Published:Updated:

பிரகாஷ்ராஜ் இமேஜூக்காக 36 சீரியல்களை தவிர்த்தேன் - ராஜ் கமல்

பிரகாஷ்ராஜ் இமேஜூக்காக 36 சீரியல்களை தவிர்த்தேன் - ராஜ் கமல்
பிரகாஷ்ராஜ் இமேஜூக்காக 36 சீரியல்களை தவிர்த்தேன் - ராஜ் கமல்

பிரகாஷ்ராஜ் இமேஜூக்காக 36 சீரியல்களை தவிர்த்தேன் - ராஜ் கமல்

சின்னத்திரை நட்சத்திரங்களின் மெகா கனவு சினிமாதான். அதிலும் ராஜ்கமல் கனவு கொஞ்சம் வித்தியாசமானது. சினிமாவில், பிரகாஷ் ராஜ் போல வில்லன் ரோலில் அதகளப்படுத்த விரும்பும் அவருடன்  ஒரு கலகல சந்திப்பு நமது சினிமா விகடன் வாசகர்களுக்காக.
 
ராஜ் டி.வியில் ஆறு வருடங்களுக்கு முன்பு, 'ரெக்கை கட்டிய மனசு' சீரியலில் லதா ராவ் வில்லியாகவும், நான் ஹீரோவாகவும் நடித்திருந்தோம். காதலாகி, கசிந்துருவி ஆரம்பித்தது எங்களுடைய மணவாழ்க்கை. இப்போது எங்களோட ஒரே குறிக்கோள்... சினிமா சினிமா சினிமா மட்டும்தான்...'' என்று அழுத்தமாகவும், வேகமாகவும் பேச ஆரம்பிக்கிறார் ராஜ் கமல்.

அடுத்தடுத்து ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறீர்களாமே...?
 
ஆமாம். நான் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் சண்டிகுதிரை. இந்த படம் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அடுத்தப்படம், மேல்நாட்டு மருமகன், மூன்றாவது படம் 'இன்னும் கொஞ்ச நேரம்' இந்த மூன்று படங்கல்லயும் ஹீரோவா நடிக்கிறேன். படங்கல்ல ஹீரோ ரோல் பண்ணுவேன்னு என்னிக்கும் அடம்பிடிச்சதே இல்ல. எனக்கு என்னை தனித்துவமா காட்டுற மாதிரியான ரோல் இருந்தால் போதும்.

உங்களுக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்ததாமே..?
 
சீரியலில் ஹீரோ ரோலுக்கு கடந்த ஆறு வருடங்களா இப்போ வரைக்கும் வாய்ப்பு வந்திட்டுத்தான் இருக்கு. என்னைப் பொருத்தவரை ஒரு சீரியல்ல ஹீரோவா கமிட் ஆகிட்டா அதுதான் மக்கள் மனதில் பதியும். நம்மல வெள்ளித்திரையிலயும் சீரியல்ல நடிச்ச ஞாபகத்தைக்  கொண்டு வந்துடும். அதனால, திருச்சியில இருந்து சென்னைக்கு வரும் போது என்னோட தேவைகளுக்காக சீரியல்ல முக்கியத்துவம் இல்லாத மாதிரியான ரோல்களை நானே கேட்டு வாங்கிப் பண்ணேன். அந்தப்  பணம் எனக்கு வீட்டு வாடகை தரவும், ஃபோன் பில்லுக்கும் பயன்பட்டது. மற்றபடி அதன் மூலமா சம்பாதிக்கணும்னு நினைச்சிருந்தா எவ்வளவோ சீரியல்ல நல்ல ரோல்லப் பண்ணியிருப்பேன். 
 
அப்படி எத்தனை சீரியல்களை தவற விட்டீங்க?
 
