Published:Updated:

ரித்திகா சிங்கிடம் லவ்வை சொன்னேன்.. மாதவன் கிட்ட மாட்டி விட்டுட்டாங்க! - இது ‘சன் மியூஸிக்’ கதிரவன் கலாய்!

Vikatan Correspondent
ரித்திகா சிங்கிடம் லவ்வை சொன்னேன்.. மாதவன் கிட்ட மாட்டி விட்டுட்டாங்க! - இது ‘சன் மியூஸிக்’ கதிரவன் கலாய்!
ரித்திகா சிங்கிடம் லவ்வை சொன்னேன்.. மாதவன் கிட்ட மாட்டி விட்டுட்டாங்க! - இது ‘சன் மியூஸிக்’ கதிரவன் கலாய்!

ஜாலி பாய் , கேஷுவல் லுக், அட நம்மப் பக்கத்து வீட்டுப் பையன் சாயல் சன் மியூஸிக் கதிரவனுடன் ஒரு டீ டைம் சாட்!

ஆறு வருஷம் இருக்குமா.. சன் மியூஸிக்?

”ஹ்ம்ம் ஆமா… படிச்சது பி.டெக் (ஐடி) , இப்போ எம்.பி.ஏ படிச்சிட்டு இருக்கேன். அனேகமா முடிச்சுடுவேன்னு நினைக்கிறேன். (சிரிக்கிறார்) பொறுமையா படிச்சுட்டு இருக்கேன். அப்பா கொல்கட்டா மினிஸ்ட்ரியில டெபுட்டி கமிஷனரா இருக்காரு. அம்மா ஹையர் செகண்டரி காமர்ஸ்-அக்கவுண்ட்ஸ் டீச்சர். நான் இன்ஜினியரிங் படிச்சேன். அப்புறமா தான் பி.டெக் , எம்.பி.ஏ. இந்தச் சென்னை தான் படிச்சது வளர்ந்தது எல்லாம்!”

மீடியா ஆர்வம் எப்படி?

“ ஸ்கூல்லயே க்ளாஸ்ல படிக்கிறேனோ இல்லையோ, டான்ஸ், ஃபேன்ஸி ட்ரஸ் , கேம்ஸ் இப்படிதான் சுத்திக்கிட்டு இருப்பேன். காலேஜ்ல எனக்கு அட்டென்டன்ஸ் சரியா இல்ல. ஆனா என்னோட ஆர்வத்தை வெச்சு கருணை அடிப்படையில பரீட்சை எழுத விட்டாங்க. அப்படி வந்தது தான் மீடியா ஆர்வம். அந்த ஆர்வத்தோட சன் மியூசிக் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன்!”

நட்புக்காக நிகழ்ச்சி நல்லா ஞாபகம் இருக்கே எங்களுக்கு?

“ஆமா.. அதான் என்னோட முதல் ஷோ. நான் சன் மியூஸிக்ல செலக்ட் ஆனதே சுவராஸ்யமான ஸ்டோரி. ஆடிஷன்னு கூப்பிட்டாங்க. நான் பைக்ல போகும் போதே கண்ல தூசி விழுந்து கண்ணெல்லாம் சிவப்பு கலர்ல ஆகிடுச்சு. எங்க இப்படியே போனா முதல் நாள் தண்ணியடிச்சுட்டு கண் சிவந்து போயி வந்துருக்கானோனு நினைச்சிடுவாங்கன்னு சொல்லி கொஞ்சம் நேரம் உக்காந்து காபியெல்லாம் சாப்பிட்டு போனேன். பார்த்தா லேட். ஆடிஷன் முடிஞ்சிடுச்சேன்னு சொன்னாங்க. இல்லை வர சொன்னாங்கன்னு ஒரு பிட்டைப் போட்டேன். உள்ள விட்டுட்டாங்க. அப்புறம் திடீர்னு கூப்பிட்டு நீங்க செலக்ட் ஆகியிருக்கீங்கன்னு சொல்லி விஷ் பண்ணாங்க. அப்படி ஆரம்பிச்சது தான் சன் மியூஸிக். நட்புக்காக, டைம் பாஸ், இப்போ வாழ்த்துகள்!”

டிவி தான் எதிர்காலமா?

“ நிறைய பிளான் இருக்கு. முன்னாடி சீரியல் சான்ஸ் நிறைய வந்துச்சு. ஆனா சினிமாவ டார்கெட் பண்ணிட்டு இருக்கோமா, சீரியல்னு போயிட்டா எங்க நமக்கு சான்ஸ் வராமப் போயிடுமோன்னு விட்டுட்டேன்!”

அதெல்லாம் இருக்கட்டும்… இந்த நியூஸ், அரசியல், க்ரைம், சீரியஸ் இதெல்லாம் விருப்பம் இல்லையா?

