ஸ்பெஷல் 1
Published:Updated:

கேபிள் கலாட்டா!

'சாரு'வுக்கு சாக்கு மூட்டையில் சாபங்கள் !

 ரிமோட் ரீட்டா

கேபிள் கலாட்டா!

சினிமா ஹீரோயின்ஸ் எல்லாம், 'வில்லி கேரக்டர் பண்ணணும்’னு விருது ஆசையில ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு இருக்க, சீரியல்ல இப்போ வில்லி நம்பர் ஒன், 'சாரு’தான்! 'தென்றல்’ சீரியல்ல ஹீரோயின் 'துளசி’கிட்ட இருந்து அவங்க கணவரைப் பறிக்கறதுக்காக வெறிப் பிடிச்சு திரியற 'சாரு’வைப் பார்க்க... ஆதம்பாக்கத்துல இருக்கற அவங்க வீட்டுக்கு, கொஞ்சம் பயந்தபடியே தான் போனேன்.

''ஹாய் ரீட்டா!''னு சாரு... ஸாரி, ஸ்ரீவித்யா வந்து நின்ன அழகான தோரணையில பயம் எல்லாம் விலகி ஓடிடுச்சி!

##~##

அதைக் கண்டுபிடிச்சிட்ட ஸ்ரீவித்யா, '' உன்னை மாதிரியே தான் ரீட்டா எல்லாரும் என்னை பயத்தோட பார்க்க ஆரம்பிச்சுட் டாங்க. லெட்டர்ல இருந்து இன்டர்நெட் வரைக்கும் சாக்கு சாக்கா சாபம் வந்து குவிஞ்சுட்டு இருக்கு 'சாரு’வுக்கு. அவ்ளோ தூரத்துக்கு கேரக்டர் ரீச் ஆகி இருக்கு!''னு சிரிச்ச ஸ்ரீவித்யா, தன் சீரியல் கேரியர் வர... வர... லாறு... வரலாற்றை செப்பினாங்க.

''அஞ்சாவது படிக்கும்போதே சைல்ட் ஆர்டிஸ்டா 'ஒரு பெண்ணின் கதை’ தொடர்ல நடிச்சேன். 'அப்பா’, 'சஹானா’, 'கோலங்கள்’, 'நிம்மதி’, 'வசந்தம்’, 'அவர்கள்’, தெலுங்குல அரை டஜன் சீரியல்னு பயணம் தொடர்ந்தது. 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, 'பட்ஜெட் பத்மநாபன்’, 'கோவில்பட்டி வீரலட்சுமி’, 'லண்டன்’, 'என்னவளே’, 'நந்தா’, 'சில்லுனு ஒரு காதல்’, 'யாவரும் நலம்’னு சினிமா வாய்ப்புகளும் வரிசை கட்டிச்சு. இந்த பிஸி ஷெட்யூல்ல என் படிப்பு மாட்டிக்க, ஒன்பதாவதோட ஸ்கூலுக்கு 'பை பை' சொல்லியாச்சு. டென்த், ப்ளஸ் டூ-வை பிரைவேட்டா எழுதி, கரஸ்ல பி.காம் படிச்சு, இப்போ அண்ணா யூனிவர்சிட்டியில எம்.பி.ஏ. படிக்கறேன்''னு சொன்ன ஸ்ரீவித்யா, 'சாரு’ பேச்சுக்கு கியர் மாத்தினாங்க.

''ஒரு உண்மை தெரியுமா..?! 'தென்றல்’ கதையை டைரக்டர் குமரன் சார் சொன்னப்போ, 'அநாதைப் பொண்ணை, ஒரு பணக்காரக் குடும்பம் தத்து எடுத்து வளர்க்கறாங்க. ரொம்ப மென்மையான பொண்ணு அது. அந்த கேரக்டர்தான் உங்களுக்கு’னு சொன்னாரு. ஆரம் பத்துல என் கேரக்டரும் அந்த டிராக்லதான் போச்சு. ஆனா, சீரியல் நகர நகர... வில்லியா விஸ்வரூபம் எடுத்து நிக்க வெச்சுட்டார். இதுதான் சமர்த்து 'சாரு’ வில்லியான கதை!''னு தேங்காயை உடைச்சவங்க,

''நெகட்டிவ் கேரக்டரானவொடன என் நடிப்பும் புரமோஷன் வாங்கிடுச்சு. எனக்கு பெரிய கண்கள்ங் கிறதால, அதை வெச்சே பயங்கர எக்ஸ்பிரஷன்ஸ் தருவேன். சொல்லப் போனா, கேமரா ஆன் ஆனவொடனே... 'சாரு’ வாவே மாறிடுவேன்''னு பெருமையா சொன்னவங்ககிட்ட, ''சாரு ஓ.கே! ஸ்ரீவித்யா எப்டி?''னு கேட்க,

கேபிள் கலாட்டா!

''ஃப்ரெண்ட்ஸ்கிட்ட என்னோட பெட் நேம், 'சைலன்ட் ஸ்ரீவித்யா’. சிரிக்கும்போதுகூட சத்தம் வராம பார்த்துப்பேன். ரொம்ப சென்ஸிட்டிவ். பல்லி, கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயப்படற சாதாரண டீன் ஏஜ் பொண்ணு''னு சொல்லிச் சிரிச்சவங்க,

''தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்கு தெரியும். ஆறு வருஷமா பரதநாட்டியம் கத்துக்கறேன். கர்னாடிக் மியூஸிக் தெரியும்''னு சிறு குறிப்பு வரைஞ்சாங்க.

