Published:Updated:

எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான்! - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்!

எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான்! - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்!
எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான்! - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்!

எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை இதுதான்! - 'தென்றல்' ஸ்ருதி ராஜ் கலாய்!

ன் டி.வி யில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியலின் ஸ்ருதியை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஸ்ருதிக்கு இளைஞர்கள் மத்தியில் இன்னும் அதிக அளவு வரவேற்பைப் பெற்றுத் தந்தது விஜய் டி.வியின் 'ஆபீஸ்' சீரியல். தற்போது ஜி தமிழ் டி.வியில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களுடைய முதல் சினிமா அனுபவம்?

நான் ஏழு வயசுல சினிமாவுக்குள்ள வந்தேன். அதுக்கப்புறம் சீரியல்ல களம் இறங்க ஆரம்பிச்சுட்டேன். மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும்,  மலையாள, கன்னட படங்களிலும் நடிச்சிருக்கேன். சீரியலுக்கு வருவதற்கு  முன்னாடி மலையாள மனோரமா இதழின் அட்டைப்படத்துல வந்தேன். அதுதான் என்னோட முதல் அறிமுகம்.

சீரியல் என்ட்ரி?

சன் டி.வி 'தென்றல்' சீரியல்தான் என்னோட முதல் சீரியல் என்ட்ரி. அதுக்கப்புறம் 'ஆபீஸ்'. இப்போ 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்', 'அபூர்வராகங்கள் ' என செம பிஸியா இருக்கேன். ஒவ்வொரு சீரியல்லயும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைச்சுட்டு இருக்கு. மகிழ்ச்சியா  இருக்கேன்.

நீங்கள் படங்கள் மற்றும் சீரியலில் நடிக்கும் போது உங்கள் ஊரில் வரவேற்பு எப்படி இருந்தது?

என் சொந்த ஊர் கேரளா, குருவாயூர். நான் ஸ்கூல் படிக்கும்போதே அம்மாவுக்கு என்னை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஊரில் எதாவது சொல்வார்களோ என்கிற பயம் எங்கள் குடும்பத்தினருக்கு இருந்தது. இன்னும் சொல்லபோனால் எங்கள் ஊரில் யாருமே சினிமா பக்கமோ டி.வி பக்கமோ போனது கிடையாது. அப்படியிருக்கும்போது நான் சினிமாவில் நடித்துவிட்டு ஊருக்கு திரும்பிப் போகும்போது எல்லோரும் எங்கள விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீதானம்மா அந்த சினிமாவுல நடிச்சிருந்தனு கேட்கும்போது, அப்படியே பறக்கிற மாதிரி இருந்தது. அந்த சம்பவத்த நினைக்கும்போது இப்பவும் ஜிவ்வுனு இருக்கும்.

உங்களுக்குப் பிடித்த பிரபலங்கள்?

எனக்கு எவர்கிரீன் ஹீரோ ஷாருக்கான் ஜி.  அப்புறம் கஜோல். கஜோலுக்கு இயற்கையாகவே நடிப்பு இருக்கும்னு நினைப்பேன். அந்த அளவுக்கு அவங்களுக்கு நடிக்கும் திறமை இருக்கும். அடுத்தது நடிக்கவே தெரியாத என்னோட அம்மா, அப்பா.

நடிக்க வந்த புதுசுல திட்டு வாங்கிருக்கீங்களா?

பெரிசா எதுவும் நினைவில்ல. ஆனா, முதன் முதல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ நடிக்கத்தெரியலனு திட்டியிருக்காங்க. அப்போவெல்லாம் என்ன சொன்னாலும் விளையாட்டுத்தனமா இருப்பேன். திட்டித்திட்டி வேலை வாங்கிட்டு இருப்பாங்க. இப்போ அப்படி பண்ணியிருந்தா கண்டிப்பா  அழுதிருப்பேனோ என்னமோ!

உங்களோட பொழுதுபோக்கு?

எனக்கு பாட்டுக் கேட்கிறது ரொம்ப பிடிக்கும். அது எந்த பாடகர் பாடியிருந்தாலும். விண்டோ ஷாப்பிங் செய்யறது ரொம்பப் பிடிக்கும். காலைல ஒரு மால் உள்ளே கொண்டு போய் விட்டுட்டு ஈவினிங் வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொன்னா.. சந்தோஷமா ஓ.கே சொல்லிடுவேன்.  அந்த அளவுக்கு ஷாப்பிங்  பண்றது பிடிக்கும். பர்ஃப்யூம், வாட்ச் கலெக்‌ஷன் நிறைய  வச்சிருக்கேன். 

நீங்க எதுக்கு சரண்டர்?

என்னோட வீட்ல, என் நண்பர்கள்கிட்டன்னு யார்கிட்ட கேட்டாலும் 'டக்'கென சொல்ற பதில் சாக்லெட். என்னை மாதிரி ஒரு சாக்லெட் பைத்தியத்தை உங்களால பார்க்கவே முடியாது. என்னோட அம்மா திட்டிட்டே இருப்பாங்க.  ஆனா, நான் அவங்களுக்கு தெரியாம ஒளிச்சு வெச்சு சாப்பிட்டுட்டு இருப்பேன். அவ்வ்வ்வ்ளோ பிடிக்கும். 

உங்களுக்கு அழகா பொருந்தற உடை, ‘குர்த்தி’ன்னு பல பேர் சொல்றாங்களே?

எனக்கும் அதுதான் வசதியா இருக்கும். இன்னும் சொல்லப்போனா எனக்கு சேலை கட்டத்தெரியாது. அப்படி கட்ட ஆரம்பிச்சாலும் ரொம்ப நேரம் எடுக்கும். 

நீங்க நடிக்கணும்  நினைத்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்?

'தென்றல்' சீரியல் டைரக்டர் குமரன் சார் என்னை அந்த சீரியல் முழுக்க அமைதியான பொண்ணா, பாசிட்டிவான கதாபாத்திரமா அறிமுகப்படுத்தியதால மக்கள் மனசுல நான் அப்படியே பதிஞ்சுட்டேன். ஆனா எனக்கு 'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவி மாதிரியான பைத்தியமா நடிக்கணும்ன்னு ஆசை. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இதைச் சொன்னேன். அதுக்கு ‘நீ அல்ரெடி அப்படித்தானே இருக்கே’ங்கறாங்க.

 
உங்களோட டயட்?

என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது. எனக்கு இங்கிலீஷ்லயே பிடிக்காத வார்த்தை 'டயட்' 

எல்லா பிரபலங்கள்கிட்டயும் கேட்கிறதுதான்.... இந்தத் துறைக்கு நீங்க வரலைனா என்னவாகியிருப்பீங்க?

என் பதிலும் எல்லாரும் சொல்றதுதான். டாக்டர் ஆகணும்கிறது என்னோட சின்ன வயசு ஆசை. ஆனா அது நிறைவேறல.. அதுக்கப்புறம அந்த ஆசையை விட்டுட்டு இப்போ வக்கீலாகியிருக்கேன்... புரியலயா...?'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியல்ல எனக்கு வக்கீல் ரோல். அதைத்தான் அப்படி சொன்னேன். 

-வே.கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு