Published:Updated:

கீர்த்தி சுரேஷை கலாய்ச்சேன்... சிவகார்த்திகேயன் என்ன பண்ணார் தெரியுமா..? ஜாலி தணிகை

கீர்த்தி சுரேஷை கலாய்ச்சேன்... சிவகார்த்திகேயன் என்ன பண்ணார் தெரியுமா..? ஜாலி தணிகை
கீர்த்தி சுரேஷை கலாய்ச்சேன்... சிவகார்த்திகேயன் என்ன பண்ணார் தெரியுமா..? ஜாலி தணிகை

லைஞர், இசையருவி சேனல்களின் விஜே தணிகை.... நமக்குத் தெரிந்து விஜேக்களில் சிக்ஸ் பேக் சிகாமணி... தணிகையாகத் தான் இருப்பார்.

என்ன தணிகை சிக்ஸ் பேக்...ஹீரோவாக பிளானா?

‘இன்னும் கொஞ்சம் நல்லா பில்டப் பண்ணுங்க.... ஆக்சுவலி என்னோட கனவு, லட்சியம், எல்லாமே சினிமா தான். போன வருஷம் மட்டும் ஒரு நாலு படம் அதுல ரெண்டு முடிஞ்சது, இன்னும் ரெண்டு வெயிட்டிங். ஆனாலும் இந்த வருஷமாவது சினிமா எண்ட்ரி கண்டிப்பா நடந்தே ஆகணும்!”

கீர்த்தி சுரேஷை கலாய்ச்சேன்... சிவகார்த்திகேயன் என்ன பண்ணார் தெரியுமா..? ஜாலி தணிகை

உங்கள பத்தி சொல்லுங்களேன்!

‘‘எம்.பி.ஏ படிச்ச ஈரோட்டுப் பையன் நான். வீட்ல எல்லோரும் டீச்சிங் புரொஃபஷன்ல இருக்காங்க. ஆனா சின்னப்புள்ளையில் இருந்தே எனக்கு மீடியாதான் கனவு. கொஞ்சம் ஜாஸ்தி பேசுற குவாலிஃபிகேஷனால `விஜே’ ஆகிட்டேன்.அடுத்து சினிமா தான் டார்கெட்!”

உங்க ப்ளஸ் , மைனஸ்?

”நான் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக், எப்பவும் ஜிம்மே கதினு இருப்பேன். அதனால ஓவர் டயட். எதுவுமே சாப்பிட முடியாதுங்கறது மைனஸ், அதே சமயம் சிக்ஸ் பேக் எல்லா பசங்களோட கனவு அது என்கிட்ட இருக்கே. அதோட ஹெல்த் கான்ஷியஸ் வேற அது ப்ளஸ்!”

சூப் பாய்ஸ் பத்தி உங்க கருத்து?

”நானே சூப் பாயா இருக்கேன். ஒவ்வொரு புது ஹீரோயின் இண்ட்ரோ ஆகி ட்ரெண்டாகும் போதும் நான் சூப் பாய் தான்,. ஆனால் பொண்ணுங்கள திட்ற பசங்கள எனக்கு பிடிக்காது...அது எதுக்கு திட்டணும். அவங்களுக்கு பிடிச்சா பிடிக்கும் சொல்லப் போறாங்க. இல்லன்னா எதுக்கு ஆசிட் அடிச்சிட்டு, தேவையில்லாம சீன் க்ரியேட் பண்ணிக்கிட்டு.. என்னதான் பொண்ணுங்கள திட்டினாலும் பொண்ணுங்க இல்லாம பசங்க இருக்க முடியாது, பசங்க இல்லாம பொண்ணுங்களும் இருக்க முடியாது!”

பொண்ணுங்க பத்தி நிறையா பேசுறீங்களே...

“என்ன பொருத்தவரைக்கும் பொண்ணுங்க கடவுள்... நமக்கு பிறப்ப குடுக்கறதே அவங்க தான். அவங்கள மதிக்கலைன்னா நம்ம நல்லா இருக்க முடியாது!”

செம மொக்க வாங்கின அனுபவம்!

” இப்போ நினைச்சாலும் சிரிப்பா இருக்கும்... ஒரு கேர்ள்ஸ் கேங் நான் ஒரு மால்ல பாத்தேன். என்ன பாத்துட்டு ஓடி வந்து கையெல்லாம் குடுத்தாங்க. அதுல ஒரு பொண்ணு டக்குன்னு ஐ லவ் யூனு சொன்னாங்க... ரொம்ப நேரமா அந்தப் பொண்ணு அழுது நீங்க இல்லாம நான் இல்ல ரேஞ்சுக்கு சோக கீதம்லாம் பாடினாங்க... என்ன கடைசியில அட்வைஸ்லாம் பண்ண வெச்சு. நானும் சீரியஸா இதெல்லாம் இந்த வயசுல தப்புமான்னு சொல்லிகிட்டு இருக்கேன்... இன்னொரு கும்பல் பொண்ணுங்க ஓடி வந்து ஹேய்னு சிரிச்சு கலாய்ச்சுட்டாங்க. அப்போ தான் என்ன வெச்சு செஞ்சுருக்காங்கன்னு புரிஞ்சது.. ஹி ஹினு வழிஞ்சிகிட்டே அந்த இடத்துல இருந்து எஸ்கேப் ஆனேன்!”

