Published:Updated:

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!
”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

ன் மியூஸிக் பாக்ஸ் ஆபீஸ், வாழ்த்துகள் நிகழ்ச்சி. அளவான பேச்சு, ஜென்டில் மேன் லுக்.

‘ஹல்லோ ஸ்ரீஹரி..!

’ஹாய்...சன் மியூஸிக்ல அஞ்சு வருஷம் ஆகப்போகுது தெரியுமா?...நாள் போனதே தெரியல..என்னோட மெயின் இன்ட்ரெஸ்ட் மீடியா. அதுக்கு சன் மியூஸிக் விஜேயிங் தான் இப்போ வரைக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கு. நான் விஜே மட்டும் இல்ல, ஒரு ஐடி கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருக்கேன். மீடியா ரொம்ப பிடிக்கும், அதனால எனக்காக விஜே, வீட்ல இருக்கவங்களுக்காக ஐடி ஜாப்னு போயிட்டு இருக்கு.

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

என்ன படிச்சிருக்கீங்க?

"அப்பா, அம்மா ரெண்டு பேரும் பிரைவேட் கம்பெனியில நல்ல வேலைல இருக்காங்க. நாங்க மலையாளி. ஸ்கூல் ஸ்டடீஸ் அப்போவே சென்னை வந்துட்டோம்,. பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். மெக்கானிக்கல்லருந்து ஐடியானு கேக்காதிங்க. அது ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.நான் வீட்டுக்கு ஒரே பையன். அதனால மீடியான்னு சொன்ன உடனே முதல்ல வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால் ஐடி ஜாப் கிடைச்சு அதோட விஜே, என்னோட ஆர்வம்னு போனேன். யோசிச்சு, அப்பறம் ஓகே சொல்லிட்டாங்க!"

ஐடி ஜாப், விஜே, எப்படி டைம் கிடைக்கும்?

”உண்மை தான் , எனக்கு ஃப்ரீ டைம் வீக் எண்ட்ல தான். அதுலயும் சில நாள் ஷூட்டிங் இருக்கும். அப்படியே தப்பித் தவறி கிடைக்கற ஃப்ரீ டைம்ல ஜிம், மூவீஸ் , கொஞ்சம் தூக்கம், டிவினு டைம் ஓடும்!”

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

அம்மா, அப்பாவுடன் ஸ்ரீஹரி

மீடியா என்ன கத்துக்குடுத்துச்சு, என்ன இன்னும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கறீங்க?

”மீடியாவுல கிடைக்கற வாய்ப்ப உடனே, யோசிக்காம பயன்படுத்தணும்னு கத்துக்கிட்டேன். ஆனால் இன்னும் என்னால புரிஞ்சுக்கவே முடியாத விஷயம் பாலிடிக்ஸ். இங்க மட்டும் இல்ல எல்லா ஃபீல்ட்லயும் இப்போ அதிகமாவே பாலிடிக்ஸ் இருக்கு. அத என்னால சரியா புரிஞ்சுக்க முடியல. அதாவது யாரு நம்மள பத்தி உண்மையாவே என்ன நினைக்கறாங்க, யாரு உண்மையா பாராட்றாங்க.. இந்த மாதிரியான பாலிடிக்ஸ் புரிஞ்சுக்க இன்னும் நாள் எடுக்கும்!”

நீங்க பண்ண பெரிய சொதப்பல் என்ன?

“சன் மியூஸிக்ல வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன சேனல்ல எனக்கு வேலையெல்லாம் கிடைச்சு, ஒரு ஷோ கூட அலாட் பண்ணிட்டாங்க. நாளைக்கு ஷூட் இருக்குன்னு கூட வர சொல்லிட்டாங்க. அந்த டைம் சன் மியூசிக் கால் நீங்க செலக்டெட்னு. அப்போதான் இல்ல நான் இங்க சேர்ந்துட்டேன்னு சொன்னேன். சன் ம்யூசிக்ல என்னைக் கால் பண்ணி கூப்டவரு, ‘நீ நல்ல சான்ஸ மிஸ் பண்றப்பா’ன்னு சொன்னாரு. நான் கேக்காம அடுத்த நாள் அந்த சின்ன சேனலுக்குப் போனா, இன்னொரு பையன் ஷோ பண்ணீட்டிருந்தான் கேட்டா பெரிய ரெகமெண்ட்னாங்க. செம பல்ப் எனக்கு. தாங்க் காட்! எனக்கான கதவு சன் மியூஸிக்ல ஓபன்ல இருந்துச்சு!”

