Published:Updated:

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்
''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

கொஞ்சம் போல்ட் விஜேயிங், ஸ்டைலான தோற்றம்... இப்படி யூத் பசங்களின் சாய்ஸ் லிஸ்ட்டில் இருக்கும் ஸ்வீட் கேர்ள் சன் மியூஸிக் விஜே தியா. பளிச் முகத்துடன் தென்படும் தியா கிரேஸி கண்மணியாக விதவிதமான கடைகள், ஏரியாக்கள் என ரவுண்டு வருகிறார்.

ஹாய் எப்படி இருக்கீங்க?

”ஏரியா ஏரியாவா சுத்திகிட்டு இருக்கேன். என்னென்னமோ சாப்டறேன். ஜாலியா இருக்கேன். ஆனாலும் டயட் மெயிண்டெயின் பண்றேன்!”

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

எந்த ஊரு நீங்க?

‘‘கேரளா கலந்த கோயம்புத்தூர் பொண்ணு நான். ஸ்கூலிங்’லாம் ஊட்டி. அப்பறம் இன்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜ்மென்ட்ல எம்.பி.ஏ முடிச்சிருக்கேன்!”

பிசினஸ் படிச்சிட்டு அப்பறம் எப்படி மீடியா, விஜே?

”பெரிய பிசினஸ் மேக்னட் ஆகணும்ங்கறது தான் குறிக்கோள். அதுக்கு முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.கண்டிப்பா ஆகிடுவேன். ஏன்னா விஜே ஒரு வயசு வரைக்கும் தான். அப்பறம் லைஃப் செட்டில் ஆகணுமே.. மீடியா... எனக்கு ஆசை. குழந்தை நட்சத்திரமா நிறைய விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். மாடலிங் இன்னொரு புரொஃபஷன். அப்படியே இப்போ சன் மியூசிக்!”

உங்க கிட்ட ஒரு தனி ஸ்டைல் இருக்கே?

”அக்காதான் என் காஸ்ட்யூம், மேக்கப் எல்லாம் முடிவு பண்ணுவாங்க.. ஆமா ...அக்கா ஃபேஷன் டிசைனர்... எனக்கு எங்க அக்கா குடும்பம்தான் உலகம். கொஞ்சம் லீவு கிடைச்சாலும் அக்கா ஃபேமிலியோட செம என்ஜாய் தான்!”

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

தியா கிட்ட தியாவுக்கே பிடிச்ச விஷயம்?

”நீங்களே சொன்னீங்களே கொஞ்சம் தைரியமா பேசுவேன். நம்ம புரபஷனுக்கு அதுதானே வேணும். ஆனா கொஞ்சம் அளவா பேசுவேன். சின்ன வயசுலயெ கேமரா ஃபியர் எல்லாம் போனதுனாலயே இந்த தைரியம்னு சொல்லலாம்!”

உங்களுக்கு பிடிச்ச விஜே, பிடிக்காத விஜே?

"பிடிச்ச விஜே சிவகார்த்திகேயன், அவரு ஹீரோவா ஆகிட்டாரு. ஆனாலும் அவரோட விஜேயிங் அவ்ளோ நல்லா இருக்கும். ஒரு ஷோவ செம டைமிங்கா, ஜாலியா கொண்டு போவாரு... பிடிக்காத விஜே யாருமே இல்ல. ஒவ்வொரு விஜே கிட்டயும் ஒரு தனி ஸ்பெஷல் இருக்கும்...ஹை! சிக்க மாட்டேன்ல!”

ஒரு விஜேவா, டிடிய எப்படி பார்க்கறீங்க? அவங்க கிட்ட பிடிக்காத விஷயம் சொல்லுங்களேன்?

”ஒரு விஜேவோட மிகப்பெரிய சவாலே ஷோவுக்கு வர செலிபிரிட்டிய ஃப்ரண்ட்ஸ் மாதிரி ஃபீல் பண்ண வைக்கணும். அந்தத் திறமை டிடிக்கு நெறையாவே இருக்கு. ரொம்ப கம்போர்ட்டா ஃபீல் பண்ண வெச்சு அவங்களுக்கே தெரியாம ஜாலியா நெறைய விஷயம் வாங்கிடுவாங்க!” டிடி கிட்ட பிடிக்காத விஷயம் இல்ல, ஆனால் டிடி ஷோவுல பிடிக்காத விஷயம் ப்ளீஸ் விளம்பரம் போடாதிங்க!”

