஸ்டூடன்ட்ஸ்தான்!''னு கைகாட்ட, என்னை வந்து மொய்ச்சாங்க அந்த டீன் பட்டாளம்! மொத்தமும் 'லகலக' பார்ட்டிங்கதான். அதிலிருந்து ஒண்ணு ரெண்டு பேரை மட்டும் இங்க சாம்பிள்!

'ஜோடி நம்பர் 1 - சீஸன் 4', 'பாய்ஸ் வெர்ஸஸ் கேர்ள்ஸ்'னு அசத்தின டான்ஸர் சாய்பிரமோதிதா, ''ரீட்டா... எனக்கு பேரன்ட்ஸ், காலேஜ்னு நிறைய டார்ச்சர். பி.எஃப்.ஏ படிக்க ஆசைப்பட்ட என்னை, வீட்டுல கட்டாயப்படுத்தி இன்ஜினீயரிங்ல சேர்த்துட்டாங்க. இப்போ வேண்டா வெறுப்பா காலேஜ் போயிட்டிருக்கேன்''னு வருத்தப்பட, நானும் சளைக்காம நோட் பண்ணிட்டிருந்தேன்.

அதைப் பார்த்துட்டு பதறிப்போன டீம் மெம்பர்ஸ்... ''ஐயோ ரீட்டா! அதெல்லாம் ரியல் லைஃப்ல இல்ல... சீரியல் கேரக்டரைப் பத்திதான் இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கா''னு சொல்லி சாய்பிரமோதிதாவை காப்பாத்தினவங்க, கூடவே,  ''ம்... ஷூட்டிங் ஸ்பாட் தவிர எல்லா இடத்துலயும் சூப்பரா நடிக்கறா''னு காலையும் வாரினாங்க.

''ரீட்டா நான் யுனினார் நேஷனல் விளம்பர பிராண்ட் அம்பாஸடர். விளம்பரப் படங்கள் நிறைய நடிச்சிருக்கேன். லயோலாவுல பி.ஏ. எக்கனாமிக்ஸ் படிச்சு நாலு அரியர்ஸோட காலேஜுக்கும் எனக்கும் உள்ள உறவை மெயின்டெய்ன் பண்றேன்''னு பிரேம் ஜாலி பண்ண,

''பெண்கள், காதல்னா சுத்தமா புடிக்காத, நட்புக்காக எதையும் தியாகம் செய்யற ரொம்ம்ம்ப நல்ல கேரக்டர் ரீட்டா எனக்கு. என் புல்லட்லகூட சிங்கிள் ஸீட்டுதான் இருக்கும்''னு கேரக்டர் சொன்ன கார்த்திக், ''ஒன்பது வருஷமா பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டேன். சூர்யா, 'ஜெயம்’ ரவி எல்லாம் எனக்கு பேட்ச் மேட்ஸ்''னு டெயில் பீஸ் சொன்னாரு.

''ஹல்லோ ரீட்டா!''னு என்ட்ரியான குஷ்புவைப் பார்த்ததுமே...

''நீங்க 'ஹலோ எஃப்.எம் ஆர்ஜே’-தானே..?''னு நான் சர்ப்ரைஸாக...

''அது, போன மாசம். இது இந்த மாசம்''னு வடிவேல் கணக்கா இழுவையைப் போட்ட குஷ்பு,

''என் வாய்ஸ் கேட்டுட்டு, 'கிராமத்துல இருந்து படிக்க வர்ற காலேஜ் பொண்ணு கேரக்டர்... பண்றீங்களா?’னு கேட்டாங்க. உடனே கமிட் ஆயிட்டேன். சீரியல்ல அகரம் ஃபவுண்டேஷன் மூலமா படிக்கற இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட் நான். ரியல் லைஃப்ல எத்திராஜ் காலேஜ்ல ஃபைனல் இயர் ஸ்டூடன்ட். நீங்கள்லாம்தான் என் கன்னி நடிப்பை வாழ்த்தணும்!''னு அரசியல்வாதி மாதிரி முடிச்சாங்க குஷ்பு.

ம்... பெயர் ராசி!

வாசகிகள் விமர்சனம்

சமயோஜித சுட்டிகள்!

 ''இளையதலைமுறையின் அறிவு வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகை யில் அற்புதமாகத் தயாரிக்கப்பட்டு இருக்கிறது... அந்த ஊட்டச்சத்துபான விளம்பரம். தூக்கம் வராமல் புரளும் தன் சுட்டி மகனுக்கு கதை சொல் கிறார் தந்தை. 'பூச்சாண்டி வருவான்’ என்று கற்பனையாக பூச்சாண்டியை அவர் வர்ணிக்க, 'நீங்க பார்த் திருக்கீங்களா?’ என்று மடக்குகிறான் மகன். உடனே, 'நான் சின்னப் பையனா இருந்தப்ப பார்த்தது’ என்று தந்தை கூற, 'அப்போ அவனுக்கும் வயசாயிருக்கும். வரட்டும். ஒரு கை பார்க்கலாம்' என்கிறான் மகன். இந்தக்கால சுட்டிகள், மிகுந்த சமயோஜித புத்தியோடு, நாம் யூகிக்க முடியாத அளவுக்குத்தான் இருக்கிறார்கள் என்பதை வெகு அழகாக காட்டியிருக்கிறார்கள்'' என்று பாராட்டுகிறார் குளித்தலையில் இருந்து எஸ்.மங்கை.

இதுவா சாதனை?

''ஜெயா டி.வி-யின் 'உனக்காக எல்லாம் உனக்காக’ நிகழ்ச்சி... அந்தத் தடவை... 'நமீதாவுடன் உணவு உண்பதற்காக' என இளைஞர்கள் அடித்த கூத்து இருக்கிறதே... சொன்னால் வெட்கக்கேடு! நம் நாட்டுக்காக இளைஞர்கள் சாதிக்க வேண்டியது ஏராளமாக இருக்க, இதுதானா சாதனை? சுவாமி விவேகானந்தர் 'அமிர்தஸ்ய புத்ரஹ’ என்று சொல்லி வைத்திருக்கிறார்! 'நாமெல்லாம் பலவீனமானவர்கள் அல்ல! அமிர்தம் உண்ட தேவர்கள் போல வலிமையானவர்கள்’ என்கிறது வேதம்! இதையெல்லாம் உணர்ந்து, தங்களின் நேரத்தை பயனுள்ளதாக இளைய தலைமுறை யினர் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான உதவிகளைத் தொலைக் காட்சிகள் செய்ய வேண்டும்'' என்று ஆலோசனை கூறுகிறார் சென்னை யில் இருந்து இ.டி.ஹேமாமாலினி.  

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

படம்: பு.நவீன்குமார்