Published:Updated:

விஜய்கூட ஒரு டான்ஸ்!- மானாட மயிலாட யாமினியின் ஆசை!

விஜய்கூட ஒரு டான்ஸ்!- மானாட மயிலாட யாமினியின் ஆசை!
விஜய்கூட ஒரு டான்ஸ்!- மானாட மயிலாட யாமினியின் ஆசை!
விஜய்கூட ஒரு டான்ஸ்!- மானாட மயிலாட யாமினியின் ஆசை!

மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் என டிவி டான்ஸர்களின் செல்லத் தங்கையாகவே வலம் வருகிறார் யாமினி,

எனக்கு சொந்த ஊரு, நான் படிச்சது எல்லாமே பெங்களூரு தான். நியூ ஹொரைஸன் காலேஜ்ல சைக்காலஜி படிச்சிட்டு இருக்கும் போதே வாய்ப்பு வந்துச்சு. நாங்க கூட்டுக்குடும்பம். அப்பா ஒரு கம்பெனியில அஸிஸ்டெண்ட் மேனேஜர், அம்மா ஹவுஸ் ஒய்ஃப், சித்தப்பா ஃபேமிலியும் எங்க கூட தான் இருக்காங்க!”

இவ்ளோ பெரிய ஃபேமிலியிலருந்து எப்படி மீடியா எண்ட்ரீ?

“நான் தான் பயந்தேன். வந்த வாய்ப்பெல்லாம் வேண்டாம்னு அவாய்ட் பண்ணினேன். என்னோட ஃபேமிலி தான் எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினாங்க. என்னோட பாட்டி தாத்தாவுக்கு என்னை டிவியில பார்க்கணும்னு ஆசை. அவங்க தான் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க!”

டான்ஸ்ல விருப்பம் எப்போருந்து?

“ரெண்டு வயசுலயே டான்ஸ் ஆட ஆரம்பிச்சேனு எங்க வீட்ல சொல்லுவாங்க, சித்தப்பாவோட கல்யாணத்துல முதல்ல டான்ஸ் ஆடினேன். அப்பறம் எந்த வீட்டு ஃபங்க்‌ஷன்னாலும் என்னோட டான்ஸ் தான். என்னோட அம்மா தான் என் திறமையப் பார்த்து என்ன க்ளாசிக் டான்ஸ் சேர்த்துவிட்டாங்க. மூணு வருஷமா பரதம் கத்துகிட்டு இருக்கேன்!”

முதல் வாய்ப்பு எப்படி?

“ என்னோட மாமா தான் என்னை மானாட மயிலாட ஆடிஷன் கூட்டிட்டுப் போனாரு, அங்க தான் செலக்ட் ஆனேன். செமி ஃபைனல் வரைக்கும் போனேன். அதுக்கப்பறம் போக முடியலை”..

கலா மாஸ்டர் பத்தி சொல்லுங்களேன்

“ அவங்க தன்னை சுத்தி இருக்கவங்க எப்பவுமே நல்லா இருக்கணும்னு நினைப்பாங்க, ஏதோ எனக்கு பிடிச்ச ஸ்டைல்ல, ஒரு வரைமுறையே இல்லாம ஆடிட்டு இருந்தேன்.எனக்கு டான்ஸ்னா இதுதான்னு கத்துக்குடுத்தது மானாட மயிலாட ஷோவும் கலா மாஸ்டரும் தான்!”

விஜய்கூட ஒரு டான்ஸ்!- மானாட மயிலாட யாமினியின் ஆசை!


மானாட மயிலாட ஷோ, திடீர்னு விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் என்ன சேஞ்ச் இது?

” மானாட மயிலாட செமி ஃபைனலோட வெளிய வந்துட்டு நான் பெங்களூரு வந்துட்டேன், அப்போ தான் விஜய் டிவிக்கு ஜோடி நம்பர் ஒன் ஆடிஷனுக்கு ஃப்ரெண்ட் ஒருத்தர் தகவல் சொல்லி என்னோட சிடியெல்லாம் அனுப்பி வெச்சுருந்தேன். அவங்க பார்த்துட்டு என்னை செலக்ட் பண்ணியிருந்தாங்க, கமல், உதய் இப்படி நிறைய டான்ஸ் பார்ட்னர் எனக்கு அமைஞ்சாங்க. ஃபைனல்ல செகண்ட் ரன்னர் அப்... உங்களில் யார் அடுத்த பிரபுதேவா கார்த்திக் கூட தான் ஃபைனல் ஆடினேன்!”

