Published:Updated:

’காலேஜ்ல என் பெயர் 'பழம்'ங்க’ - கலகலக்கும் தேவதர்ஷினி!

Vikatan Correspondent
’காலேஜ்ல என் பெயர் 'பழம்'ங்க’ - கலகலக்கும் தேவதர்ஷினி!
’காலேஜ்ல என் பெயர் 'பழம்'ங்க’ - கலகலக்கும் தேவதர்ஷினி!
’காலேஜ்ல என் பெயர் 'பழம்'ங்க’ - கலகலக்கும் தேவதர்ஷினி!
சன் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டாவில் மதுரை முத்து மற்றும் தேவதர்ஷினி இருவரும் கலக்கும் கலாட்டா செம்ம மாஸ்.. ஆனால் தேவ தர்ஷினியைப் பொறுத்தவரை, அவர் படித்த படிப்புக்கும் இப்போ இருக்கிற ஃபீல்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. 
''நான் நினைச்சப்படியே  நான் ஸ்கூல் பர்ஸ்ட், காலேஜ்லயும் பைனல் இயர்ல காலேஜ் பர்ஸ்ட். இன்னிக்கு வரைக்கும் என்னோட டீச்சர்ஸ் ரொம்ப ஆச்சர்யமா கேட்பாங்க. இப்படி படிக்கிறப்பொண்ணு எப்படி இந்த பீல்டுக்கு வந்த-ன்னு' கலகலவென பேச்சைத் தொடங்கிய  தேவதர்ஷினி பகிர்ந்து கொண்டதிலிருந்து...
அப்பா காலேஜ் பிரின்சிபல், அம்மா ஸ்கூல் பிரின்சிபல், அக்கா கோல்டு மெடலிஸ்ட் என ஒட்டுமொத்தமா படிப்புக் குடும்பம் எங்களோடது. அதேபோலதான் நானும் சரியான படிப்ஸ்.. நாங்க எத்திராஜ் காலேஜ்ல 8 பேர் கொண்ட டீம் இருப்போம். அதுல நான் ஒரு பழம்னு சொல்லலாம். 94 -ல நான் பள்ளிப்படிப்பை முடிச்சேன். 97 -98 கல்லூரிப் படிப்பை  முடிச்சேன். எனக்கு அப்போ அக்கவுண்டட் ரொம்ப புடிக்கும். பயங்கர போட்டி போட்டுப் படிப்போம். ஏன்னா எங்கள எல்லாருக்கும் மத்தியில கைத்தட்டி பாராட்டுவாங்களே அதுக்காகத்தான். கணக்கு, அக்கவுண்ட் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால எனக்கு சார்ட்டட் அக்கவுண்டன்டா ஆகணும்னு ரொம்ப ஆசை.  +2 முடிச்சவுடனே நேரடியா  அக்கவுன்ட்டன்சி 4 வருஷம் படிக்கலாம். ஆனா, கல்லூரி அனுபவம் வேணும்ங்கறதுக்காக எத்திராஜ் காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். அங்கயும் டே காலேஜ்லதான் சேர்ந்தேன். 
பொண்ணுங்க காலேஜ கட் அடிப்பாங்க. ஆனா எனக்கு அதுல பயம். கூடவே, படிக்கணும், படிக்கணும் இதுதான் என்னுடைய யோசனையாகவும்  இருந்தது.. இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னென்னா, எங்க காலேஜ் டிராமாவுல கூட   நான் கலந்ததுகிட்டது கிடையாது. காலேஜ் கல்ச்சுரல்ஸ்லதான் கலந்திருக்கேன். திடீர்னு ஒரு வாய்ப்பா 'மர்மதேசம்' சீரியல்ல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. வீட்ல இருக்கறவங்கக்கிட்ட பாக்கெட் மணி கேட்டு நிற்க வேண்டாம்னு தான் இதை ஒரு ஹாபியா பண்ண ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து நிறைய ஆஃபர் வந்தது. அதுக்கப்புறம் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில, கரஸ்பாண்டன்ஸ்ல எம்.காம் சேர்ந்து படிச்சேன். மர்மதேசம் சீரியல் டைரக்டர் நாகா நிறைய கத்துக்கொடுத்தார். அதுக்கப்புறம்தான் முழுக்க முழுக்க நடிப்புத்தொழிலை கையில எடுக்க ஆரம்பிச்சேன். தமிழ்ப்  படங்கள் பலவற்றிலும் வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
’காலேஜ்ல என் பெயர் 'பழம்'ங்க’ - கலகலக்கும் தேவதர்ஷினி!
சிலர் நடிப்பு என்பது  ரொம்ப ஈஸினு நினைச்சு ஜஸ்ட் லைக் தட் சொல்லுவாங்க. அது அவ்வளவு ஈஸி இல்ல.. நேரமும் அதிர்ஷ்டமும் மிக முக்கியம். இதுல இருக்கிற பாதுகாப்பில்லாத ஃபீல், வேற எந்த தொழில்லயும் இல்லைன்னு சொல்லலாம். எவ்வளவு உயரத்துக்குக் கொண்டு போனாங்களோ அப்படி கீழ தள்ளிவிட்டுடுவாங்க.. இப்போ நான் எம்.எஸ்.ஸி சைக்காலஜி படிப்பை அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சல்வழியில படிச்சிட்டு இருக்கேன். அதனால எந்தத்  தொழிலையும் நேசிச்சு பண்ண ஆரம்பிச்சா நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதுல சந்தேகமே இல்ல”
-வே. கிருஷ்ணவேணி