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

“நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க. நான் ஷோ-ல பண்ணின சொதப்பலைக் கேட்டேன்...”

”ஆ... அப்படியா.. எனக்கு கொஞ்சம் லாங்குவேஜ் பிரச்னை இருக்கு. அதனால ரொம்ப மெனெக்கெட்டு தான் நான் பேசுவேன். அப்படி ஒரு தடவ ஒரு ஷோ ரெக்கார்டிங்ல 18 டேக் எடுத்துட்டேன். அந்த புரடியூஸர் வேற கொஞ்சம் கோபக்காரர். ஆனால் நல்லவர். அவ்ளோ தான் அவர திரும்ப நல்ல மூடுக்கு கொண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!”

உங்களுக்குப் பிடிச்ச டிவி ஷோ எது?

”எனக்கு சிவகார்த்திகேயன் விஜே பண்ணும் போது எனக்கு அவரோட எல்லா ஷோவும் பிடிக்கும். டைமிங்கா ஹியூமரா பேசுவாரு, விஜே சிவாவ ரொம்ப மிஸ் பண்றேன். இப்போ என் ஃப்ரண்ட் , என் கோ விஜே ரியோ. எதார்த்தமா ஷோ பண்றாரு எனக்கு ரியோவோட ஷோ ரொம்ப பிடிக்கும். அப்பறம் டிடி. அவங்க ஷோ ஜாலியா, போரடிக்காம போகும்!”

டிவி சேனல்கள பொதுவா நடக்குற தப்பு என்னன்னு நினைக்கறீங்க?

”நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒரே மாதிரி இருக்கு. சில ஷோ அப்பதான் முடிஞ்சிடுக்கும். உடனே அதே மாதிரி இன்னொரு ஷோ வேற ஒரு சேனல்ல நடக்கும். அத தவிர்க்கணும். நிறைய புது ஷோக்கள் வந்தா நல்லா இருக்கும்!”

ஒரு நாள் கோட் போட்டுக்கிட்டு நீயா நானா, அல்லது குற்றம் நடந்தது என்ன அப்படின்னு ஒரு ஷோ பண்ண சொன்னா பண்ணுவீங்களா?

”கண்டிப்பா... எனக்கு காமெடி வராது. அதனால சீரியஸான நிகழ்ச்சி, அல்லது செலிபிரிட்டிக் கிட்ட இண்டெர்வியூ இதெல்லாம் நல்லாவே பண்ணுவேன்!”

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

உங்க முதல் சம்பளம் எவ்வளவு?

”120 ருபீஸ். இப்பவும் ஞாபகம் இருக்கு. என்னோட காலேஜ் டைம்ல லீவு கிடைச்சது அப்போ பெட்ரோல் பங்க்ல சர்வே எடுத்தேன். அதுல தினமும் ஒரு 120 ரூபாய் கிடைச்சது. அப்படியே அந்த வாரம் முழுக்க ஒரு 1500 ரூபாய் வரைக்கும் பார்த்தேன். மீடியா வந்ததுக்கு அப்பறம் என்னோட சம்பளத்துல நான் வாங்கின முதல் விஷயம் என்னோட பைக். ராயல் என் ஃபீல்ட். என்னோட பேபி மாதிரி என்னோட பைக்!”

ஃபேஷன் இண்ட்ரஸ்ட்?

”ஜீன்ஸ் , டி- ஷார்ட், காட்டன் ஷ்ர்ட்!”

நீங்களே உங்க கிட்ட நினைச்சு வருத்தப்படற விஷயம் என்ன?

