Published:Updated:

”இந்தக் காலத்து ஆண்களுக்கு காதலைச் சொல்லவே தெரியல’ - கலைஞர் டிவி விஜே சுமையா!

”இந்தக் காலத்து ஆண்களுக்கு காதலைச் சொல்லவே தெரியல’ -   கலைஞர் டிவி விஜே சுமையா!
”இந்தக் காலத்து ஆண்களுக்கு காதலைச் சொல்லவே தெரியல’ - கலைஞர் டிவி விஜே சுமையா!

லைஞர் டிவியின் சினிமா ஸ்பெஷல், பிரபங்கள் சந்திப்பு, சினிமா செய்திகள் , இசையருவியில் காதலுக்காக நிகழ்ச்சி விஜே சுமையா.. பக்கத்து வீட்டுப் பொண்ணு தோற்றம், டஸ்கி டார்லிங்..

''சுமையா... சுருக்கமான முன் குறிப்பு வரைக..!’’

“”அப்பா லாரி ட்ரான்ஸ்போர்ட் மேனேஜர், அம்மா அழகுக்கலை நிபுணரா இருக்காங்க. அதுபோக கார்மெண்ட்ஸ் பிஸினஸ் பண்றாங்க. நாங்க 15 பேர் ஒரே வீட்ல கூட்டுக்குடும்பமா இருக்கோம். எப்பவுமே வீட்ல என்னைச் சுத்தி பெரிய கும்பல் இருக்கும். குட்டீஸ் அதிகம். எனக்கு ரெண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. அவங்க குழந்தைகளே எப்போதும் விளையாடிட்டு , ஓடிகிட்டுன்னு செம ஜாலியா இருக்கும் வீடு. படிச்சது பி.டெக், ஐ.டி படிச்சிருக்கேன்! எனக்கு முதல்ல பூனே’ல தான் வேலை கிடைச்சது. அங்கல்லாம் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதுவும் காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சு 6 மணிக்கு வீட்டுக்கு வர மாதிரி வேலைதான் பண்ணணும்னுட்டாங்க. சரின்னு மீடியா செலக்ட் பண்ணேன். இப்போ ஓகே!”

வட இந்திய டிவிக்கள் அளவுக்கு இங்க இருக்கற விஜேக்கள் பெரிய அளவுல சாதிக்கிறது இல்லையே?

“ அதுக்குக் காரணம் , அங்க இருக்குற எக்ஸ்போஷர். ஒரு விஜேவ கொண்டாடுவாங்க. உதாரணத்துக்கு ஷாருக், மந்த்ரா பேடின்னு சொல்லிகிட்டே போகலாம். இங்க டிடி, சிவகார்த்திகேயன், கோபி நாத் இப்படி ஒரு சிலர் மட்டும் தான். நல்லா பாத்தா ஒரு டிவிய சேர்ந்த மக்கள் தான் பெரிய அளவுல போயிட்டு இருப்பாங்க. காரணம் எக்ஸ்போஷர் அவ்ளோ தராங்க. டிவியே அவங்களுக்கு தேவையான புரமோஷன்கள குடுக்கறாங்க. இதுக்கெல்லாம் ஒரே வழி அப்படிப்பட்ட டீம் & சேனல் நமக்கு அமையணும்!”

டிவி சேனல்கள்ல இருக்கறவங்க வாழ்க்கை என்ன அவ்ளோ ரிஸ்க்கா?