''உங்களோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு ஸ்ரீ?''னு கேட்டேன்...

''ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அதிகமா வாயடிக்கறது ஒருத்தர்கிட்டதான்... அது 'துளசி’

@ஸ்ருதி!''னு சொல்லிட்டு, சத்தம் போடாம சிரிச்சாங்க ஸ்ரீவித்யா!

படங்கள்: ஜெ.தான்யராஜு, பு.நவீன்குமார்

விளங்காத விளம்பரம்!

 ''சமீபகாலமாக டி.வி-யில் வரும் ஒரு பற்பசை விளம்பரத்தில் மணமேடையில் புரோகிதர் மணமகனுக்கு பற்பசை குறித்து பாடம் நடத்துகிறார். இடம், சூழல், போதிப்பவர், போதிக்கப் படுபவர் என எதுவுமே இந்த விளம்பரத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. மாறாக முகம் சுளிக்க வைக்கிறது. பல் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த பாலபாடம் குழந்தைகளுக்குத்தான் தேவை. அப்போதுதான் குழந்தைகளின் கூடவே விழிப்பு உணர்ச்சியும் வளரும். பணத்தைக் கொட்டி எடுக்கும் விளம்பரம் பளிச்சென புரிய வேண்டாமா?’' என்று குட்டு வைக்கிறார் உடுமலைப்பேட்டையில் இருந்து எஸ்.ஜானகி.

விரச வசனங்கள் குட்டீஸுக்கு எதற்கு?

''சித்திரம் டி.வி. என்பதே குட்டிக் குழந்தைகளுக்கானது. அதில் சமீபத்தில் விக்கிரமாதித்தன் கதையை ஒளிபரப்பினார்கள். விக்கிரமாதித்தன் தாசி வீட்டுக்குச் செல்வது போலவும், நான்கு பெண்களை மணப்பது போலவும் காட்சியைப் பார்த்துவிட்டு, கோடை விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்த குழந்தைகள், இதற்கான விளக்கத்தை கேட்க, பதில் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்துக்கு ஆளானோம். குழந்தைகள் விரும்பி பார்க்கும் பல சேனல்களிலும் இதுபோன்ற கதைகள் தமிழிலும் ஆங்கிலத் திலும் ஒளிபரப்புகின்றனர். அறிவுபூர்வமான, கார்ட்டூன் கதைகளை வழங்கினால் நன்றாக இருக்கும். இனிமேலாவது யோசிப்பார்களா?'' என்று கேட்கிறார் சீர்காழியில் இருந்து வேம்பு ராமச்சந்திரன்.

குழந்தைகள் பார்க்கட்டும்!

''ஆங்கில சேனல் 'ழிமிசிரி’, தினமும் காலை 11 முதல் 11.30 வரை 'பிக் அண்ட் டிரிக்' எனும் மேஜிக் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. மிகவும் அருமையான முறையில் அதைத் தந்து வரும் மேண்டி செய்யும் ஒவ்வொரு மேஜிக்கும் படுஅமர்க்களமாக இருக்கிறது. கடைசியில் அதன் ரகசியத்தையும் அவர் உடைத்துவிடுவது, நமக்கு மேஜிக் கற்றுத் தருவதுபோலவே இருக்கிறது. இந்த விடுமுறையில் குழந்தைகளைக் கட்டாயம் பார்க்க வையுங்கள்... நிறைய கற்றுக்கொள்வார்கள்'' என்று வழி காட்டுகிறார் அம்பத்தூரில் இருந்து ஹேமமாலினி.

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

 

கேபிள் கலாட்டா!

''பேச்சுதான் என் மூச்சு ரீட்டா''னு பெருமூச்சு விடும் ரேகா, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி

யில் இளங்கலை கணிதம் இரண்டாமாண்டு மாணவி. படிக்கிற நேரம் போக, ஏ.எம்.என். சேனலில் செய்தி வாசிப்பாளராக ஜமாய்க் கிறார்.

''சின்ன வயசுலேர்ந்து எந்த டாப்பிக்கை கொடுத்தாலும் 'நச்’னு பேசுவேன். சுர்ஜித் சிங் பர்னாலா, அப்துல் கலாம்னு பெரிய தலைவர்கள்லாம் என்னை பாராட்டி இருக்காங்க தெரியுமா. பரிசும் நிறைய வாங்கி இருக்கேன்.

மேடைப் பேச்சுக்கும் ஒரு மேடை தேவையா இருக்கே... அதான் ஆர்வத்துல நியூஸ் ரீடரா இங்க சேர்ந்தேன். படிப்படியா கோயில் சிறப்புகள், திரை விமர்சனம் பற்றியெல்லாம் பேச ஒரு வாய்ப்பு கிடைச்சுது. மக்கள் டி.வி-ல உரிமைக்குரல் நிகழ்ச்சில பேசுனதை என்னால மறக்கவே முடியாது. அப்படியே டி.வி மீடியாவை கெட்டியா பிடிச்சுக் கிட்டேன்’'னு குஷியா சொல்ற ரேகாவுக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு பக்கத்துல 'அசலிபிசலி பேட்டை’ ஸாரி... ரஜாகுளிபேட்டையாம்.

''எனக்கு அப்பா, அம்மா இல்லை ரீட்டா. என் பாட்டி தாத்தாதான் எனக்கு சப்போர்ட். சிறந்த பேச்சாளரா வரணும். அதுவும் சாலமன் பாப்பையா நடத்துற பட்டிமன்றத்துல பேசணும். இதான் என் கனவு'’ - ரேகாவின் வார்த்தைகளில் மேக்னட் உறுதி.