Published:Updated:

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்
”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

பாலிமர் டிவியின் இரு மலர்கள் தொடரின் நாயகி ஸ்ரீதிஜாவுக்கு அனிமேஷன் ஜிஃப் போடும் அளவிற்கு தமிழிலும், இந்தியிலும் அவருக்கு ஏராள ரசிகர்கள்.

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்
”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

யார் இந்த ஸ்ரீதிஜா?

பிகார் பொண்ணு, வயசு 29. ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு தூம் மச்சாவோ தூம் நிகழ்ச்சி மூலம் டிவி எண்ட்ரீ.ஆங்கில நாடங்கள் குழுவுல ப்ரசிடெண்ட். அப்படியே சிறிது சிறிதாக வாய்ப்புகள் அதிகமாகி தற்போது இந்திய டாப் சீரியல் நடிகைகளில் முக்கியமானவராக மாறிவிட்டார்.

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

அதிலும் பாலிமரில் ஒளிபரப்பாகும் இரு மலர்கள் சீரியலில் அளவான நடிப்பு, குண்டு குண்டு கண்கள், அழகிய சிரிப்பு என வலம் வரும் இவர் மேல் இளைஞர்கள் பலருக்கும் ஒரு க்ரஷ். சமீபத்தில் இந்தியன் டெலி விருதுகள் 2015ல் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். “இந்த விருது என்னை இன்னும் ஊக்குவிக்கும், எனக்கு ஆக்‌ஷன் , கட் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் வேலை செய்வதென்றால் அவ்வளவு பிரியம்” என்கிறார் ஸ்ரீதிஜா.

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

சமீபத்தில் உடன் நடிக்கும் குனால் கபூருடன் சின்ன கிசு கிசு அதற்கும் எங்களுக்குள்ள இருக்கறது வெறும் நட்பு மட்டும் தான் , அதத் தாண்டி எதுவும் இல்லைன்னு கொஞ்சம் கார சாரமாவே பேசியிருக்கிறார். ஸ்ரீதிஜாவுக்கு பழைய படங்கள் பார்க்கறது முக்கியப் பொழுதுபோக்கு. அத்தனை சிடிக்கள், மூவி கலெக்‌ஷன்ஸ் வைத்திருக்கிறார்.

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

எத்தனை படம் பார்த்தாலும் ஆக்‌ஷன் படம் மட்டும் வேண்டாம். சண்டை என்றால் பயம் என்கிறார். சாப்ளினின் ஆக்‌ஷன் படங்கள் மட்டும் விதிவிலக்கு. அதிக முறை பார்க்கிற படம் பியாசா. இவர் ஏற்கனவே நடித்துவந்த “சௌபாக்யவதி பவா, பலிகா வது சீரியல்கள்லருந்து பாதியில் விலகியது குறித்துக் கேட்டதுக்கு ஸ்ரீதிஜா சொன்ன தைரியமான பதில் “எனக்கு 100 சதவீதம் நான் செய்யற வேலைல திருப்தி இல்லைன்னா, உடனே விலகிடுவேன். அந்த சீரியல்கள எனக்கு முக்கியத்துவம் குறைய ஆரம்பிச்சது. அதனால தான் அந்த ரெண்டு புரஜெக்ட்லருந்து விலகினேன்”

ஸ்ரீதிஜா அவங்கள பத்தி அவங்களே வெளிப்படையா பேசின விஷயங்கள்’ “என்னைப் பத்தி நானே சொல்லிக்கக் கூச்சப் படற விஷயம், நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை... அதிகமா சமோசா, தோசை சாப்பிடுவேன். அமீர்கான் மேல செம க்ரஷ். அவர் என்னை ஒரு படத்துலயாவது தேர்ந்தெடுப்பாரான்னு காத்திட்டு இருக்கேன். நடக்குமா?’எனக்கு ஆன் ஸ்க்ரீன் ஜோடி, ஆஃப் ஸ்க்ரீன் ஃப்ரண்ட் இப்படி ரெண்டுலயும் செம கம்பெனி ஷாபிர் அலுவாலியா தான். ரெண்டு பேரும் சேர்ந்தா அவ்ளோ அலப்பற குடுப்போம்’ என்னும் ஸ்ரீதிஜாவின் டான்ஸ் பார்ட்னரும் அலுவாலியாவே.

”அமீர்கான் மேல செம க்ரஷ்” குடும்பங்களை ஈர்க்கும் இருமலர்கள் நாயகி ஸ்ரீதிஜா சீக்ரெட்

இவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்தாலும் அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலை இல்லை ரேஞ்சுக்கு எப்போதும் ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள் இந்த நட்புக் கிளிகள். ஸ்ரீதிஜா நிறைய புத்தகங்கள் படிப்பவர். அம்மா, அப்பா, ஒரு சின்ன தம்பியோட அழகான ஃபேமிலி. சாயங்காலம் ஆனா, சீரியல்கள் நெத்தி நிறைய குங்குமம் வெச்சுகிட்டு குண்டு குண்டு கண்களோட யாருப்பா இந்தப் பொண்ணு இப்படி ஒரு ஒய்ஃப் வேணும்’ என ஏங்க வைக்கும் ஸ்ரீதிஜா பாலிவுட் கதவுகள் திறக்கக் காத்திருக்கிறார்.

- ஷாலினி நியூட்டன் -

அடுத்த கட்டுரைக்கு