Published:Updated:

ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!

ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!
ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!

ரியோ’ என்று ஃபேஸ்புக்கில் தட்டினால் எக்கச்சக்கமான ஃபேக் ஐடிகள் குவிந்து கிடக்கின்றன.

’’ஹேய்...ரியோ நான் உங்க பிக் ஃபேன்.எங்க வீட்டுக்கு வந்து ஒருநாள் சாப்பிட்டுட்டு போங்க..’’ என சொல்லி வைத்தாற் போலவே லைவ்வில் தெறிக்கின்றன ரியோ ஃபேன்ஸ்களின் செல்லக்குரல்கள்.சன் மியூசிக் சேனலின் கலக்கல் விஜே ரியோ ராஜுடன் ஒரு ஜாலி ஷூட்டுக்குப் போலாம் வாங்க!

* ஹலோ பாஸ் உங்க ரியல் குட்நேம் ப்ளீஸ் ?

ஒரிஜினலாவே என் பேர் ரியோ தாங்க. ஃபுல் நேம் ஃபேண்டின் ரியோ ராஜ் :) *

’’சாரு என்ன படிச்சிருக்கீங்க ?’’அப்படினு கேர்ள்ஸ் கேக்குறாங்களே!

ரியோ ...விகடன் கூட வாராவாரம் படிக்குறார்..உண்மையா படிச்சதுனா டென்த் முடிச்சிட்டு ஐடிஐ படிச்சேன். *

பொண்ணுங்க என்ன கிஃப்ட் கொடுத்தா உங்களுக்குப் பிடிக்கும்?

அவங்க என்ன கொடுத்தாலும் பிடிக்குமே...கிப்ட் கொடுக்கும் போது வேணாம்னு சொன்னா அது அவங்க மரியாதையை கெடுக்குற மாதிரி இருக்கும்ல..(யப்பா) *

ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!

உங்க சம்பளம் என்ன பாஸ்?

அம்மா சத்யமா எனக்கே தெரியலையே..அது எக்கச்சக்கமா இருக்கும்னு எல்லாரும் நம்புறாங்க...

*லைவ்ல கவுண்டர்ஸ் தாறுமாறா எகுறுதே...இதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணிடுவீங்களா?

ஆதித்யா சேனல்ல இருந்தவங்க தான் இங்க ப்ளே அவுட் எடிட்டர்ஸா இருக்காங்க.அவங்க பண்றதெல்லாம் லைவ் அட்ராசிட்டி தான்.லைவ்க்கு வரும் போது ரொம்ப சென்சிட்டிவான விஷயங்களை எடுத்துப் பேச மாட்டேன்.ஜாலியா பேசிட்டு போயிடணும்.அவ்ளோதான். *

திடீர்னு யாராச்சும் உங்ககிட்ட சரமாரியா இங்கிலீஷ்ல பேசினா எப்படி சமாளிப்பீங்க?

உண்மையாவே ஒரு அமெரிக்கா காலர் பேசுனாங்க.இதெல்லாம் எங்க டீமோட திட்டமிட்ட சதினு தான் சொல்வேன்.வேணும்ட்டே இங்கிலிஷ்ல பேசுனதும் கனெக்ட் பண்ணி கொடுத்துட்டாங்க.அப்புறம் ஒரு வழியா சமாளிச்சுட்டு நீங்க எந்த ஊருன்னு கேட்டா கும்பகோணம்னு சொல்லிட்டாங்க... *

தொடர்ந்து ரெகுலர் காலர்ஸ்க்கே லைன் கிடைக்குதே...ஏதாச்சும் தில்லாலங்கடி?

பில்லா பிரவின்,பூந்தமல்லி சந்தோஷ்,கோட்டூர்புரம் ரமேஷ்,பெங்களூரு நளினி,அஞ்சலி,ஜெனி’னு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க.அவங்க எல்லாம் யாருன்னு நினைக்குறீங்க? காலைல எழுந்ததுல இருந்து எனக்கு ட்ரை பண்ணிட்டே இருக்குற ரியல் ஃபேன்ஸ். அப்டியெல்லாம் சந்தேகப்பட கூடாது. *

சரி..சில பொண்ணுங்க அண்ணானு கூப்பிடறப்போ ஏன் அவ்ளோ ஃபீலிங்ஸ்?

அதெல்லாம் இல்லைங்க. அண்ணான்னு கூப்பிட்டா வயசான மாதிரி ஒரு ஃபீல். மத்தபடி வேற ஒண்ணுமில்ல*

ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!

அப்ப உங்க வயசு என்னன்னு சொல்லுங்க பாப்போம்?

ஹாஹா நான் பையன் தானே..வயசை சொல்றதுல ஒரு பிரச்சனையும் இல்ல.ஜஸ்ட் 27.

*உங்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பத்தி சொல்லுங்களேன்.

இப்டிதான் ஊரு உலகமே எனக்கு எக்கச்சக்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்குறதா நம்புது..ஆனா உண்மையை சொல்லணும்னா நிஜத்துல எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லைங்க.பசங்க தான் சுத்திட்டு இருக்காங்க.

* ப்ரப்போசல்ஸ் நிறைய வந்திருக்குமே!

அதெல்லாம் வந்துச்சுங்க...இதுல என்ன கொடுமைனா நம்ம கிட்ட ’ஐ லவ் யூ’னு சொல்ற பொண்ணுகிட்ட பதிலுக்கு ’தாங்க் யூ’ மட்டும் சொல்றது எவ்ளோ பெரிய ஃபீலிங்க்ஸ்னு எனக்கு மட்டும் தான் தெரியும். *

அப்ப நீங்க யார்கிட்ட ’ஐ லவ் யூ’ சொல்ல ஆசைப்படுறீங்க?

ஹன்சிகா கிட்ட ’ஐ லவ் யூ’ சொல்லணும்..ஆனா அவங்க பதிலுக்கு ’தாங்க் யூ’னு சொல்லிடுவாங்களே.! *

உங்கள யாராச்சும் வெச்சு செஞ்சிருக்காங்களா?

என் பேருல எக்கச்சக்கமா ஃபேக் ஐடியை உருவாக்கி வச்சிட்டு என்னையப் போலவே பொண்ணுங்ககிட்ட ரூட் விடுறாங்க.என்கிட்டயே வந்து நான் தான் ரியோன்னு சொல்றாங்க. அப்ப நான் யாரு? *

வாட் நெக்ஸ்ட்?

படத்துல நடிக்கணும்.வில்லனா நடிக்கணும்கிறது ஆசை.ஆனா அதுக்காக வில்லனா மட்டுமில்ல எந்த கேரக்டர்னாலும் நடிக்க ரெடி.இப்ப எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்துல ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன்.வாழ்த்துங்க ப்ரெண்ட்ஸ்!

ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!
ஹன்சிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லணும்! - சன்மியூசிக் ரியோ ஃபீலிங்!

-பொன்.விமலா-

படங்கள்: பா.காளிமுத்து

 ரியோவின் வீடியோ பேட்டிக்கு: 

அடுத்த கட்டுரைக்கு