“ உண்மைய சொல்லுங்க என் மூஞ்சிக்கு அது செட்டாகுமா. அரசியல்லாம் பெரிய விஷயம் அதப் பத்தி பேசவெல்லாம் கொஞ்சம் பக்குவம் இருக்கணும். கோபிநாத் அண்ணா பேசினா பார்ப்பாங்க நான் உக்கார்ந்து அரசியல் பேசினா சிரிச்சுடுவாங்க!”

இதென்ன போங்கா இருக்கு. அரசியலுக்கு வரணும்னா அனுபவம் வேணும், அதப்பத்தி பேசணும்னா கூட அனுபவம் வேணுமா.. படிச்சா போதாதா? அப்புறம் எப்படி இளைஞர்கள் வருவாங்க?

“அப்படி இல்ல எனக்கு தெரிஞ்ச விஷயம்னு ஒண்ணு இருக்கு. ஜாலியா பேசிகிட்டு இருந்துட்டு திடீர்னு அரசியல் களம், சூடு பிடிக்கும் விவாதம்னு சொன்னா , நீங்களே சேனல மாத்திடுவீங்க. நமக்கு எது வருமோ அதப் பண்ணுவோம். ஆனால் கண்டிப்பா இளைஞர்கள் அரசியலுக்கு வரணும். நானும் ட்ரை பண்றேன்!”

அப்போ கொஞ்சம் ஜாலியா பதில் சொல்லுங்க காதல், ரொமான்ஸ்..

“அது…அது..அது வந்து (கொஞ்சம் தடுமாறினார்) என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்னா ஒண்ணு இன்ஸிபிரேஷனா, இருக்கணும், அல்லது பாடமா இருக்கணும். காதல்தான் ஒரு மனுஷன அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகும். ஆனா சரியான வயசுல பக்குவத்தோட வரணும்!”

பாஸ் கேட்டதுக்கு இன்னும் பதில் சரியா வரல.. லவ் ப்ரபோஸல், வந்துருக்கா, இல்ல நீங்க ப்ரபோஸ் பண்ண அனுபவம் இருக்கா?!”

“ நானும் எஸ்கேப் ஆகப் பார்க்குறேன் முடியலையே. சரி சொல்றேன். காலேஜ் படிக்கறப்ப என் கிட்ட ஒரு நார்மல் மொபைல் இருந்துச்சு. ஒரு பொண்ணு என்னை ‘மௌனம் பேசியதே’ லைலா ஸ்டைல்ல லவ் பண்ணினாங்க. வெறும் ஃபோன் காலிங் தான். ‘நான் உங்கள அங்க பார்த்தேன். இந்த ஷர்ட் உங்களுக்கு நல்லா இருக்கு. இன்னிக்கு நீங்க அங்க போனீங்கதானே’ன்னு தினம் தினம் ஆச்சர்யம் குடுத்தாங்க. ஒரு பர்த்டேவுக்கு அவங்க ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் கால் பண்ணினாங்க. அப்புறம் ஒரு பெரிய கேக் வேற வந்துச்சு. அப்பதான் சொன்னாங்க.. நான் உங்கள லவ் பண்றேன்னு. நான் ஏற்கனவே லவ்வர் இருக்காங்கன்னு சொல்லி எஸ்கேப் ஆனேன். இப்ப வரைக்கும் எனக்கு அவங்க யாரு, அவங்க நிஜப்பேரு கூட தெரியாது. நான் பெண்கள் பக்கத்துல போகவே கொஞ்சம் பயப்படுவேன். சில கேர்ள்ஸ் பார்த்துட்டு ப்ரபோஸ் பண்ண நினைப்பேன்.. அப்புறம் இதெல்லாம் வயசுப்பான்னு எனக்கு நானே நினைச்சிட்டு விட்டுடுவேன். அப்பறம் லைஃப் பிஸி லவ்வுக்கு நேரமே இல்லாமப் போச்சு!”

சினிமாவுல எந்த ஹீரோயினுக்கு ப்ரபோஸ் பண்ணுவீங்க!

“ நான் தான் ப்ரபோஸ் பண்ணிட்டேனே. வணக்கம் சென்னை டைம்ல ப்ரியா ஆனந்த், அப்புறம் இப்போ 'இறுதிச்சுற்று' டைம்ல ரித்திகா சிங் கிட்ட லவ் சொன்னேன்”

“என்ன.. டிவி ஸ்க்ரீனைப் பாத்து சொன்னீங்களா?”

“ஹல்லோ.. யூ டியூப்ல வீடியோவே இருக்குங்க.. பேட்டி எடுக்கறப்ப நேர்லயே சொன்னேன். அவங்க ஓகே சொல்லிட்டு மாதவன் கிட்ட மாட்டி விட்டுட்டாங்க. அது சரி மேடி முன்னாடி நாமெல்லாம் போட்டியே போட முடியாதே. அப்புறம் மனச தேத்திக்கிட்டேன்!”

ஜாலி பாய்க்கு பாய் சொல்லி ஜூட் விட்டோம்!

- ஷாலினி நியூட்டன் -