ஷோவுக்கு வந்த ஹீரோயின் கிட்ட ஜொல்லு விட்டு மாட்டியிருக்கீங்களா?

“ அது நிறைய தடவ... இப்போ கூட நம்ம க்யூட் கீர்த்தி சுரேஷ் கிட்ட கண்ணெல்லாம் அடிக்க சொல்லி. அவங்க கிட்டயே பேசிகிட்டு இருந்தேன். டக்குன்னு சிவகார்த்திகேயன் பாஸ்.. நீங்க பேசுறது அவங்களுக்கு காமெடியா தெரியுது பாஸ்னு பல்ப் குடுத்தாரு!”

கீர்த்தி சுரேஷை கலாய்ச்சேன்... சிவகார்த்திகேயன் என்ன பண்ணார் தெரியுமா..? ஜாலி தணிகை

எந்த ஹீரோயின் மேல க்ரஷ்!

தீபிகா படுகோனே.... மியா ஜார்ஜ், இப்போ கீர்த்தி சுரேஷ் ...

இனிமே இந்தியாவுல நோ டிவி சேனல்ஸ், நோ சினிமானு ஒரு அறிவிப்பு வந்தா என்ன செய்வீங்க?

“ ரொம்ப வருத்தப்படுவேன்.. மக்கள நினைச்சு... பின்ன நான் ஹாலிவுட் ஹீரோ ஆகணும்னு ஒரு விதி இருந்தா யாரால அத மாத்த முடியும்!”

இதெல்லாம் ஒரு ஷோவா... இதுக்கு ஒரு கூட்டம் வேற அப்படி நீங்க நினைக்கற டிவி ஷோ எது?

“ சல்மான் கான் அப்படினு ஒரு மனுஷன் மட்டும் இல்லைன்னா பிக் பாஸ் ஷோ சுத்த வேஸ்ட்.. என்ன ஷோ அது ஒவ்வொருத்தரோட பெர்சனல் இதுதான்னு ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிக்கிட்டு .. என்ன கேட்டா அந்த ஷோ வெறும் பில்டப் தான்!”

நடிகர்கள் விஜே ஆகறத பத்தி உங்க கருத்து!

“நடிகர்கள் எவ்ளோ நிகழ்ச்சி வேணும்னாலும் பண்ணலாம். ஆனால் எல்லாமே ரெக்கார்டிங்கு ஓகே..ஆனால் லைவ் புரபஷனல் விஜேவால தான் முடியும்!” அந்த கர்வம் எனக்கு எப்பவுமே உண்டு!”

அடுத்த என்ன பண்ணப் போறீங்க?

” சிக்கிரம் ஒரு படம் ஃப்ரண்ட்ஸ்லாம் சேர்ந்து பண்ணப் போறோம்...ஒரு மணி நேரம் பைலட் ஷூட் கூட பண்ணியிருக்கோம். எப்படியாவது இந்த வருஷம் வெள்ளித்திரை எண்ட்ரி குடுக்கணும் அதுதான் பிளான்!”

பிடிச்ச ஹீரோ?

”எப்பவுமே தல தான்.... சும்மா அவரு படத்துக்கு போயி விசில் பறக்க விடற சந்தோஷம் இருக்கே... அத வார்த்தையால சொல்ல முடியாது.... ரோல் மாடல் அப்படின்னா சூர்யா!”

பிடிச்ச விஜே!

சிவகார்த்திகேயன் மட்டும் தான். இன்னும் அவருக்குள்ள அந்த விஜே இருக்காரு. சமீபத்துல என்னோட ஷோவுக்கு வந்தப்ப கூட அவரு சில பாயிண்ட்ஸ், டைமிங்கான கமெண்ட் லாம் குடுத்தார். சான்ஸே இல்லைங்க!”

உங்க கிட்ட ஒரு பைக் இருக்கு... எந்த ஹீரோயின டேட்டிங் கூட்டிட்டு போவீங்க!

“ தீபிகா படுகோனே மட்டும் தான்.... வேற யாரும் இல்ல... அவங்க கூட ஒரு படம் நடிக்கற சான்ஸ் கிடைச்சா செமையா இருக்கும்!”

இந்த விஷயம் தீபிகா படுகோனேவுக்கு தெரியுமா?

ஷாலினி நியூட்டன்

பின் செல்ல