சன் டி.வி யில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' சீரியலில் அர்ஜூனன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக கேட்டிருந்தாங்க. நல்ல வெயிட்டான ரோலா இருந்தும் நான் அவங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு தவிர்த்துட்டேன். மகாபாரத வாய்ப்பாக மொத்தம் இதுவரை 36 சீரியல்களை தவறவிட்டிருக்கிறேன். எனக்கு விருப்பம் இல்லை என்பதை நேரடியாகச் சொல்லாமல்...தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆபீஸூக்கு சென்று, 'எனக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது கனவு அதனாலதான் என் சீரியல் வாய்ப்புகளைத்  தள்ளி வைக்கிறேன். ஒருவேளை  சினிமாவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்கள் சீரியலில் நடிப்பேன். தவறாக நினைக்கவேண்டாம்' என சொல்லிவிட்டுத்தான் தவிர்த்திருக்கிறேன்.

நீங்கள் சினிமாவில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான முறையில் தொந்தரவு கொடுக்கிறீர்களாமே...?
 
அதுக்குள்ள உங்களுக்கு நியூஸ் வந்துடுச்சா (சிரிக்கிறார்). ஆமாங்க.. ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை மாலை சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொருத்தருடைய வாட்ஸ் ஆப்பிற்கும், என்னுடைய அன்றைய ஃபோட்டோவை செல்ஃபியாக எடுத்து 'ஹேப்பி வீக் எண்ட்' என அனுப்பி வைப்பேன். இதன் மூலம் என்னுடைய தற்போதை தோற்றமும் தெரியும்.. அதேபோல என்னை எப்படியாவது வாரம் ஒரு முறையாவது ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். எப்படியும் என்னை திட்ட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒரு சில வாரங்கள் தவறி விட்டால்...'ஏன் ராஜ் உனக்கு என்ன ஆச்சு..?' ஃபோட்டோ வரலயேனுதான் ஃபோன் பண்ணினேன்' என சிலர் விசாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

உங்கள் மனைவி லதா ராவ் பற்றி?
 
அவங்களும் திருமதி செல்வம் சீரியலுக்குப் பிறகு வேறு எந்த சீரியல்லயும் நடிக்கல. அவர் தற்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் 'முடிஞ்சா இவனைப் பிடி' படத்தில் நித்தியாமேனனுக்கு அண்ணியாக நடிக்கிறார்.  இந்த படத்தில் நான் ஈ சுதீப் ஹீரோவாக நடிக்கிறார்.  அடுத்து, 'கடிகார மனிதர்கள்' என்கிற படத்தில் கிஷோருக்கு மனைவியாக நடிக்கிறார். இரண்டு பேருமே முடிவெடுத்துத்தான் சினிமா நோக்கி பயணம் செய்துட்டு இருக்கிறோம். சீரியலை விட்டப்பிறகு சில ஈவெண்ட்ஸ் செய்து வீட்டுக்கான வருவாயைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அதையும் விட்டாச்சு. 

அப்போ உங்களுக்கு ஹீரோ ரோல்தான் டார்கெட்டா?
 
அப்படி இல்லை.. என்னோட டார்கெட் பிரகாஷ் ராஜ் சார்தான். அவரோட இடத்தைப் பிடிக்கணும. அவரைப் போன்று வில்லன் இமேஜ் வேண்டும் என்பதற்கான பயணம் தான் இது. அவரை எனக்கு பர்சனாகவும், சினிமா சார்ந்தும் ரொம்பப் பிடிக்கும். அவரை போன்று வெயிட்டான கேரக்டர் ரோல் பண்ணனும் அதுதான் என்னோட ஆசை, கனவு.அந்த நோக்கத்துக்காகத் தான் 36 சீரியல்களைத் தவிர்த்தேன். ஹீரோ மட்டுமே என்னுடைய டார்கெட் அல்ல. என்னை முழுநேரமாக கேமரா முன்னாடி நிறுத்தப் பிடிக்கும். அதற்காக தினமும் வீட்டில் நடித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். முயற்சியை கடந்த எட்டு வருடமாகக்  கைவிடாமல் இருக்கிறேன்.
 
-வே.கிருஷ்ணவேணி 
 
அடுத்த கட்டுரைக்கு