Published:Updated:

கல்யாணமாம் கல்யாணம் ’கிரேஸி’ கண்மணிக்குக் கல்யாணம்!

Vikatan Correspondent
கல்யாணமாம் கல்யாணம் ’கிரேஸி’ கண்மணிக்குக் கல்யாணம்!
கல்யாணமாம் கல்யாணம் ’கிரேஸி’ கண்மணிக்குக் கல்யாணம்!

பளிச் முகம், ஸ்டைலான தோற்றம், வசீகரப் புன்னகை, குறும்பு ரியாக்‌ஷன்ஸ் என்று யூத் பசங்களின் சாய்ஸ் லிஸ்ட்டில் இருக்கும் ஸ்வீட் கேர்ள் சன் மியூஸிக் விஜே தியா.  கிரேஸி கண்மணியாக விதவிதமான கடைகள், ஏரியாக்கள் என ரவுண்டு வந்தவருக்கு இப்போது டும் டும் டும்... விரைவில் திருமணம் என அழைப்புக் கொடுத்தவரிடம், ‘வெய்ட் ப்ளீஸ்’ என்று  சில கேள்விகளைத் தொடுத்தோம்:

“வழக்கமான கேள்விலயே ஆரம்பிக்கிறேன். லவ் மேரேஜ் தானே?”

“லவ் & அரேஞ்ட் மேரேஜ். நிச்சயதார்த்தம் முடிஞ்சது. அடுத்த மாசம் கல்யாணம்”

அடுத்த கேள்வியை நாம் தொடங்கும் முன் இடைமறித்தார்..

“இருங்க.. நான் சொல்லி முடிச்சுடறேன். அவர் பேர் கார்த்திக். சிங்கப்பூர் இண்டோர் கிரிக்கெட் டீம் கேப்டன் அதுமட்டுமல்ல ஒரு கிரிக்கெட் சார்ந்த கம்பெனியில ஆபரேஷன் மேனேஜராவும் இருக்காரு. என்னோட ஒரு பர்த்டே ஃபங்ஷன்ல தான் என் நண்பர்களோட சேர்ந்து அவரும் வந்தாரு. அப்போதான் முதல்ல சந்திச்சுகிட்டோம்”

 “ யார் முதல்ல லவ் சொன்னீங்க? நீங்களா, அவரா?”

“ரொம்ப சினிமாத்தனமா இருக்கும் சொன்னா.. (சிரிக்கிறார்) ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா வாட்ஸப் பண்ணிட்டு இருந்தோம். பேசப் பேசத் தான் எங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் ஈர்ப்பு இருக்கறது புரிஞ்சது. அப்பவும் ரெண்டு பேருமே காதலை சொல்லிக்கல. திரும்ப அவர் சிங்கப்பூர் போறதுக்குள்ள பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போகணும்னு அவங்க வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குக் கொஞ்சம் பொறாமையா இருந்துச்சு. அந்த விஷயத்தை அவரும் என்கிட்ட சொன்னார். அப்பக் கூட அவர் காதலைப் பத்தி எதுவும் சொல்லவே இல்ல. நான் அவர் சொல்லட்டும்னு காத்திருந்தேன். கடைசியில பொறுமை இழந்து, ‘எனக்குத் தெரியும் நீங்க என்னை லவ் பண்றீங்க..”ன்னு சொல்லிட்டேன். அப்புறம் அவரு ஒத்துக்கிட்டார்”

“நான் கேட்ட கேள்விக்கு நேரடியா பதிலே வர்லியே!”


வெட்கப்படுகிறார். “சரிங்க.. நான்தான் மொதல்ல லவ்வை சொன்னேன்”

”வெரிகுட். ஓகே. ரெண்டு வீட்லயும் என்ன சொன்னாங்க?


“ ஒரு பிரச்னையும் இல்ல.... சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க”


  ”ரெண்டு குடும்பம் பத்தியும் சொல்லுங்களேன்”

“ அவங்க தமிழ், நான் மலையாளி.... எனக்கு தமிழ் கல்யாணம் ரொம்பப் பிடிக்கும்.  ஆனா இப்படி ஒரு அழகான தமிழ்க்குடும்பத்துக்கு மருமகளா வருவேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்லை. நிச்சயத்துக்கு புடவைதான், கல்யாணத்துக்கும் புடவைதான். பக்கா தமிழ் ஸ்டைல் கல்யாணம் தான் மை சாய்ஸ். வரவேற்புக்கு மட்டும் கிராண்ட் கவுன், சங்கீத் ஃபங்ஷனுக்கு சோளி”

“மாமியாரை ஃப்ரெண்ட் பிடிச்சுட்டீங்களா?”

“ஓ.. அவங்க செம ஃப்ரெண்ட்லி. ஜாலியா இருப்பாங்க. அவங்களே எனக்காக பாத்துப் பாத்து புடவையெல்லாம் வாங்கியிருந்தாங்க. என்னை நல்லா புரிஞ்சுகிட்டவங்க என் மாமியார்”.

“முதல்ல நீங்களும் கார்த்திக்கும் பரிமாறிகிட்ட கிஃப்ட் என்ன?”

“ நான் வாட்சும், அழகான பர்ஸும் குடுத்தேன். அவர் செம ரொமாண்டிக்கா சாக்லேட், ரோஸ் குடுத்தார்”

”கல்யாணத்துக்கு அப்புறம்..” கேள்வியை முடிக்கும் முன் பதில் வந்தது...

“கண்டிப்பா..தொடர்ந்து நான் விஜே பண்ணுவேன்”.

 “உங்களையே நம்பி இருக்கற உங்க ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“அவங்களால தான் நான் இந்த அளவுக்கு முன்னேறி வந்துருக்கேன். என்னோட ஒவ்வொரு முன்னேற்றத்திலயும் எனக்கு ஆதரவு குடுத்துருக்காங்க. தொடர்ந்து அவங்க ஆதரவும், ஆசீர்வாதங்களும் எனக்குத் தேவை”.

இதுக்கு முதல்ல இவங்க குடுத்த பேட்டில ஷாப்பிங்கே பிடிக்காது-ன்னாங்க. கல்யாணத்துக்கப்பறமும் அதை சொல்றாரான்னு பார்ப்போம்!

நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்....

- ஷாலினி நியூட்டன் -