மீடியா என்ன சொல்லிக் குடுத்துச்சு... ஒரு பொண்ணா என்னவெல்லாம் சவால்களை சந்திச்சீங்க?

“ தாங்க் காட் எனக்கு எந்த ஏமாற்றமும் நடக்கலை... மீடியா எனக்கு தைரியம் சொல்லிக்குடுத்துச்சு, அதே சமயம் நிறைய பொண்ணுங்க நிறைய கதைகள் சொல்லியிருக்காங்க, அதனாலயே எனக்கு ஒரு பக்கம் பயம் இருந்துச்சு. ஆனால் நான் எல்லாரையுமே அண்ணான்னு கூப்டுவேன். கொஞ்சம் குள்ளமா சின்னப் பொண்ணா இருக்கறதுனால குழந்தை மாதிரி தான் நடத்துவாங்க.. அந்த வகையில நான் லக்கி. அதே சமயம் நாம எப்படி நடந்துக்கறமோ அதுதான் அடுத்தவங்க நம்ம கிட்ட நடந்துப்பாங்க. நாம அட்வாண்டேஜ் எடுத்துக்க விட்டா அவங்களும் எடுத்துப்பாங்க!”

உங்க பலம், பலவீனம் என்ன?

“ பலம் பயங்கரமா கோபப் படுவேன்... முக்கியமா பின்னாடி பேசினா செம கோபம் வரும். உலகம் சின்னது என்ன பேசினாலும் நம்ம காதுக்கு வந்துடும், எதுவா இருந்தாலும் என் கிட்டா சொல்லுங்கன்னு சொல்லுவேன்.பலம் தைரியம் தான்.!”

விஜய்கூட ஒரு டான்ஸ்!- மானாட மயிலாட யாமினியின் ஆசை!


திரையிலயும், திரைக்கு வெளியேவும் இன்ஸ்பிரேஷன் யாரு?

”திரைக்கு வெளில எங்க மாமா, அவருதான் எனக்கு மாஸ்டர்,  திரையில பிரபு தேவா, மாதுரி தீட்ஷித்,ஹ்ருத்திக் ரோஷன் கிட்ட ஒரு ஸ்டைல் இருக்கும். விஜய் டான்ஸ்ல ஒரு ஸ்பெஷல், ஸ்டைல் இருக்கும், அவரோட ஃபேஸ் எக்ஸ்பிரஷன் , இதெல்லாம் கண்டிப்பா கத்துக்கணும். விஜய் சார் கூட ஒரு டான்ஸ் ஆடணும்னு ஆசை. நடக்குமா?!”

எதிர்கால பிளான் என்ன?


“ மீடியாவுல நல்ல இடம் பிடிக்கணும், எனக்குன்னு ஒரு அங்கீகாரம் சம்பாதிக்கணும் அதுதான் பிளான்!”

சினிமா ஆசை இல்லையா?


“சில வாய்ப்புகள் வருது, மீடியாவ விட கொஞ்சம் ரிஸ்க் அதிகம் சினிமாவுல, நல்ல கேரக்டர்னா ஓகே சொல்லவேண்டியதுதான்!”

கலைஞர் டிவி , விஜய் டிவி ரெண்டுலயும் என்ன கத்துக்கிட்டீங்க?


“ கலைஞர் டிவி எனக்கு டான்ஸ் கத்து குடுத்துச்சு. ஏதோ என் போக்குல ஆடிகிட்டு இருந்தேன். அத முறைப் படுத்தினது கலைஞர் டிவி. ஒரு செலிபிரிட்டின்னா எப்படி இருக்கணும், மீடியான்னா என்ன, மீடியா பெர்சினாலிட்டின்னா எப்படி இருக்கணும் இதெல்லாம் கத்துக் கொடுத்தது விஜய் டிவி !”

- ஷாலினி நியூட்டன் -