Published:Updated:

கல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்?

கல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்?
கல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்?


வீட்டுல அம்மா அத்தை பாட்டி எல்லாரும் ஹால்ல ஒக்காந்து தெய்வ மகள், சரவணன் மீனாட்சி, வாணி ராணின்னு கண்ணீர் விட்டு கதறிக்கிட்டு இருக்க, காலேஜ் கண்மணீஸ் எல்லாரும் லேப்டாப் முன்னாடி இதே மாதிரிதான் சீரியல் பாத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா அவங்க பாக்கறதே வேற! எல்லாம் பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ், ப்லேஃபுல் கிஸ்ஸஸ், ஹீலர் அப்படி இப்படின்னு கொரியன் சீரியல்கள். ஒரு நாலு வருஷமாவே கொரியன் சீரியல்கள் மோகம் நம்ம தமிழ் பொண்ணுங்கள புடிச்சு வாட்டி எடுக்குது. நம்ம ஊர் சீரியல்ல இல்லாம அப்படி என்னதான் கொரியன் சீரியல்ல இருக்கு?

1. தமிழ்: பசங்க செக்க செவேல்னு கிளீன் ஷேவ் செஞ்சுருந்தா ஹீரோ. அதுவே மோசமொசன்னு தாடி வளர்த்து இருந்தா வில்லன்

கொரியன்  - ஹீரோ ஆகட்டும் வில்லன் ஆகட்டும்...மொழு மொழு முகம், முன்னாடி வந்து விழற முடின்னு அசத்தறாங்க கொரியன் பசங்க. நம்புங்க இவங்கள சைட் அடிக்கறதுக்காகவே பாதி பேர் சீரியல் பாக்கறாங்க.
 
2. தமிழ் - 3 வயசுலேர்ந்து 9௦ வயசு வரைக்கும் வஞ்சனையே இல்லாம நடிக்கறது தமிழ் சீரியல்

கொரியன் - ஸ்கூல், காலேஜ் கதைகளை மட்டுமே மையமா வெச்சு எடுக்கறது கொரியன் சீரியல். காலேஜ் பசங்க விரும்பி பாக்கறதுக்கு இதுவே மூல காரணம்.


3.  தமிழ் - குடும்பம், அழுகை, பாசம், பணம் இதெல்லாம் மெயின் டிராக்லையும் காதல், ஆக்சன், காமெடி எல்லாம் சைடு டிராக்லையும் ஓட்டுறது தமிழ் சீரியல்.

கொரியன் - காதல், ஆக்சன், காமெடி தான் இங்க மெயின் டிஷ். மீதி எல்லாமே ஊறுகாய்தான். கிளிசரினுக்கு வேலையே இல்லாததால இது யூத்துக்கு ஆல் டயம் பேவரிட் ஆகிடுச்சு.
 

4. தமிழ் - லோ பிச்சுல பேசினா கிசுகிசு, ஹை பிச்சுல பேசி பில்டிங்க அதிர வெச்சா ரவுடி மிரட்டல், அழுதுக்கிட்டே கத்துனா மாமியார் மருமகள் சண்டை. இதெல்லாம் போர் அடிச்சு போச்சு பாஸ்!

கொரியன் -  அழுகை, சிரிப்பு, மிரட்டல், சண்டை, சந்தொஷம் எல்லாமே ஒரே டோன்லதான். மூக்கால பேசற கொரியன் குரல் என்னவோ ரொம்ப புடிக்குது நம்ம கேர்ல்ஸ்க்கு. அதனாலதான் பாஷையே புரியலைனாலும் சப் டைட்டில் போட்டு பார்த்து ரசிக்கிறாங்க.


5. தமிழ் – சீரியல் முடியும்போது ஹீரோயினோட அப்பாவோ ஹீரோவோட அம்மாவோ முக்கிய நல்ல கேரக்டரோ அல்லது கெட்ட கேரக்டரே ஆனாலும் ஏதோ ஒரு டெத் இருக்கும். யாரோட உயிரையாவது எடுத்துதான் பல சீரியல்கள் முடியுது இங்க. இவங்களுக்கு என்ன ஆகிடுமோ அவங்களுக்கு என்ன ஆகிடுமோன்னு ஒரு பயம் சோகத்துக்கு மக்களை கொண்டு போகறாங்க.

கொரியன்
– எவ்வளவுதான் நடுவுல சோகம் வந்தாலும் க்ளைமாக்ஸ்ல குமுதா ஹேப்பி அண்ணாச்சிதான்.நேரம் செலவு பண்ணி சீரியல் பார்த்தா திருப்தி கிடைக்கும். அது மட்டும் இல்லாம அதுல தப்பு பண்ணறவங்க கடேசில சரண்டர் ஆகிடுவாங்க இல்லேன திருந்தி குட் பீபிள் ஆகிடுவாங்க.இதனால  பாக்கறவங்களும் ஹேப்பி அண்ணாச்சி!

6.       தமிழ் - இங்க எடுக்கறது மெகாகாகாகாகாகா சீரியல். அரை மணி நேரம் ஒரு எபிசொட். சீரியல் முடிக்க 2௦௦௦ எபிசொட். தூக்கம் வருது எழுப்பி விடுங்கன்னு சொல்லற வரைக்கும் (சொன்னதுக்கு அப்புறமும்) டான்டாண்டான் டடடடான் மியுசிக்கோட தொடரும் போட்டு இழுப்பாங்க.

கொரியன் - இங்க ஒரு மணி நேரம் ஒரு எபிசொட். மொத்த சீரியலுமே அதிகபட்சம் 25 எபிசோடுல  முடிஞ்சுடும். டிட் பிட்ஸ் படிக்கறா மாதிரி மூனே நாள்ல முடிச்சுட்டு போயிடலாம். யூத் டிரென்ட்டிங்கா இருக்க இதுவே காரணம்!
 


தா. நந்திதா
மாணவப்பத்திரிக்கையாளர்

பின் செல்ல