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

தியாவோட சின்னச் சின்ன ஆசைகள்?

” எனக்கு இலந்த வட ரொம்ப பிடிக்கும். மாட்டு வண்டி ரைடிங் போகணும். தேன் மிட்டாய் சாப்பிடணும். நமக்கு ரொம்ப கேரிங்கான யாரா இருந்தாலும் சரி அவங்க கூட மணிக்கணக்கா பேசணும்!”

நீங்களே உங்க கிட்ட பெருமையா நினைக்கற விஷயம்?

“நான் எல்லாத்தையும் ரொம்ப டேக் இட் ஈஸியா எடுத்துப்பேன்... ஒரு சில இடத்துல நான் பேசியிருக்கணும், கோபப்படணும் ஆனாலும் அப்படிப்பட்ட இடங்கள்ல கூட இட்ஸ் ஓகே மாதிரி ரியாக்ட் பண்ணுவேன்.. அது பெருமைன்னு சொல்ல முடியாது என் கிட்ட இருக்க நல்ல கேரக்டரா நான் பாக்கறேன்!”

ஒரு நாள் சொல்வதெல்லாம் உண்மை மாதிரி ஒரு ஷோ பண்ண சொன்னா?

“சத்தியமா முடியாது, எனக்கு அவ்ளோ பொறுமையும் கிடையாது....உண்மையாவே சுதா மேம் எவ்ளோ பொறுமையா ஹேண்டில் பண்றாங்க... ஒண்ணு அழுதுடுவேன்... இல்ல பயங்கரமா திட்டிடுவேன்!”

நிகழ்ச்சியில வாங்கின ரொம்பப் பெரிய பல்ப்?

“ அத தான் ஊரே பாத்தீங்களே....ஒரு டைரக்டரோட பேட்டினு சொல்லி கூப்டுட்டு ரொம்ப சீரியஸா ஷோவெல்லாம் எடுத்து கடைசியில யாருமே வரல, என்னைய கவிதையெல்லாம் சொல்லச் சொன்னாங்க. ஒரு ஸ்டேஜ்ல நான் கோப்பப்பட்டு கிளம்பிட்டேன். அப்பறம் தான்  என்ன ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சுது..ஆனா அதுல பியூட்டியே ஏப்ரல் 1ம் தேதி என் ஷோல ‘யாரோ பல்ப் வாங்கியிருக்காங்க அந்த வீடியோ வருதுன்னு என்னையே சொல்ல வெச்சாங்க பாருங்க அதுதான் ஹைலைட்!”

''டிடி ஷோவில் அது வேண்டாமே...ப்ளீஸ்..!!'' - தியா ரெக்வஸ்ட்

ஷங்கர் படத்துல ஹீரோயின் நீங்கதா? என்ன செய்வீங்க!

”அதெப்படி என்னப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க... எனக்கு ஹீரோயின்லாம் செட்டாகாது... வேணும்னா ஷங்கர் சார் கிட்டயே எதாவது அஸிஸ்டெண்ட் வேலை இருந்தா சொல்லுங்க..இல்லை நல்ல சப்போர்ட்டிங் கேரக்டர் போதும்... ஹீரோயின்லாம் பெரிய விஷயம்!”

தியாவுக்கு பிடிக்காத விஷயம் என்ன?

”ஷாப்பிங்னாலே எனக்கு அலர்ஜி. ட்ரஸ் எடுக்கப் போனா கூட அதிகபட்சம் 10 நிமிஷம் தான். அப்பறம் எனக்கு தங்க நகைகள்னா சுத்தமா பிடிக்காது. ஃபேஷனா, மாடர்னா, ஜுவல்ஸ் போட்டுப்பேன்!”

அப்போ... வருங்கால கணவர் ரொம்ப லக்கி!

- ஷாலினி நியூட்டன் -

அடுத்த கட்டுரைக்கு