”எனக்கு லாங்குவேஜ் பிரச்னை இருக்கு. சரளமா பேச வராது. அப்பறம் திடீர்னு திக்குவேன். அதனாலயே நிறைய ரீடேக் வாங்குவேன். ஆனா லைவ்ல எதார்த்தமா பேசற விஷயம்னால பிராப்ளம் வராது. ஆனால் ரெக்கார்டிங் ஷோல தான் செம கடுப்பேத்துவேன்!”

பிடிச்ச ஹீரோ, ஹீரோயின்

”கமல் எப்பவுமே கமல் ஹாசன். ஹீரோயின் சிம்ரன், அனன்யா. ஆனால் சிம்ரன் மேல இன்னும் கிரேஸ்!”

விஜே அடுத்து என்ன பிளான்?

”சினிமா தான். எனக்கு ரொம்ப குறைவான சான்ஸ் தான் வருது. ஆனாலும் நல்ல வாய்ப்புக்காக காத்துட்டு இருக்கேன். சீரியல் சான்ஸ் வருது. ஆனால் சில்வர் ஸ்க்ரீன் தான் டார்கெட்!”

பிடிக்காத விஜே?

”சத்தியமா ஓபனா சொல்லியே ஆகணும் சன் மியூசிக் சாம். அவன் என்னோட ஷோவுக்கு கூட நின்னாலே என்ன ரொம்ப கலாய்ச்சுத் தள்ளிட்டுருப்பான். அவன் கூட ஷோன்னாலே அய்யய்யோனு ஆகிடும்!”

”சிவகார்த்திகேயன் - என் ஃபேவரைட்!” சன்மியூஸிக் ஸ்ரீஹரி பேட்டி!

லவ் புரபோஸல்?

”நான் புரபோஸ் பண்ணல, ஆனா ஃப்ளர்ட் பண்ணி கடைசியில நான் சொல்லணும்னு நினைக்கும் போது அவங்கள என்னால பாக்கவே முடியாம போயிடுச்சு.ஆமா காலேஜ் முடியப் போற நேரத்துல சொன்னா. அப்பறம் எனக்கு வந்த புரபோஸல் ஊருக்கே தெரியும். ஒரு தடவ ஷோல ஒரு பொண்ணு திடீர்னு ஐ லவ் யூனு சொல்லிட்டாங்க. எனக்கு அதுக்கு அப்பறம் பேச்சே வரல. லைவ் ஷோ. காலர கட் பண்ணியாச்சு ஆனாலும் நான் அந்த படப்பிடிப்புல இருந்து வெளிய வர ரொம்பவே சிரமப் பட்டேன்!”

டேட்டிங் அனுபவம் இருக்கா? ஸ்ரீஹரி பொருத்தவரைக்கும் டேட்டிங் லிமிட் எது?

”ம்க்கும்... இங்க ஒரு பிளேட் சாதத்துக்கே வழி இல்லையாம். இதுல பிரியாணி குடுத்தா எவ்ளோ சாப்பிடுவீங்கன்னு கேள்வி. ஏங்க நீங்க வேற. ஒரு புள்ள முதல்ல நம்மள திரும்பி பார்க்கட்டும். அப்பறம் இந்த டேட்டிங், சாட்டிங்னு பெரிய டார்கெட்லாம் அச்சீவ் பண்ணலாம்!”

லவ், கல்யாணம் உங்க கருத்து?

”ஆண் இல்லாம பொண்ணு இல்ல, பொண்ணு இல்லாம ஆண் இல்ல, இது ரெண்டுமே இருக்க உலகத்துல கண்டிப்பா லவ், கல்யாணம் இல்லாம இல்ல. இது ரெண்டுலயும் ஒருத்தர் ஒருத்தருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே ரிலேஷன்சிப்ல பிரச்னை வராது!”

பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ண சீக்ரெட்?

”அவங்க என்ன சொல்ல வராங்கன்னு காது குடுத்து கேட்டாலே போதும். அவங்கள மதிச்சு அவங்களுக்கு இம்பார்டெண்ட்ஸ் குடுத்தாலே பொண்ணுங்களுக்கு பிடிக்கும். இத நான் ரொம்ப நம்பறேன். ஆனால் நாம தான் அவங்கள அதிகமா பேசவே விடறது இல்லியே!”

- ஷாலினி நியூட்டன் -