Published:Updated:

சரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி! ’ஒருவன்’ க்ரிஷ் பேட்டி

Vikatan Correspondent
சரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி! ’ஒருவன்’ க்ரிஷ் பேட்டி
சரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி! ’ஒருவன்’ க்ரிஷ் பேட்டி

சீரியல் நடிகர், சினிமாவில் சிறப்புக் கதாபாத்திரங்கள் என க்ரிஷ் கொஞ்சம் பிஸி.. ஹாய் என்றால் ‘ஒருவன்’ படத்துல சரத்குமார் சாருக்கு பையனா நடிச்சது நான் தான் என முன்னாள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கிறார் க்ரிஷ் என்கிற கிருஷ்ணா...

அந்தச் சின்ன ரோஜா, சின்ன ரோஜா பாடலில் உருக்கம் காட்டியது நீங்களா?
“ அந்தப் படத்துல நடிச்சு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில விருது கூட வாங்கியிருக்கேன். நான் சினிமாவுக்குள்ள நுழையறதுக்கு முக்கியக் காரணம் 'ஒருவன்’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சார் தான். அவருக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். படிச்சது எம்.பி.ஏ. குழந்தை நட்சத்திரமா ‘ஒருவன்’ , ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படங்கள்ல நடிச்சிருக்கேன்.25 குரல்களுக்கும் மேல மிமிக்ரி பண்ணுவேன். டிவி தொடர்கள்ல  ’பைரவி’, ’தென்றல்’, ’அழகி’, ’வாணி ராணி’ ‘சலனம்’..( நீள்கிறது)
இறைவி’ படத்துல எப்படி வாய்ப்புக் கிடைச்சது?
“ ‘555’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’, ’ஜில்.ஜங்.ஜக்’ ’நட்பதிகாரம் 79’ படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆமா ஜில்.ஜங்.ஜக் படத்துல காரத் தூக்கிட்டுப் போய் வெடிக்க வைக்கிறதே நான் தான். அப்போ தான் நண்பர் ஒருத்தர் மூலமா கார்த்திக் சுப்புராஜ் சார் படத்துல ஒப்பந்தம் ஆனேன். என்னப் பார்த்த உடனே ஜில்.ஜங்.ஜக் பட காட்சி அவருக்கு ஞாபகம் வந்துடுச்சு. என்ன ஒரு ஞாபகம் பாருங்க அவருக்கு!”
குழந்தை நட்சத்திரமா கனமான பாத்திரத்துல நடிச்சிட்டு நடுவுல ஏன் ஆளையே காணோம்?
“ எல்லாம் குடும்ப சூழல் தான். அப்பா இறந்துட்டாரு. அம்மாவுக்கு நான் உதவி பண்ண வேண்டியிருந்துச்சு. அதனால சினிமாவுக்கெல்லாம் மூட்டைக் கட்டி வெச்சுட்டு படிப்புல ஈடுபாடு செலுத்தினேன். படிச்சேன். அவங்க இஷ்டப்பட்ட படி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அப்புறம் என்னோட ஆசைப்படியே சினிமாவுக்கு திரும்ப வந்துட்டேன்!”
குழந்தையா இருக்கும் போதே உங்களை நடிக்க விடல. இப்போ என்ன சொல்றாங்க?
“ என்ன சொல்லுவாங்க தினம் தினம் திட்டுதான். எல்லாத்துக்கும் மேல எனக்குக் கல்யாணம் வேற ஆகிடுச்சு. சும்மா விடுவாங்களா!”
உங்க மனைவி பற்றி..
“ ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்யறாங்க. எனக்கு ஒரு பையன் இருக்கான். அவங்க தான் உலகம். இருந்தாலும் கொஞ்சம் சினிமா ஆசையும் இருக்கு. நல்ல வாய்ப்புகளும் வருது. சின்னச் சின்ன திட்டுகளை வாங்கிக்கிட்டே என்னோட லட்சியத்த பூர்த்தி செய்துகிட்டு இருக்கேன்!”
அடுத்தடுத்து என்ன படங்கள்.. எதிர்கால திட்டம் என்ன?
” கௌதம் மேனன் சார் இயக்கத்துல தனுஷ் சார் கூட ‘ எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்துல ஒரு சின்ன கேரக்டர் நடிக்கிறேன். திரைப்படங்கள், டிவி இதுதான் எதிர்கால திட்டம். வில்லனா நடிக்கணும்ங்கறது தான் ஆசை!”
வில்லனா...? ஏன் இந்த கதாநாயகன் கனவெல்லாம் இல்லையா?
“  எனக்கு வில்லன் பாத்திரம்னா அவ்வளவு இஷ்டம். ஒரு படத்துலயாவது பயங்கர வில்லனா நடிக்கணும். ஹீரோ வாய்ப்பு வந்தா நிச்சயம் நடிப்பேன்!”
சின்னத்திரையில நடிச்சா, வெள்ளித்திரை வாய்ப்புக் குறையும்னு ஒரு கருத்து இருக்கே?
“ இத நான் நம்பலை. உண்மைய சொன்னா ஒரு இயக்குநருக்கு தன்னோட படத்துல இந்த பாத்திரத்துக்கு ஒரு நடிகர் வேணும்னா கண்டிப்பா சின்னத்திரை நடிகரா இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகரா இருந்தாலும் சரி அந்த வாய்ப்பு நமக்கு நிச்சயமா கிடைக்கும். சின்னத்திரை நடிகர் , வெள்ளித்திரை நடிகர்னு எந்த வித்யாசமும் இல்லை. எல்லாருமே நடிகர் தான். அவங்களோட திறமைய பொறுத்து தான் வாய்ப்புகள் அமையறதும், இல்லாமப் போறதும்!”
சரத்குமார் 100 இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்காரே! 
 “ நான் ’ஒருவன்’ படம் நடிச்சு சில வருடங்களுக்கு அப்புறம்  அவர ஒரு தடவ சந்திச்சேன். அப்போவே உன்னைய எங்கையோ பார்த்துருக்கேன்னு சொன்னாரு. அப்போதான் நான் உங்க பையனா நடிச்சேன்னு சொன்னேன். கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இப்ப சமீபத்துல என்னை ஒரு நடிகரா பார்த்தப்போ அடடே நல்ல மாற்றம்’னு பாராட்டினாரு. கூடவே ராதிகா மேடம் கிட்ட பேசு ,நடிக்க வாய்ப்புகள் இருந்தா கூப்பிடுவாங்கனு சொல்லி ஊக்கம் கொடுத்தார். உடனே ’வாணி ராணி’ சீரியல்ல ஒரு வாய்ப்புக் கொடுத்தாங்க. இப்ப மேடமோட இன்னொரு புராஜெக்ட்ல வேலை செய்துட்டு இருக்கேன். ராதிகா மேடமுக்கு நன்றி சொல்லணும். சார்  நடிக்க கூப்பிட்டாலே போவேன். நல்ல விஷயத்துக்கு அழைப்புக் குடுத்துருக்காரு, நிச்சயம் நான் ரெடி!”
- ஷாலினி நியூட்டன்