“ எனக்கும் அதே சந்தேகம் தான். ஏன் இந்த மக்கள் தேவையில்லாம தற்கொலை முடிவெல்லாம் எடுக்குறாங்கன்னு தெரியல. இன்னொன்னு மீடியா ஒரு ட்ரெண்டு சம்மந்தப்பட்ட விஷயம். சினிமாவுல எப்படி ஒரு ஹீரோவுக்கு தொடர்ச்சியா படமிருந்து அதே ஹீரோவுக்கு கொஞ்சம் நாள் படமே இல்லாம ஃபீல்ட் அவுட் ஆகுற நிலமை கூட வருமோ அப்படித்தான். தினம் தினம் பாக்கற மக்களுக்கு புதுசா வர்றவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கதான் செய்யும். அதுக்கு நம்ம நடிப்புலயும், திறமையிலயும் வித்தியாசம் காட்டினாலே போதும். தொடர்ச்சியா நமக்கான இடம் மாறாம இருக்கும். நீங்களே பாருங்களேன்.. ஒரு சில விஜேக்கள், அல்லது சீரியல் நடிகர்கள் தொடர்ந்து பல வருஷமா ஃபீல்ட்டுல இருப்பாங்க. அதுக்குக் காரணம் அவங்க காட்ற வித்தியாசங்கள் தான். நமக்கான இடத்தை நாம தான் தக்க வெச்சுக்கணும். இல்ல சைடா இன்னொரு ஜாப் ரெடி பண்ணிக்கணும். சொந்த வாழ்க்கையையும் , வேலையையும் குழப்பிக்கக் கூடாது!”

எத்தனை பேர் உங்ககிட்டயே, உங்களைக் காதலிக்கறதா சொல்லிருக்காங்க?

“ காலேஜ் டைம்ல ஒண்ணு ரெண்டு வந்துச்சு.  ஒரு சீனியர் “ உனக்கு நிறைய லவ் ப்ரபோஸல்ஸ் வந்திருக்கும். ஆனா முடிவெடுக்கும் போது என்ன முதல் சாய்ஸா வெச்சுக்கோ’ன்னு சொன்னாரு, நான் உடனே “ அண்ணா என்ன அண்ணா இப்படி சொல்றீங்கன்னு” பல்ப் குடுத்துட்டேன்.  இப்போ இருக்கற பசங்க லவ் ப்ரபோஸ் பண்றதே மொக்கையா, காமெடியாத்தான் பண்றாங்க. இந்தக் காலத்துப் பெண்கள் பாவம். சினிமா மாதிரி , ஒரு கவிதை மாதிரி நம்மள அப்படியே மயக்குற மாதிரி காதலைச் சொல்றது சினிமாவுல மட்டும் தான் இருக்கு.

ரொம்ப ஃபீல் பண்றீங்களே அப்படி காதலைச் சொன்னா உடனே ஓகே சொல்லிடுவீங்களா?

“ நீங்க வேற ஒண்ணு சிரிச்சுடுவேன். இல்ல அண்ணான்னு சொல்லிடுவேன். இன்னொரு விஷயம் என் கூட பழகிட்டா என் கிட்ட காதலிக்கறேன்னு சொல்ல மாட்டாங்க என் ஃப்ரெண்ட்ஷிப் தான் வேணும்னு நினைப்பாங்க. அப்படியே சொன்னாலும் என்னோட ரெண்டு அண்ணன்களைப் பாத்தா ஓடிடுவாங்க!”

நிகழ்ச்சியில செம பல்ப் வாங்கியிருக்கீங்களா?

“ நாலு வருஷத்துல ரெண்டு தடவ தான் அது நடந்துருக்கு. எனக்கு சினிமா பிரபலங்களோட தான் அதிகமான நிகழ்ச்சிகள் இருக்கும். அப்படி தான் ஒரு படத்தோட புரமோஷன் நிகழ்ச்சியில ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த சுவாரஸ்ய நிகழ்வு சொல்லுங்களேன்னு கேட்டேன். அந்த விஐபி செம டென்ஷனாகிட்டாரு. வேற கேள்வியே இல்லையான்னு. சரி அப்படியே சர்ச்சையான கேள்வி கேட்டா முதல்ல இவங்க பதில் சொல்லுவாங்களா சொல்லுங்க. நோ கமெண்ட்ஸ்’னு சொல்லிடுவாங்க. அப்புறம் எங்க சுவாரஸ்ய கேள்வி கேட்கறது!”

- ஷாலினி நியூட்டன்

பின் செல்ல